ஐபிஎல்ல் தகர்க்கவே முடியாத நான்கு சாதனைகளுக்கு சொந்தக்காரர்களான இரு வீரர்கள்!!

Devaraj
ஐபிஎல்
ஐபிஎல்

உலகின் மிகப் பிரபலமான T20 தொடர் ஐபிஎல் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. உலகக்கோப்பை போன்ற மிகப்பெரிய தொடர்களுக்கு கிடைக்கிற வரவேற்பும், உற்சாகமும் ஐபிஎல்க்கு கிடைக்கிறது. முதல் போட்டியிலேயே 158 ரன்கள் குவித்து பிரெண்டன் மெக்கல்லம் ஆரம்பித்தது முதல் 6/34 விக்கெட் எடுத்த சோஹைல் தன்வீர், கடைசி ஓவரில் 19 ரன்கள் எடுத்து பஞ்சாப்புக்கு எதிராக தோனி வென்று கொடுத்தது என எத்தனையோ மெய்சிலிர்க்கும் தருணங்கள் ஐபிஎல்ல் நிகழ்ந்துள்ளன. ஆனால், இந்த இருவரும் செய்த இருவேறு சாதனைகளையும் இனி எவரேனும் நிகழ்த்த முடியுமா என்றால் கேள்விக்குறியே!

#1. ஒரு போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர்!

கிறிஸ் கெய்ல்
கிறிஸ் கெய்ல்

T20 போட்டிகளில் 175 ரன்கள் என்பதே பெரிய எண்ணிக்கை தான். ஆனால் ஒரே இன்னிங்ஸில் அதுவும் வெறும் 66 பந்துகளில் 175 ரன்கள் குவிப்பது என்பது கிறிஸ் கெய்ல் என்ற ஒரு மனிதனுக்கு மட்டுமே சாத்தியம். அந்த ஆட்டத்தில் பெங்களூர் அணி 263 ரன்களைக் குவித்து, 130 ரன்கள் வித்தியாசத்தில் புனே அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

#2.பவுண்டரிகளிலேயே 150க்கும் மேல் ரன்கள்!!

இதுவரை இரண்டு பேட்ஸ்மேன்கள் மட்டுமே 150 ரன்களுக்கு மேல் ஐபிஎல் போட்டிகளில் எடுத்துள்ளனர். ஆனால் அந்த அளவை 17 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகள் என 150க்கு மேற்பட்ட ரன்களை தான் அடித்த 175 ரன்களில் 88% அடித்த ஒரே வீரரும் இவர் தான். இந்த இரு சாதனைகளையும் இனி ஒருவர் முறியடிப்பது என்பது முடியாத காரியம் என்றே சொல்லலாம்.

#3. ஒரு சீசனில் அதிக சதங்களை அடித்த வீரர்!

விராட் கோஹ்லி
விராட் கோஹ்லி

2016ம் ஆண்டின் ஐபிஎல்ல் கோலி ஒரு ரன்களை குவிக்கும் ராட்சசனாகவே இருந்தார் என்றால் மிகையில்லை. ஒருநாள் தொடரில் எப்படி கோலி அடுத்தடுத்து சதங்களை குவித்து கிரிக்கெட் உலகினரை ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளாரோ அதே போல் 2016ம் ஆண்டின் ஒரே ஐபிஎல் தொடரில் மட்டும் நான்கு சதங்களை எடுத்து எவரும் நெருங்க முடியாத சாதனைக்கு சொந்தக்காரரானார். அதுவும் பஞ்சாப்புக்கு எதிரான அவரது ஆட்டம் இன்று வரை அவரின் மிகச்சிறந்த ஒரு இன்னிங்ஸாக போற்றப்படுகிறது. தான் சமகாலத்தின் மாஸ்டர் பேட்ஸ்மேன் என்பதை அந்த தொடரில் கோலி நிரூபித்தார்.

#4.ஒற்றை ஐபிஎல்ல் அதிக ரன்களை குவித்தவர்!!

2016 ஐபிஎல் தொடரிலேயே வெறும் 16 இன்னிங்ஸ்கள் மட்டுமே விளையாடி மொத்தம் 973 ரன்களை 81.08 சராசரி, 152.03 ஸ்டிரைக் ரேட்டுடனும் எடுத்தார். அதில் 4 சதங்களும், 7 அரை சதங்களும் அடங்கும். இந்த பட்டியலி அவருக்கு அடுத்தநிலையில் அதே ஆண்டில் 848 ரன்களை குவித்த டேவிட் மில்லர் இருக்கிறார்.கோலியின் இந்த மகத்தான சாதனையை நெருங்குவோர் யாருமில்லை , இனி ஒருவேளை இந்த சாதனை முறியடிக்கப்படலாம் ஆனால் அதன் சொந்தக்காரராகவும் கோலியே இருக்கக்கூடும்.

இப்படி முறியடிக்கமுடியாத பலசாதனைக்கு சொந்தக்காரர்களாக RCB வீரர்கள் இருந்தாலும் ஐபிஎல் கோப்பையை இன்னும் வெல்லவில்லையே என்ற ஏக்கம் தான் மிஞ்சி உள்ளது. இந்த முறை புதிய உக்தியுடன் சென்னை அணியை சென்னையில் எதிர்கொள்கிறது அவர்களது பாட்சா பலிக்குமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Quick Links

Edited by Fambeat Tamil