''தோனியிடம் உள்ள ஆட்டத்தை மாற்றும் திறன் கோலியிடம் இல்லை'' - தோனியின் முன்னாள் பயிற்சியாளர்

விராட் கோஹ்லி மற்றும் தோனி
விராட் கோஹ்லி மற்றும் தோனி

தோனியின் பலம் அவர் களத்தில் கடைசி வரை போராடி வெல்லும் குணம், அந்த திறமை கோலியிடம் இல்லை என தோனியின் பள்ளி பயிற்சியாளர் கேசவ் பானர்ஜி கூறியுள்ளார். மேலும் உலகக் கோப்பை தொடரில் தோனி நான்காம் இடத்தில் ஆடவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். கேசவ் பானர்ஜி ராஞ்சியில் டோனி படித்த பள்ளியின் விளையாட்டுப் பயிற்சியாளராக இருந்தவராவார்.

உலகக் கோப்பையில் தோனியின் பங்கு

உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லிக்கு மூத்த வீரர் என்ற முறையில் சிறந்த ஆலோசகராக எம் எஸ் தோனி இருக்க முடியும். தோனி இக்கட்டான நேரங்களில் முக்கியமான முடிவுகளை எடுக்கும் திறன் கொண்டவர். கோலிக்கு தோனியின் உதவி இந்த உலகக் கோப்பை தொடரில் கண்டிப்பாக உதவும். விளையாட்டை டோனி அணுகும் முறை மற்றும் அவர் எடுக்கும் முடிவுகள் போன்று வேறு யாரும் அவருக்கு நிகர் இல்லை எனவும் கோலிக்கு பொறுமை கிடையாது எனவே எந்த ஆலோசனையும் அவர் பெற விரும்பினால், கோஹ்லி எப்போதுமே தோனியை சார்ந்தே இருக்க வேண்டும் என்று கேசவ் பானர்ஜி தெரிவித்தார். தோனியிடமிருந்து அனுபவத்தையும், முக்கியமான நகர்வுகளையும் கோலி கற்று கொள்ள வேண்டும் என கூறினார். இந்திய அணியில் தோனி இல்லை என்றால், அவர் கோலி கேப்டனாக அதிக சுமைகளை ஏற்க நேரிடும். உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் தோனியின் பங்களிப்பு பெரிதாக இருக்கும் என்றார்.

பேட்டிங் வரிசையில் நான்காவது வீரராக தோனி

மேலும், தோனி எந்த பேட்டிங் வரிசையில் களம் இறங்குவார் என்பதும், இந்தியாவின் நான்காவது வீரராக யார் களமிறங்குவார்கள் என்பதும் புரியாத புதிராக உள்ளது. தோனி நான்காம் இடத்தில் ஆடவேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்தார். கடினமான நேரத்தில் அவர் நான்காவது வீரராக ஆடும் பட்சத்தில் ஆட்டத்தின் கடினத்தன்மை அவரால் வெகுவாக குறைக்க முடியும். அதற்கு பின்வரும் வீரர்களும் அழுத்தமின்றி விளையாடுவார்கள் இது என் தனிப்பட்ட கருத்து. அணி நிர்வாகம் இதனை பரிசிலனை செய்ய வேண்டும்" என்றார்.

ரிஷப் பண்ட் இந்திய உலகக் கோப்பை அணியில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் ரசிகர்கள் நினைத்தாலும், கேசவ் பானர்ஜி இவர்களிடமிருந்து வேறுபடுகிறார். அணுபவ வீரர் என்ற முறையில் டோனியால் இந்தியாவிற்க்கு உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார் அவர்.

உலக கோப்பையுடன் டோனி தனது ஓய்வு முடிவை அறிவிப்பாரா என்று கேட்டபோது: அவர் ஓய்வு பெற வேண்டும் என்று விரும்புகிறிர்களா? மேலும் அவர் கூறுகையில் அது தான் அவர் வாழ் நாளில் முக்கிய முடிவாகும். "தோனி எப்போது ஓய்வுபெறுவார் என்பதை அவரது மனைவி, தந்தையே அறிந்திருக்க முடியாது" என்றார்.

தற்போது நடைபெறும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்லும் என்றும், சுமாரான அணியை இறுதி போட்டி வரை கொண்டு சென்று வெல்ல வைக்கும் திறமை டோனியிடம் உள்ளது என புகழாரம் சுட்டியுள்ளார். ஒரு வேளை இந்திய அணியிலிருந்து டோனி ஓய்வு பெறும் பட்சத்தில் இன்னும் சில ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

Quick Links

Edited by Fambeat Tamil