உலகக் கோப்பை 2019: இந்தியா vs ஆப்கானிஸ்தான்: இப்போட்டி த்ரில்லாக சென்றதற்கான 5 முக்கிய தருணங்கள்

The Men in Blues came out on top in the thriller
The Men in Blues came out on top in the thriller

#3 ஜாஸ்பிரிட் பூம்ராவின் அனல்வேக டெத் ஓவர்

Bumrah bowled a string of yorkers in his final two overs
Bumrah bowled a string of yorkers in his final two overs

ஜாஸ்பிரிட் பூம்ராவின் பந்துவீச்சு இந்திய அணியின் வெற்றியை பல போட்டிகளில் தீர்மானித்துள்ளது. மிகவும் இயல்பாக சிறிது கூட பதற்றமில்லாதவாறு தனது யார்கர் பந்துவீச்சை செயல்படுத்துவதில் வல்லவர் பூம்ரா. தனது வெவ்வேறு கோண வேகப்பந்து வீச்சின் மூலம் பேட்ஸ்மேன்களை தடுமாறச் செய்வதில் பூம்ராவைப் போல் ஒரு பௌலரை காண்பது கடினமாகும்.

25 வயதான இவர் மீண்டுமொரு முறை தான் உலகின் நம்பர் 1 பௌலராக இருப்பதற்கான காரணத்தை நிறுபித்துள்ளார். பேட்ஸ்மேன்களை வீழ்த்த இவர் ஒரு மிகப்பெரிய ஆயுதம். எவ்வளவு கடினமான மைதானமாக இருந்தாலும் டெத் ஓவரில் அவரது சிறப்பான பந்துவீச்சை வெளிபடுத்த தவறவிடமாட்டார்.

விராட் கோலி 44, 47, 49 ஆகிய ஓவர்களை பூம்ரா வசம் ஒப்படைத்தார். உலகின் நம்பர் 1 பௌலர் கேப்டனின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் சிறந்த பந்துவீச்சை வீசினார். அத்துடன் 125 கோடி மக்களின் நன் நம்பிக்கையையும் காப்பாற்றும் வகையில் மேற்குறிப்பிட்ட ஓவர்களில் மொத்தமாக 17 ரன்களை மட்டுமே அளித்தார். குறிப்பாக 49 ஓவரில் 6 பந்தையும் யார்கராக வீசி 5 ரன்களை மட்டுமே அளித்தார்.

பூம்ராவின் பந்துவீச்சு எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்துவதுடன், அந்த அணியின் ரசிகர்களுக்கும் பதட்டத்தை ஏற்படுத்துகிறார். இவரது பந்துவீச்சை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்கள் எப்போதுமே கடும் தடுமாற்றத்தை சந்திக்கிறார்கள். இவரது சிறந்த பந்துவீச்சால் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டபோது முகமது ஷமி அதனை சமாளித்து இந்தியா வசம் வெற்றியை முழுவதுமாக திருப்பினார்.

Quick Links

Edited by Fambeat Tamil