உலகக் கோப்பைக்குப் பின் ஒய்வு பெற வாய்ப்புள்ள வீரர்கள்

எம்.எஸ்.தோனி
எம்.எஸ்.தோனி

உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா மே 30 ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும் இந்த உலக கோப்பையில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில் பல மூத்த வீரர்களுக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை தொடராக அமையும். இவர்களை அடுத்த உலகக் கோப்பையில் நம்மால் களத்தில் காண இயலாது. இந்த மூத்த வீரர்களில் சிலர் உலக கோப்பையை ஏந்தியுள்ளனர். பலர் உலக கோப்பை வெல்லும் கனவில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். கிரிக்கெட்டின் மிக மதிப்பு மிக்க தொடரான உலக கோப்பை தொடரை வெல்லும் இறுதி முயற்சியில் பல ஆண்டுகளாக அவர்களின் அற்புதமான ஆட்டத்தால் நம்மை கவர்ந்தவர்கள் 2019 ஆம் ஆண்டில் அவர்களின் கடைசி உலக கோப்பையில் விளையாடி வருகிறார்கள். அப்படி தனது நாட்டிற்காகவும் தனது அனைத்து அணிக்காகவும் சேவையாற்றி ஓய்வு பெறவுள்ள முக்கிய வீரர்களை இந்த தொகுப்பில் காணலாம்.

#1. எம்.எஸ்.தோனி (இந்தியா)

உலகக்கோப்பை போட்டிகளுக்கு பிறகு ஓய்வை அறிவித்து விடுவார் என ரசிகர்களால் விவாதிக்கப்பட்டுவரும் வீரர்களில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பெயர் முதலில் உள்ளது. 37 வயது நிரம்பிய தோனி ஓய்வு பெற்று விடுவார் என்ற கேள்வியை 2015 உலகக் கோப்பையில் இருந்தே தொடங்கியது. விமர்சனங்களை தகர்த்தெறிந்து இந்தியாவின் முக்கிய தூண்களில் ஒருவராக நடப்பு உலகக் கோப்பையிலும் ஜொலித்து வருகிறார் தோனி. இவர் தலைமையின் கிழ் இந்தியா 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது குறிப்பிட தக்கது. கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடியுள்ள தோனி 16000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். அதிக வெற்றிகளை பெற்று தந்த இந்திய கேப்டன் என்ற சாதனைக்குறியவர். சமீபத்தில் ஓவியராகும் ஆசை பற்றி தோனி வெளியிட்ட வீடியோ ஒன்று அவர் நிச்சயம் ஓய்வு பெற்று விடுவார் என்ற கவலையை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

#2. கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டிஸ்)

கிறிஸ் கெய்ல்
கிறிஸ் கெய்ல்

ஒய்வு பெறக்கூடும் என கணிக்கப்படும் வீரர்கள் பட்டியலில் அடுத்ததாக கவனம் பெற்று இருப்பவர் யூனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும் மேற்கிந்திய தீவுகளின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல். 39 வயதான இவர் மேற்கிந்திய தீவுகளில் இன்றியமையாத பொக்கிஷம் ஆகவே பார்க்கப்படுகிறார். இதுவரை 452 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள கெய்ல் 19000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். சர்வதேச போட்டிகளில் ஒய்வு பெற்றாலும் தொழில் முறை போட்டிகளில் விளையாடுவார் எனத் தெரிகிறது.

#3. இம்ரான் தாஹிர் (தென் ஆப்ரிக்கா)

இம்ரான் தாஹிர்
இம்ரான் தாஹிர்

இந்த பட்டியலில் 40 வயதான சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிரும் இடம் பெற்றுள்ளார். இவரும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார். பாகிஸ்தானில் பிறந்த தாஹிர் தனது 32 வயதில் தென் ஆப்ரிக்க அணிக்காக 2011 ஆம் ஆண்டு களமிறங்கினார். நடப்பு தொடரில் விளையாடும் அதிக வயதுடைய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். இந்த உலக கோப்பை போட்டியில் முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

#4. சோயிப் மாலிக் (பாகிஸ்தான்)

சோயிப் மாலிக்
சோயிப் மாலிக்

பாகிஸ்தானின் சோயிப் மாலிக்கிற்கும் இது கடைசி உலகக் கோப்பை தொடர் ஆகவே பார்க்கப்படுகிறது. 37 வயதான மாலிக் பாகிஸ்தானுக்காக 431 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். பாகிஸ்தானை பல்வேறு போட்டிகளில் தோல்விகளிலிருந்து வெற்றி பாதைக்கு மாற்றிய பெருமை இவருக்கு உண்டு. சில காலம் பாகிஸ்தான் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். இவர் 1999 ஆம் ஆண்டு சர்வதச போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமானார். தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் 2000 ஆம் ஆண்டிற்க்கு முன் அறிமுகமான ஓரே வீரர் என்ற பெருமைக்குறியவர்.

