2018ல் இந்திய அணியின் சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன் யார் - விராட் கோலி (அல்லது) ரோஹித் சர்மா ?

Rohit-Virat
Rohit-Virat

இந்திய அணி ஏற்கனவே 2018ல் தனது கடைசி சர்வதேச ஒருநாள் போட்டியை விளையாடி விட்டது.அடுத்த ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஜனவரி 2019 ல் தான் இந்திய அணி விளையாடும்.

இந்திய அணிக்கு 2018-ல் ஒருநாள் தொடர்கள் சிறப்பாகவே அமைந்தன. வருடத்தின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவிற்கெதிராக தென்னாப்பிரிக்கா மண்ணிலேயே 5-1 என தொடரை கைப்பற்றியது.இந்த வருடத்தில் நடைபெற்ற 3 ஒருநாள் போட்டி தொடர்களில் 2 ஒரு நாள் போட்டி தொடர்களை இந்தியா கைப்பற்றியுள்ளது.அதுமட்டுமல்லாமல் 2018 ஆம் ஆண்டின் ஆசியக் கோப்பையையும் கைப்பற்றியுள்ளது.

இந்திய அணி 2018ல் 20 ஒருநாள் போட்டிகளில் 14 ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.இரண்டு போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. பேட்டிங்கில் பொருத்த வரை ஷிகர் தவான், ரோஹித் சர்மா, விராட் கோலி 2018ல் சிறப்பாக ஜொலித்துள்ளனர்.மறுமுனையில் யுவேந்திர சாஹால், குல்தீப் யாதவ்,பூம்ரா பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

2018ல் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் சிறப்பான செயல்பாட்டிற்கு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே முக்கிய பங்கு வகித்துள்ளனர். இவர்கள் இருவரும் 2018ல் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை குவித்துள்ளனர். இவர்கள் இந்திய அணிக்கு கிடைத்த பொக்கிஷமாக பார்க்கப்படுகிறது.

உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி இருவருமே அருமையாக பேட்டிங் செய்துள்ளனர்.ஆனால் யார் சிறந்தவர் எனபதை அவர்களுடைய புள்ளிவிவரங்களை வைத்துதான் கணக்கிட முடியும்.நாம் இங்கு 2018ல் இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்பதை பற்றி இங்கு காண்போம்.

ரோஹித் சர்மா

ஹிட்மேன்
ஹிட்மேன்

2018ல் ரோஹித் சர்மா ஓடிஐ மற்றும் டி20 போட்டிகளில் சிறந்த ஆட்டத்திறனுடன் உள்ளார்.துவக்கத்தில் ஆடிய போட்டிகளில் ரோஹித் பெரிதும் சாதிக்கவில்லை.தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரில் கடுமையாக சொதப்பினார்.

அதுமட்டுமல்லாமல் ஒருநாள் போட்டிகளிலும் இதே நிலைமை தொடர்ந்தது.முதல் நான்கு ஒருநாள் போட்டிகளில் சொற்ப ரன்களில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார் .ஐந்தாவது ஒருநாள் போட்டியில் கணித்து விளையாடி சதத்தினை விளாசினார்.

மொத்தமாக தென்னாப்பிரிக்கத்தொடர் ரோஹித் சர்மாவிற்கு சரியாக அமையவில்லை.ஆனால் அது ஒரு அனுபவ போட்டியாக ரோஹித்திற்கு அமைந்தது.

அடுத்து இங்கிலாந்திற்கு எதிரான ஓடிஐ தொடரில் முதல் போட்டியிலேயே சதத்தினை விளாசினார்.ஆனால் அடுத்த இரண்டு போட்டிகளிலும் மிகக் குறைந்த ரன்களில் வெளியேறினார்.ரோகித்திற்கு இங்கிலாந்து ஒருநாள் போட்டி தொடர் தொடக்கம் சிறப்பாக அமைந்தாலும் முடிவு சரியாக அமையவில்லை.

