ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் சிறந்த 10 இன்னிங்ஸ்கள்

South Africa v India - ICC Cricket World Cup 2019
South Africa v India - ICC Cricket World Cup 2019

#9 87 பந்துகளில் 66 ரன்கள் vs ஆஸ்திரேலியா, சிட்னி, 2008

Australia v India - Commonwealth Bank Series
Australia v India - Commonwealth Bank Series

இப்போட்டியில் இந்தியாவிற்கு நிர்ணயிக்கப்பட்ட 240 இலக்கை சேஸ் செய்து சாதனை படைக்கும் நோக்கில் இந்தியா இருந்தது. காமன்வெல்த் பேங்க் தொடரில் இந்திய அணியின் சிறந்த முதல் இறுதிப் போட்டி இதுவாகும். 2007 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெளியேறியது. இப்போட்டியில் வென்றே அதனை மறக்க இந்திய அணிக்கு ஒரு தகுந்த வாய்ப்பு கிடைத்தது.

இந்திய அணி 87 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த போது ரோகித் சர்மா, சச்சின் டெண்டுல்கருடன் கை கோர்த்தார். இதற்கு மேல் ஒரு விக்கெட் விழுந்தால் கூட இந்தியாவின் நிலை கவலைக்கிடமாக இருந்திருக்கும். இரு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மேட்ச் வின்னிங் பார்டனர் ஷீப்பான 123 ரன்களை குவித்தனர்.

ரோகித் சர்மாவின் அனல் பறக்கும் அதிரடி பேட்டிங் இப்போட்டியில் சிறப்பாகவே வெளிபட்டது. இவரது பயமறியா பேட்டிங் மூலம் 6 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் குவிக்கப்பட்டது. இதுவே இந்திய வெற்றிக்கு காரணமாகவும் இருந்தது. இந்த இன்னிங்ஸ் தான் ரோகித் சர்மாவின் தற்போதைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைந்தது.

அடுத்தப் போட்டியில் வென்று காமன்வெல்த் பேங்க் தொடரை கைப்பற்றியது இந்தியா. இந்த தொடரில் ரோகித் சர்மாவின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. மொத்தமாக 33 சராசரியுடன் 235 ரன்களை ரோகித் இந்த தொடரில் குவித்தார்.


#8 163 பந்துகளில் 171* ரன்கள் vs ஆஸ்திரேலியா, பெர்த், 2016

Australia v India - ODI: Game 1
Australia v India - ODI: Game 1

ஒவ்வொரு பேட்ஸ்மேன்களின் சிறந்த ஆட்டத்திறனும் ஒரு குறிப்பிட்ட காலங்களில் சிறப்பான நிலையில் தொடங்கியிருக்கும். ரோகித் சர்மாவிற்கு 2016 ஆஸ்திரேலிய தொடரில் அவரது சிறப்பான ஆட்டத்திறன் வெளிபட்டது. இந்த தொடரில் 5 போட்டிகளில் பங்கேற்று 110 சராசரியுடன் 441 ரன்களை குவித்தார் ரோகித். இந்தத் தொடரில் இவரை கட்டுப்படுத்த ஆஸ்திரேலிய பௌலர்கள் தடுமாறினர்‌. அதன் விளைவு 2 சதங்கள் மற்றும் 99ஐ விளாசினார்.

சற்று ஈரப்பதமான ஆடுகளத்தில் ரோகித் சர்மாவின் ஆட்டம் சிறப்பாக இருந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். இது போன்ற ஆடுகளத்தில் ஆஸ்திரேலிய தொடரில் 13 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களை ரோகித் விளாசினார்.

இப்போட்டியில் ரோகித் சர்மா இரட்டை சதம் விளாசததுதான் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதற்கு காரணம் WACA மைதானத்தில் பேட்டிங் செய்வது சுலபமான காரியம் அல்ல. காரணம் பந்து சரியான திசையில் பவுண்ஸாகி செல்லும். எனவே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டுமெனில் இம்மைதானத்தில் பொறுமையை கையாள வேண்டும்.

Quick Links