ஐபிஎல் 2019: விரேந்தர் சேவாக்கின் கனவு XI

Virendar sehwag
Virendar sehwag

தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 2019 ஐபிஎல் தொடரில் தனது கனவு அணியை அறிவித்தார் விரேந்தர் சேவாக். இவ்வருட ஐபிஎல் சீசனில் அதிக ரன்களை விளாசியோர் பட்டியலில் முதலிடத்தை வகிக்கும் டேவிட் வார்னரை, சேவாக் தனது அணியின் கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளார். ஷீகார் தவான் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோரை தனது அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தேர்வு செய்துள்ளார். ஷீகார் தவான் இவ்வருட ஐபிஎல் சீசனில் 16 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 521 ரன்களை குவித்து டெல்லி அணியின் சார்பில் அதிக ரன்களை எடுத்தோர் பட்டியலில் முதலிடத்தை வகிக்கிறார்.

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோவ் இவ்வருட ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அறிமுகமாகி 10 போட்டிகளில் பங்கேற்று 445 ரன்களை எடுத்துள்ளார். கே.எல்.ராகுலையும் தனது அணியில் தேர்வு செய்துள்ளார் சேவாக். கே.எல்.ராகுலுக்கு இந்த ஐபிஎல் சீசனும் சிறப்பாகவே அமைந்துள்ளது. 14 போட்டிகளில் 592 ரன்களை குவித்துள்ளார். அத்துடன் இவ்வருட ஐபிஎல் சீசனில் அதிக ரன்களை எடுத்தோர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் சேவாக் தனது அணியில் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்-ஐ தனது அணியில் சேர்த்துள்ளார். டெல்லி பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தனது டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஐபிஎல் சீசனில் 16 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 488 ரன்களை குவித்துள்ளார்.

டேவிட் வார்னரை, விரேந்தர் சேவாக் கேப்டனாக தனது அணிக்கு நியமித்துள்ளார். 2019 ஐபிஎல் சீசனின் டாப் ரன் ஸ்கோரர் டேவிட் வார்னர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 12 போட்டிகளில் 692 ரன்களை குவித்துள்ளார். இந்தாண்டு ஐபிஎல் சீசனில் அதிரடியாக விளையாடிய ஆன்ரிவ் ரஸல் சேவாக் அணியில் இடம்பிடித்துள்ளார். அதிரடி ஆல்-ரவுண்டர் ஆன்ரிவ் ரஸல் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக 13 போட்டிகளில் பங்கேற்று 510 ரன்களை எடுத்துள்ளார். அத்துடன் இந்த ஐபிஎல் சீசனில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கொல்கத்தா அணியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் ரஸல்.

இவ்வருட ஐபிஎல் தொடரில் 382 ரன்களை குவித்த இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் சேவாக் அணியில் இடம்பெற்றுள்ளார். அத்துடன் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 15 போட்டிகளில் பங்கேற்று 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக பங்கேற்று 20 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயஸ் கோபாலிற்கும் சேவாக் அணியில் இடம் கிடைத்துள்ளது. இவ்வருட ஐபிஎல் தொடரின் டாப் விக்கெட் டேக்கர் காகிஸோ ரபாடா-வை சேவாக் தன் அணியில் இனைத்துள்ளார். இவர் 12 போட்டிகளில் பங்கேற்று 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 12 போட்டிகளில் பங்கேற்று 12 விக்கெட்டுகளை வீழ்த்திய ராகுல் சகார் மற்றும் 17 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜாஸ்பிரிட் பூம்ரா ஆகியோரை சேவாக் தனது அணியில் தேர்வு செய்துள்ளார். இதனை கிரிக்பஜ் இனைய தளத்தில் சேவாக் தெரிவித்தார்.

விரேந்தர் சேவாக் கனவு XI:

ஷீகார் தவான், டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஆன்ரிவ் ரஸல், ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயஸ் கோபால், ராகுல் சகார், ஜாஸ்பிரிட் பூம்ரா, காகிஸோ ரபாடா.

Quick Links