ரோகித் சர்மா ஆசிய கோப்பையில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டார்.ஆசியக்கோப்பையில் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டது. ரோஹித் அற்புதமான கேப்டனாக செயல்பட்டார்.முடிவில் கோப்பையை கைப்பற்றியது ரோஹித் தலைமையிலான இந்தியா அணி . ஆசியக் கோப்பையில் சிறந்த கேப்டனாகவும் சீரான ரன் குவிப்பிலும் ரோகித் சர்மா ஈடுபட்டார்.ஆசியக்கோப்பையில் 5 போட்டிகளில் 317 ரன்களை குவித்து 105.55சராசரியுடன் ஆசியக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமையையும் பெற்றார்.

இந்தியாவில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அற்புதமாக விளையாடி இரு சதங்களுடன் 129.66 சராசரியுடனும் 389 ரன்களை குவித்துள்ளார்.வெள்ளை நிற பந்தில் ரோஹித் சர்மா 2018ல் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இவர் மொத்தமாக 2018ல் 19 ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்று 1030 ரன்களுடன் 73.57 சராசரியை வைத்துள்ளார்.

விராட்கோலி

கிங் கோலி
கிங் கோலி

2018ல் விராட் கோலி கிரிக்கெட் உலகில் சிறந்த வீரராகவும் கட்டுப்படுத்தமுடியாத ஒருநாள் பேட்ஸ்மேனாக உள்ளார்.இந்த வருடத்தின் தொடக்கமே இவருக்கு சிறந்ததாக அமைந்தது.வருடத்தின் முதல் ஒருநாள் போட்டியிலேயே தென்னாப்பிரிக்காவிற்கெதிராக சதத்தினை விளாசினார்.6 போட்டிகளில் 3 சதத்தினை விளாசினார்.

இந்த தொடரில் விராட் கோலி அதிக ரன்களை குவித்தார்.6 போட்டிகளில் 558 ரன்களுடன் 186 சராசரியை வைத்துள்ளார்.இத்தொடரில் அதிக பட்சமாக 160 ரன்களை விளாசினார்.

இங்கிலாந்திற்கெதிரான ஓடிஐ தொடரில் 3 போட்டிகளில் 191 ரன்களை குவித்தார்.அதிகபட்சமாக இத்தொடரில் 70 ரன்களை குவித்தார்.ஆனால் இத்தொடரில் அவரால் சதம் அடிக்க முடியவில்லை.

ஆசிய கோப்பையில் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டது.இந்தியாவில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் முதல் மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து சதத்தினை விளாசித் தள்ளினார். தொடர்ச்சியாக மூன்று ஓடிஐ சதத்தினை விளாசிய முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்தார்.மேற்கிந்தியத்தீவுகளுக்கெதிரான ஓடிஐ போட்டியில் மொத்தமாக 453 ரன்களை குவித்தார்.

விராட் கோலிக்கு மிகச்சிறப்பான வருடமாக 2018 அமைந்துள்ளது.14 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1202 ரன்களுடன் 136.56 சராசரியை வைத்துள்ளார்.விராட் கோலி இந்திய அணியில் 2018 ஆம் வருடம் ஓடிஐயில் அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேன் ஆவார்.ஆசியக்கோப்பையில் இவருக்கு ஓய்வளிக்கப்பட்டாலும் ஒருநாள் போட்டியில் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக உள்ளார்.

முடிவு

புள்ளிவிவரங்களை வைத்து பார்க்கும்போது ரோஹித் சர்மாவை விட விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேனாக 2018 ஒருநாள் போட்டிகளில் செயல்பட்டுள்ளார். ரோஹித்தை விட கோலி குறைவான ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று அதிக ரன்களை குவித்துள்ளார்.இவ்வருடமும் விராட்கோலி தொடர்ந்து சீரான ரன் குவிப்பில் ஈடுபட்டுள்ளார்.

இந்த ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி தனது முழு ஆட்டத்திறனையும் வெளிப்படுத்தியுள்ளார்.ஓடிஐ மட்டுமல்லாமல் டெஸ்ட் மற்றும் டி20 தொடரிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார் விராட் கோலி.

எழுத்து : அப்துல் ரகுமான்

மொழியாக்கம் : சதீஸ்குமார்

Quick Links

Edited by Fambeat Tamil