தற்போதைய காலகட்டத்தில் அதிக மக்களால் விரும்பி பார்க்கப்படும் விளையாட்டாக கிரிக்கெட் மாறியுள்ளது. கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்ப்பட்ட நாடுகள் கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றனர். இதுவரை பல வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்றிருந்தாலும் விராத்கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் போன்ற அனைத்து வீரர்களும் எல்லா போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுவதில்லை. அதிலும் ஒரு சில வீரர்கள் ஒரே ஒரு போட்டியில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து விடுகின்றனர். அப்படிப்பட்ட வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#5) ஸ்டீவன் ஓ கபே
ஸ்டுவன் ஓ கபே வீசிய 12/70 என்ற சிறப்பான பந்து வீச்சின் மூலம் ஆஸ்திரேலிய அணி 2017-ல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வென்றது. இவரின் இந்த பந்து வீச்சு இன்றளவும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பந்துவீச்சாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அந்த ஒரே தொடரில் மொத்தம் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் இவர். ஆனால் அதன்பின் சில காரணங்களால் இவர் மீண்டும் அணியில் இடம்பிடிக்கவில்லை.
இருந்தாலும் இவர் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் காயமான ஹேஸல்வுட்-காகு பதிலாக மீணாடும் அணியில் இடம்பிடித்தார். இவரின் அந்த ஓரே போட்டி தான் ரசிகர்கள் மனதில் இன்னும் இவரை நீங்கா இடம்பிடிக்க வைத்துள்ளது.
#4) கருண் நாயர்
இந்திய ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த வீரர் தான் கருண் நாயர். இவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னை மைதானத்தில் குவித்த 303* ரன்கள் இந்திய ரசிகர்கள் யாராலும் மறக்க முடியாது. முச்சதம் அடித்த இரண்டே இந்திய வீரர்களில் இவரும் ஒருவர். ஆனால் தற்போது இவர் என்ன ஆனார் என பலருக்கு தெரிந்திரிக்க வாய்ப்பில்லை. அந்த போட்டிக்கு பின்னர் இவரே இந்திய டெஸ்ட் அணிக்கு நிரந்தர நம்பர் 4 வீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தெடரில் சொதப்பியதன் மூலம் இவரால் அதன் பின்னர் இந்திய அணியில் இடம் பிடிக்கவே முடியாமல் போனது.
இருந்தாலும் தற்போது அணியில் இடம்பிடிப்பதற்காக முதல்தர மற்றும் ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாடி வருகிறார் இவர். தற்போதைய டெஸ்ட் அணியில் ரஹானே மற்றும் விஹாரி நிரந்தர இடத்தினை பிடித்ததால் கருண் நாயர் அணிக்கு திரும்புவது மிகக் கடினமே.
#3) முகமது இர்பான்
பாகிஸ்தான் அணியை சேர்ந்த முகமது இர்பான் டி20 போட்டியில் சிறப்பான சாதனையை படைத்துள்ளார். கடைசியாக 2016 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய இவர் பல்வேறு டி20 தொடர்களில் பங்கேற்று வருகிறார். அந்தவகையில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த கரீபியன் லீக்கில் இவர் டி20 வரலாற்றில் வேறு எந்த வீரரும் படைக்காத சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். அந்த போட்டியில் நான்கு ஓவர்கள் பந்து வீசிய இவர் வெறும் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதுவும் கெயில் மற்றும் லீவிஸ் போன்ற அதிரடி ஆட்டக்காரர்களை கொண்ட அணிக்கு எதிராக. இவர் இந்த சிறப்பான சாதனையை படைத்தாலும் இவருக்கு தற்போதைய பாகிஸ்தான் அணியில் இடமில்லை.