#5. லசித் மலிங்கா (இலங்கை)

லசித் மலிங்கா
லசித் மலிங்கா

இந்த வரிசையில் இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்காவும் உள்ளார். 2004 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்கிய அவருக்கு தற்போது வயது 35. கடந்த ஆண்டில் ஓய்வை அறிவித்து விட்டு மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள மலிங்கா 2020 ஆம் ஆண்டு நடைபெற உள்ள 20 ஓவர் உலக கோப்பை தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக கூறி இருக்கிறார். ஆனால் 50 ஓவர் போட்டிகளில் உலகக் கோப்பையுடன் ஒய்வு பெறுவார் எனக் கூறியுள்ளார்.

#6. ராஸ் டெய்லர் (நியூசிலாந்து)

ராஸ் டெய்லர்
ராஸ் டெய்லர்

35 வயதான ராஸ் டெய்லர் நியூசிலாந்து அணிக்கு பல போட்டிகளில் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார், இதுவரை ஒய்வு பற்றி தெரிவிக்கவில்லை இருப்பினும் இவர் தனது முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கலாம். 200க்கும் மேற்பட்ட போட்டிகளில் 7000க்கும் மேற்பட்ட ரன்களை நியூசிலாந்து அணிக்காக குவித்துள்ளார். நியூசிலாந்து அணிக்காக அதிக சதங்கள் அடித்தவர் என்ற பெருமைக்குறியவர்.

#7. டேல் ஸ்டெயின் (தென் ஆப்பிரிக்கா)

டேல் ஸ்டெயின்
டேல் ஸ்டெயின்

35 வயதான டேல் ஸ்டெயின் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர். இவரும் தனது ஓய்வை அறிவிப்பார் என கூறப்படுகிறது. காயத்தால் தொடர்ச்சியாக அவதிபட்டு வரும் இவர் இந்த உலகக் கோப்பையில் கனுக்கால் காயம் காரணமாக விலகியுள்ளார். உலகின் நெம்பர் ஒன் பவுலராக அனைத்து விதமான போட்டிகளிலும் இருந்திருக்கிறார். தென் ஆப்ரிக்க அணிக்காக அனைத்து விதமான போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 700 விக்கெட்கள் விழ்த்தியுள்ளார்.

#8. ஹசிம் அம்லா (தென் ஆப்பிரிக்கா)

ஹசிம் அம்லா
ஹசிம் அம்லா

தென் ஆப்பிரிக்க அணியின் ரன் மெஷின் 36 வயதான ஹசிம் அம்லாவுக்கும் இதுதான் கடைசி உலகக் கோப்பை தொடராக இருக்கும். ஒருநாள் போட்டிகளில் விராட் கோலியின் சில சாதனைகளை தகர்த்த பெறுமை இவரை சாரும். மொத்தமாக 19000 ரன்கள்களுக்கு மேலாக தென் ஆப்ரிக்க அணிக்காக குவித்துள்ளார்.ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு பெற்றாலும் டெஸ்ட் போட்டிகளில் இன்னும் சில காலம் விளையாடுவார் என தெரிகிறது.

#9. மஷ்ரஃபே மோர்டாசா (பங்களாதேஷ்)

மஷ்ரஃபே மோர்டாசா
மஷ்ரஃபே மோர்டாசா

பங்களாதேஷ் அணியின் கேப்டன் மற்றும் அந்த நாட்டின் கிரிக்கெட் காட் பாதர் மஷ்ரஃபே மோர்டாசாவிற்க்கு இது தான் கடைசி உலகக் கோப்பையாக இருக்கும். தனது கிரிக்கெட் பயணத்தில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தவர். இவர் 300க்கும் மேற்ப்ட்ட போட்டிகள் வங்க தேச அணிக்காக விளையாடியுள்ளார். கிரிக்கெடிலிருந்து தற்போது ஓய்வு பெறுவாரா என தெரியவில்லை. ஆனால் இதுவே அவருக்கு கடைசி உலகக் கோப்பையாக இருக்கும்.

Quick Links