ஒருநாள் போட்டியில் 500 ரன்களை அடிப்பதே இங்கிலாந்தின் தற்போதைய இலக்கு - மார்க் வுட்

Mark wood
Mark wood

இங்கிலாந்து ஒருநாள் போட்டியில் 500 ரன்களை அடிக்கும் என இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் தெரிவித்துள்ளார். இதனை ஒரு வாதமாவும் கூறியுள்ளார். சமீபத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி முக்கால சாதனைகளை முறியடித்தும், தற்காலங்களில் புதிய சாதனைகளை படைத்து கொண்டும் உள்ளனர். இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட்டில் 444 மற்றும் 484 ஆகிய இலக்குகளை கடந்த காலத்தில் அடித்து சாதனை செய்துள்ளது. இந்த இரு இலக்கினையும் இங்கிலாந்து டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் தான் விளாசியுள்ளது. இங்கிலாந்து அணி ஜீன் 17 அன்று பாகிஸ்தானிற்கு எதிராக நான்காவது ஒருநாள் போட்டியில் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் தான் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணி இந்த தொடரில் கடைசியாக விளையாடிய இரு போட்டிகளிலும் 350+ ரன்களை விளாசியுள்ளது. முதல் போட்டி மழையினால் ரத்தானது. இரண்டாவது போட்டியில் 373 ரன்கள் இங்கிலாந்து அணியால் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 3வது போட்டியில் 358 ரன்களை 5 ஓவர்கள் மீதமிருந்த நிலையிலேயே இங்கிலாந்து சேஸ் செய்து அசத்தியுள்ளது. 2015 உலகக் கோப்பைக்கு பிறகு இங்கிலாந்து விளையாடிய அனைத்து போட்டிகளிலும் 36 முறை 300+ ரன்களை அடித்துள்ளது. 2015ற்கு முன் இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் மொத்தமாகவே 34 முறை மட்டுமே 300+ ரன்கள் அடிக்கப்பட்டிருந்தது.

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் "BBC SPORTS" என்ற பத்திரிகையில் தெரிவித்தவதாவது:

ஒருநாள் கிரிக்கெட்டில் 500 ரன்கள் விளாசுவதே இங்கிலாந்தின் தற்போதைய இலக்கு. 350 ரன்களை நாங்கள் எளிதாக அடைந்து விடுவோம். எனவே 400 என்பது எங்களுக்கு அவ்வளவு பெரிய இலக்கு கிடையாது. எதிரணி வீரர்கள் எவ்வளவு ரன்களை எங்களுக்கு இலக்காக நிர்ணயித்திருந்தாலும் அதனை நாங்கள் எளிதாக அடைந்து விடுவோம்.

தற்போது உள்ளுர் கிரிக்கெட் அணியான "சர்ரே" ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த அணி என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளது. 2007ஆம் ஆண்டு ஓவலில் நடந்த லிஸ்ட்- ஏ கிரிக்கெட்டில் க்ளோஸாட்ஸைர் அணிக்கு எதிரான போட்டியில் சர்ரே அணி 4 விக்கெட்டுகளை இழந்து 496 ரன்களை விளாசியது.

ட்ரென்ட் பிரிட்ஜ்-ல் நடைபெறவுள்ள பாகிஸ்தானிற்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வென்று ஒரு போட்டி மீதமுள்ள நிலையிலே தொடரை கைப்பற்றும் நோக்கில் உள்ளது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் இல்லாமல் இங்கிலாந்து அணி களமிறங்க உள்ளது. பாகிஸ்தானிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் தாமதமாக ஓவர்களை வீசியதால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இயான் மோர்கனுக்கு 40 சதவீத அபராதத்தையும் மற்றும் ஒரு போட்டியில் விளையாடவும் தடை செய்துள்ளது. இதனால் 4வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து கேப்டனாக ஜாஸ் பட்லர் பொறுப்பேற்றார்.

உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளுள் இங்கிலாந்து அணியும் ஒன்றாக உள்ளது. பாகிஸ்தானிற்கு எதிரான ஒருநாள் தொடரை இங்கிலாந்து வெல்லுமெனின் அந்த அணிக்கு உலகக் கோப்பைக்கு முன் கூடுதல் நம்பிக்கையை அளிக்கும். உலகின் நம்பர் ஒன் ஓடிஐ அணியான இங்கிலாந்து உலகக் கோப்பையில் தனது முதல் போட்டியில் மே 30 அன்று தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

Quick Links