Create
Notifications
Favorites Edit
Advertisement

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் கலக்கிவரும் சிறந்த தொடக்க ஜோடிகள் 

SENIOR ANALYST
முதல் 5 /முதல் 10
713   //    20 Jun 2019, 08:00 IST

Opening pairs potentially decide the fate of their teams and here are five of them who are best at the task.
Opening pairs potentially decide the fate of their teams and here are five of them who are best at the task.

எந்த ஒரு அணிக்கும் தொடக்க ஜோடியின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். பேட்டிங் வரிசையில் முக்கியம் வாய்ந்த இந்த இரு பேட்ஸ்மேன்களின் உதவியால் 50 சதவீத வேலைப்பளு அணியின் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு குறைக்கப்படுகிறது. கடுமையான நெருக்கடி தருணங்களின் இயல்பை உணர்ந்து எவ்வித சூழ்நிலையிலும் பொறுமையாக கையாண்டு விளையாடினால், எளிதில் அணியின் வெற்றியை உறுதி செய்துவிட முடியும். ஒருவேளை, இதற்கு எதிர்மாறாக தொடக்க ஜோடியின் விக்கெட்கள் ஆட்டத்தின் விரைவிலேயே சரிந்துவிட்டால் அணியை மீண்டும் கட்டமைப்பது கடினமான காரியமாகும். ஏனெனில், அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் தங்களது இயல்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி விரைவிலேயே தங்களது விக்கெட்களை இழக்க நேரிடும். எனவே, இத்தகைய சிறப்பு வாய்ந்த தொடக்க ஜோடிகளை பற்றி இந்தத் தொகுப்பில் காணலாம்.

#3. ஆரோன் ஃபின்ச் மற்றும் டேவிட் வார்னர் - ஆஸ்திரேலியா: 

Australia v New Zealand - Cricket World Cup Practice Match
Australia v New Zealand - Cricket World Cup Practice Match

பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஓராண்டுக்கு பின்னர், மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் இணைந்துள்ளனர். தற்போது இவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசையை மேலும் வலுசேர்க்கும் விதமாக விளையாடி வருகின்றனர். இவர்களுக்கு பக்கபலமாக அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் 2019 உலக கோப்பை போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலிய அணி தற்போது பின்ச் மற்றும் வார்னரை தொடக்க ஜோடியாக களமிறக்கி வருகிறது. இவர்கள் இருவரும் இணைந்து ஆஸ்திரேலிய அணிக்காக தலா 100 க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரர்களாக விளையாடி உள்ளனர். அவற்றில் குறிப்பிடும் வகையில், தங்களது பேட்டிங் சராசரி 40க்கும் மேல் வைத்துள்ளனர். இதுவரை இவர்களது பார்ட்னர்ஷிப்பில் ஆறு சதங்கள் உள்பட 2,5 24 ரன்கள் குவிக்கப்பட்டு உள்ளன. 2017ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இவர்கள் இருவரும் இணைந்து 237 ரன்களை குவித்ததே இதுநாள் வரை இவர்களது பார்ட்னர்ஷிப்பில் அமைந்த சிறந்த ஆட்டமாக உள்ளது. 

#2.ஜாசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ - இங்கிலாந்து: 

England v Bangladesh - ICC Cricket World Cup 2019
England v Bangladesh - ICC Cricket World Cup 2019

2019 உலக கோப்பை தொடரை வெல்லும் அணிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது, இங்கிலாந்து அணி. இந்த அணியின் சரிசம வீரர்களின் பங்களிப்பு தொடர் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாய் வருகின்றது. அதுபோல, அணியின் தொடக்க ஜோடியான ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஜாசன் ராய் இணை உலகின் அபாயகரமான ஜோடியாக திகழ்ந்து வருகின்றது. உலகின் தலைசிறந்த அணிகளுக்கு எதிராக தங்களது ஆதிக்கத்தை செலுத்த இந்த ஜோடி தவறுவதில்லை. 62.62 என்ற பார்ட்னர்ஷிப் சராசரியை கொண்டுள்ள இந்த இணை அனைத்து தொடக்க ஜோடிகளை காட்டிலும் சிறந்ததொரு சராசரியை கொண்டுள்ளது. இதுவரை 29 இன்னிங்சில் களமிறங்கிய இவர்கள் தங்களது பார்ட்னர்ஷிப்பில் 1816 ரன்களை குவித்துள்ளனர். அவற்றில் 8 சதங்களும் இவர்களது பார்ட்னர்ஷிப்பில் உருவாக்கப்பட்டன. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டி ஒன்றில் 174 விரல்களை தங்களது பார்ட்னர்ஷிப்பில் உருவாக்கியது சிறந்த ஆட்டமாக இதுவரை உள்ளது.தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரின் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் கூட இவர்களது பார்ட்னர்ஷிப்பில் 108 ரன்கள் குவிக்கப்பட்டன. 

1 / 2 NEXT
Tags:
Advertisement
Advertisement
Fetching more content...