உலகக் கோப்பை 2019: இந்தியா vs ஆப்கானிஸ்தான்: இப்போட்டி த்ரில்லாக சென்றதற்கான 5 முக்கிய தருணங்கள்

The Men in Blues came out on top in the thriller
The Men in Blues came out on top in the thriller

#4 கடைநிலை ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களை தங்களது தந்திரமான பௌலிங்கால் வீழ்த்திய யுஜ்வேந்திர சகால் மற்றும் ஹர்திக் பாண்டியா

Chahal and Pandya picked up two wickets apiece
Chahal and Pandya picked up two wickets apiece

கடந்த 18 மாதங்களாக இந்திய அணியின் பௌலிங் திறன் பெருமளவில் மெருகேறியுள்ளது. இவர்கள் தனி ஒருவராக நின்று சிறந்த அடித்தளமிட்டு பல போட்டிகளில் வெற்றி வாய்ப்பை தேடித் தந்துள்ளனர். புவனேஸ்வர் குமார், ஜாஸ்பிரிட் பூம்ரா மற்றும் முகமது ஷமி ஆகிய மூவரும் இனைந்து ஆட்டத்தின் தொடக்க மற்றும் இறுதி ஓவர்களை சிறப்பாக வீசி சிறப்பான பௌலிங்கை வெளிபடுத்தி பேட்ஸ்மேன்களை தடுமாறச் செய்துள்ளார்.

சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ் மற்றும் யுஜ்வேந்திர சகால் மிடில் ஓவரில் சிறப்பான பந்துவீச்சை வெளிபடுத்துகின்றனர். தற்போது ஹர்திக் பாண்டியாவும் தனது பௌலிங்கை சிறப்பாக மேம்படுத்தி பந்துவீச்சை மேற்கொண்டு வருகிறார்.

இந்திய அணி குறைவான ரன்களை குவித்த பொழுது, இந்திய அணி தொடர்ந்து தனது ஆதிக்கத்தை உலகக் கோப்பையில் செலுத்த பெரும்பாலும் பந்துவீச்சாளர்களையே நம்பியிருந்தது. அனைத்து பௌலர்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி சிறு கால இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்டத்தின் இறுதி நேரத்தில் யுஜ்வேந்திர சகால் மற்றும் ஹர்திக் பாண்டியா வீழ்த்திய விக்கெட்டுகள் மூலம் இந்திய அணிக்கு போட்டி வசம் மாறியது.

இருவரும் ஆரம்பத்தில் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர், இருப்பினும் கடைநிலையில் இவர்கள் வீழ்த்திய விக்கெட் மிகச் சிறப்பாக இந்தியாவிற்கு அமைந்தது. நஜீபுல்லா ஜாட்ரான் ஒரு சிறப்பான அதிரடி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். இவர் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் நிலைத்திருந்தால் ஆட்டத்தின் வசம் இந்தியாவின் கையை விட்டு போயிருக்கும்.

42வது ஓவரை வீச வந்த ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டக்காரர் ஆஃப்கானை குறைவான வேகத்தில் பந்துவீசி வீழ்தினார். ரஷீத்கான் ஒரு சுமாரான ரன் குவிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த சமயத்தில் யுஜ்வேந்திர சகால் தந்திரமாக வீசினார். அதனை ரஷீத் கான கணிக்காமல் ஒரு படி முன்னோக்கி களமிறங்கி அடிக்க முயன்றபோது பந்து பேட்டில் படாமல் மகேந்திர சிங் தோனியிடம் சென்றது. அவர் உடனே ஸ்டம்பில் அடித்து ரஷீத் கானின் விக்கெட்டை வீழ்த்தினார்.

இந்த விக்கெட் ஆட்டத்தின் முதல் திருப்புமுனையாக இருந்தது. முகமது நபிக்கு ஒரு சரியான மற்றும் நிலையான ஆதரவு ஆட்டக்காரர் மறுமுனையில் இல்லாமல் போனது.

Quick Links

Edited by Fambeat Tamil