Create
Notifications
New User posted their first comment
Advertisement

ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் ஐந்து சிறந்த துவக்க ஜோடிகள்

MOST SUCCESSFUL PARTNERSHIP OF INDIAN CRICKET IN ODI FORMAT
MOST SUCCESSFUL PARTNERSHIP OF INDIAN CRICKET IN ODI FORMAT
SENIOR ANALYST
Modified 11 Nov 2018, 15:16 IST
முதல் 5 /முதல் 10
Advertisement

வெற்றியைத் தேடி தரக்கூடிய சிறந்த முன்வரிசை பேட்ஸ்மேன்களால் ஆசீர்வதிக்கப்பட்டது இந்திய அணி சுனில் கவாஸ்கர் முதல் விரேந்திர ஷேவாக் வரை அனைத்து துவக்க ஆட்டக்காரர்களும் ஆட்டம் துவங்கிய முதலே நின்று இந்திய அணிக்காக வெற்றிபெற்று தந்துள்ளனர்.இது அந்தத் துவக்க ஆட்டக்காரர்களைப் பற்றி மட்டுமல்லாது அவர்கள் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை எப்படி உருவாக்கினர் என்பதை பற்றிய பதிவாகும்.நல்ல ஒரு அடித்தளத்தை அணிக்காக ஆரம்பித்து நடுவரிசை ஆட்டக்காரர்கள் அதனைப் பொருட்படுத்தி அணியின் வெற்றிக்காக அவர்களை ஆடுமாறு செய்வதே இவர்களது முக்கிய கடமையாகும்.ஒரு கம்பீரமான துவக்க ஜோடியை ஒரு அணி  பெறுவது பெரும் ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்றாகும்.இவர்கள் தொடக்க ஜோடி என்ற போதிலும் ஒரு சிறந்த வீரர்களாக பலமுறை இந்திய அணியைத் தங்களது கடின உழைப்பினால் வெற்றி பாதைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். இதில் சச்சின் டெண்டுல்கர் ஒருவர் மட்டுமே மூன்று வேறு நபர்களுடன் கைகோர்த்து துவக்க ஜோடியில் ஒருவராக இந்திய ஒருநாள் போட்டிகளில் வலம்வந்தார்.

‌மேலும் இவர்கள் இந்திய அணி இரு முறை 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பையை வெல்லவும் உதவிகரமாக இருந்துள்ளனர். உலகின் வேறு எந்த அணிக்குமே இந்திய அணியைப் போன்ற சிறந்த துவக்க ஆட்டக்காரர்கள் எளிதில் கிடைத்திடவில்லை.அந்தவகையில், இந்தியா கிரிக்கெட் அணியானது அதிர்ஷ்டமுள்ள அணியாக உள்ளது.ஏனென்றால், இந்திய அணி பல வெற்றிகரமான துவக்க ஜோடிகளைக்கொண்டு இரண்டு முறை உலகக்கோப்பை பட்டத்தை வென்றுள்ளது.அவ்வகையில், தற்போதுள்ள இந்திய துவக்க ஜோடியான ஷிகர் தவான் மற்றும் ரோகித் ஷர்மா கூட்டணியும் அதே தொன்றுதொட்டு வரும் ஜோடியாகவே இந்தியாவிற்கு உள்ளது. சுனில் கவாஸ்கர் மற்றும் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த, கௌதம் கம்பீர் மற்றும் ஷேவாக், சச்சின் டெண்டுல்கர் மற்றும் விரேந்திர ஷேவாக், ஷிகர் தவான் மற்றும் ரோகித் ஷர்மா, சௌரவ் கங்குலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் இணை உட்பட அனைத்து கால சிறந்த இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்ட ஜோடிகளைப் பற்றி இங்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.

‌இந்திய ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் ஐந்து சிறந்த துவக்க ஜோடிகளை இனி காணலாம்.

5.சுனில் கவாஸ்கர் மற்றும் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த இணை:

‌காலம் : 1981 - 1987

FIRST EVER SUCCESSFULL OPENING PARTNERSHIP OF INDIAN TEAM

 இந்த இணை தான் இந்திய அணிக்குக் குறுகிய கால கிரிக்கெட்டில் முதன்முறையாக கிடைத்த வெற்றிகரமான கூட்டணியாகும்.ஆட்டத்தை துவக்குவதில் சுனில் கவாஸ்கர் மற்றும் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த இணையானது 1981 முதல் 1987 வரை துவக்க ஜோடியாக சுமார் ஆறு ஆண்டுகள் இந்திய அணிக்கு நீடித்தனர்.1983-இல் தனது முதல் உலகக்கோப்பையை வென்றது உட்பட, குறுகிய கால கிரிக்கெட்டில் அணியை வெற்றி பெறச்செய்யவதில் இந்த இணை நீண்ட காலமாக தனது ஆதிக்கத்தை செலுத்தியது.

கவாஸ்கர் - ஶ்ரீகாந்த் இணையானது 1680 ரன்களும் 30.54 என்ற ஆவரேஜை வெறும் 55 இன்னிங்சில் எடுத்தது.இந்த இணை தங்களது பார்ட்னர்ஷிப்பில் இரு சதங்கள் மற்றும் 11 அரைசதங்களை அடித்துள்ளனர்.136 ரன்கள் குவித்ததே இவர்களது மிகச்சிறந்த பார்ட்னர்ஷிப்பாகும்.

1 / 3 NEXT
Published 11 Nov 2018, 15:16 IST
Advertisement
Fetching more content...
App download animated image Get the free App now
❤️ Favorites Edit