ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தும் முன்பாக எம்.எஸ்.தோனி தனக்களித்த அறிவுரை பற்றி தெரிவித்துள்ள முகமது ஷமி

2019 World cup Hero Mohammed Shami
2019 World cup Hero Mohammed Shami

நடந்தது என்ன?

மகேந்திர சிங் தோனி கடைசி ஓவரில் யார்க்கர் வீசச் சொன்னதன் மூலம் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியதாக 2019 உலகக்கோப்பையின் ஹாட்ரிக் ஹீரோ முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

உங்களுக்கு தெரியுமா...

இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சேட்டன் சர்மாவிற்கு பிறகு உலகக்கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்தியர் முகமது ஷமி. இவரது அதிரடி பந்தவீச்சு மூலம் கடைசி ஓவர் வரை சென்ற இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் 213 ரன்களில் சுருண்டது.

2019 உலகக்கோப்பையில் இந்திய அணி தொடர்ந்து யாரிடமும் தோல்வியை தழுவாமல் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. புள்ளி பட்டியலில் 9 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. மறுமுனையில் ஆப்கானிஸ்தான் விளையாடிய 6 போட்டிகளிலும் தோல்வியை தழுவி புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த விராட் கோலி தலைமையிலான இந்திய பேட்ஸ்மேன்கள் மிதவேக மைதானத்தில் கடுமையாக தடுமாறினர். ஆப்கானிஸ்தான் பௌலர்களின் அருமையான கூட்டு முயற்சியால் இந்திய அணியால் 50 ஓவர்களுக்கு 224 ரன்களை மட்டுமே குவிக்கமுடிந்தது. ஆப்கானிஸ்தான் இந்த குறைவான இலக்கை அடையும் நோக்கில் முழு உற்சாகத்துடன் களமிறங்கினர். ஆனால் ஜாஸ்பிரிட் பூம்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோரின் அற்புதமான பந்துவீச்சின் மூலம் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் சிறந்த கம்-பேக் அளித்தது.

ஆப்கானிஸ்தான் வெற்றி பெற கடைசி 6 பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் முகமது ஷமியின் அதிரடி பந்துவீச்சு மூலம் ஆப்கானிஸ்தானின் வெற்றி வாய்ப்பை கலைத்தார். 50வது ஓவரில் அவர் வீசிய முதல் பந்து பவுண்டரியாக மாற்றப்பட்டது, அதன்பின் சிறந்த கம்-பேக் அளித்து சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு இந்திய அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார் முகமது ஷமி.

கதைக்கரு

இப்போட்டியில் சிறந்த பௌலிங்கை மேற்கொண்ட முகமது ஷமி 10 ஓவர்களில் 40 ரன்களை அளித்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் அவர் வீழ்த்திய ஹாட்ரிக் மூலம் பெரும் மகிழ்ச்சி அடைந்தார். கடைசி ஓவரில் தான் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு முன்பாக முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தன்னிடம் வந்து அறிவுரை வழங்கியதாக முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

இப்போட்டியின் முடிவில் முகமது ஷமி தெரிவித்துள்ளதாவது,

"திட்டம் மிகவும் எளிமையாகத்தான் தீட்டப்பட்டது. மகேந்திர சிங் தோனி யார்கர் வீசுமாறு பரிந்துரை செய்தார். அவர் கூறியதாவது, நீ உன் பந்துவீச்சை மாற்றதே, தற்போது வீசி கொண்டிருந்த படியே நீ வீசினால் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தலாம் எனக் கூறினார். இது ஒரு அரிய வாய்ப்பு, நீ உன்னுடைய பந்துவீச்சை சரியாக வீசு என்று தோனி என்னிடம் தெரிவித்தார். அவர் கூறிய அதே நுணுக்கத்தை சரியாக செய்தேன்."
அந்த சமயத்தில் யோசிக்க காலம் ஏதும் கிடைக்கவில்லை. அதிக வாய்ப்புகள் ஏதும் அளிக்காமல் எனது முழு ஆட்டத்தை வெளிகொண்டு வந்தேன். நிறைய வெவ்வேறு கோண பந்துவீச்சை முயற்சியிருந்தால் கண்டிப்பாக அதிக ரன்கள் என்னுடைய பௌலிங்கில் சென்றிருக்க வாய்ப்புண்டு. பேட்ஸ்மேனின் மனநிலையை சரியாக கணித்து எனது திட்டத்தை சரியாக செயல்படுத்துவதே எனது குறிக்கோளாக இருந்தது.

அடுத்தது என்ன?

இந்திய அணி தனது அடுத்த போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை எதிர்கொள்கிறது. அதற்கடுத்தாக வரும் சனிக்கிழமையன்று மண்ணின் மைந்தர்கள் இங்கிலாந்தை இந்தியா எதிர்கொள்ள உள்ளது.

Quick Links