மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய விக்கெட் கீப்பர் யார்? ரிஷப் பண்ட் (அ) விருத்திமான் சாஹா ?

Wriddhiman Saha vs Rishap Pant
Wriddhiman Saha vs Rishap Pant

விராட் கோலிக்கு மீண்டுமொருமுறை இந்திய டெஸ்ட் அணிக்கு விக்கெட் கீப்பரை தேர்வு செய்வதில் தலைவலி ஏற்பட்டுள்ளது‌. மகேந்திர சிங் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் விருத்திமான சாஹா டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக பொறுப்பேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். கேப்டனின் தேவைக்கேற்ப சரியான பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கை செய்து வந்தார்.

தோனிக்குப் பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு வழக்கமான விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக விருத்திமான சாஹா இருந்து வந்தார். சாஹா 32 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 30.64 சராசரியுடன் 1164 ரன்களை விளாசியுள்ளார். இதில் 3 சதங்கள் மற்றும் 5 அரைசதங்கள் அடங்கும்.

மேலும் சாஹா சிறப்பான விக்கெட் கீப்பிங்கை செய்து இந்திய ரசிகர்கள் மற்றும் இந்திய அணி நிர்வாகத்தினைக் கவர்ந்தார். பேட்டிங்கிலும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை இக்கட்டான கட்டத்திலிருந்து மீட்டுள்ளார்.

சாஹா கடைசியாக 2018ன் ஆரம்பத்தில் நடந்த தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் பங்கேற்றார். அதன் பின்னர் தோள் பட்டையில் ஏற்பட்ட காயத்தால் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை.

இந்திய டெஸ்ட் அணியில் ரிஷப் பண்ட்-டின் உதயம்

Rishap pant
Rishap pant

விருத்திமான சாஹா காயம் காரணமாக டெஸ்ட் அணியிலிருந்து விலகியதால் மாற்று வீரராக அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக்கை இடம் பெறச் செய்தார்கள். தினேஷ் கார்த்திக் 8 வருடத்திற்கு பின்னர் ஆப்கானிஸ்தானிற்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியின் ஆடும் XIல் இடம்பெற்றார்.

இந்த டெஸ்ட் போட்டியில் தினேஷ் கார்த்திக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் அதன் பின்னர் நடந்த இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பன்ட்-ஐ இந்திய விக்கெட் கீப்பராக அணியில் இடம்பெற்றார். இங்கிலாந்துடனான முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் தினேஷ் கார்த்திக் மீண்டும் சொதப்பிய காரணத்தால் டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின் நடந்த நடந்த டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட-ஐ களமிறக்கலாம் என்ற மிகவும் தைரியமான முடிவை இந்திய அணி நிர்வாகம் எடுத்தது.

ரிஷப் பண்ட் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை மிகவும் அதிரடியாக தொடங்கினார். தான் எதிர்கொண்ட இரண்டாவது பந்திலேயே சிக்ஸர் விளாசி அசத்தினார். ஆனால் நீண்ட நேரம் களத்தில் நிலைத்து விளையாடமல் இங்கிலாந்து மைதானத்தின் ஸ்விங் மற்றும் வேக பந்துவீச்சில் தடுமாறினார். இரு போட்டிகளுக்கு பின்னர் இங்கிலாந்து தொடரின் இறுதி டெஸ்ட் இன்னிங்ஸில் தனது சிறந்த பேட்டிங்கை ரிஷப் பண்ட் வெளிபடுத்த தொடங்கினார். இந்த இன்னிங்ஸில் கடைநிலை பேட்ஸ்மேனாக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசி இந்திய ரசிகர்கள் மனதில் இடம் பிடித்ததோடு அணி நிர்வாகத்தின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.

ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறார். 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 49.71 சராசரியுடன் கிட்டத்தட்ட 700 ரன்களை குவித்துள்ளார். இவரிடமுள்ள சிறப்பு என்று பார்த்தால் ரிஷப் பண்ட் அடித்த இரு சதமும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா என வெளிநாட்டு மண்ணில் குவிக்கப்பட்ட சதங்களாகும். இதுவே அவரது புகழை உச்சியடையச் செய்தது.

Rishabh pant
Rishabh pant

ரிஷப் பண்ட்: விக்கெட் கீப்பங் திறன்

ரிஷப் பண்ட் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. இவரிடம் உள்ள சில திறன்கள் இவரை சிறந்த விக்கெட் கீப்பராக டெஸ்ட் கிரிக்கெட்டில் பிரதிபலித்தது. டெல்லியைச் சேர்ந்த இவர் இரு வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் இதுவரை விளையாடியுள்ளார். அதில் சிறந்த விக்கெட் கீப்பங்கை வெளிபடுத்த தவறிவிட்டார்.

அனைத்து விக்கெட் கீப்பர்களுக்கும் ஆரம்பத்தில் இருக்கும் அதே தடுமாற்றம் ரிஷப் பண்ட்-ற்கு இருந்து வந்தது. இவர் விக்கெட் கீப்பிங்கில் செய்யும் தவறை கிரிக்கெட் வள்ளுநர்கள் குறிப்பிட்டு எடுத்துரைத்தனர்.

இருப்பினும் இவர் 9 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள காரணத்தால் ஆரம்பத்திலேயே ரிஷப் பண்ட்-டின் விக்கெட் கீப்பங் திறனை மதிப்பிடுவது தவறு. முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் ஃபெரோக் இன்ஜினியர் ரிஷப் பண்ட் பற்றி கூறியதாவது: "ரிஷப் பண்ட் தனது முழு பங்களிப்பையும் இந்திய அணிக்காக அளித்து வருகிறார். தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்கிறார். மேலும் ரிஷப் பண்ட் என்னுடைய இளமை காலத்தை நினைவு படுத்துகிறார். இவருக்கு சிறந்த எதிர்காலம் உண்டு".

விருத்திமான் சாஹா மீண்டும் டெஸ்ட் அணியில் : யாருக்கு முன்னுரிமை

Ravi shastri with VK
Ravi shastri with VK

விருத்திமான் சாஹா நீண்ட நாட்களுக்கு பின்னர் தனது முதல் உடல்தகுதியை நிரபித்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ளார். 34 வயதான பெங்கால் விக்கெட் கீப்பரான இவர் இந்திய-ஏ அணியில் இடம்பிடித்து மேற்கிந்தியத் தீவுகள்-ஏ அணிக்கு எதிரான 4 நாள் டெஸ்ட் போட்டியில் அரைசதம் விளாசினார்.

இப்போட்டியில் சாஹா விளாசிய 62 மூலம், இவர் தற்போது வரை சிறந்த பேட்டிங் திறனுடன் உள்ளார் என நமக்கு தெரிகிறது. இதனால் தற்போது இந்திய டெஸ்ட் அணியின் ஆடும் XI-ஐ தேர்வு செய்வதில் இந்திய நிர்வாகத்திற்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது.

இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு கடினமான முடிவை எடுத்தாக வேண்டும்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு, விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி ரிஷப் பண்ட்-ஐ இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக நியமிக்கப்படுவார் என தெரிகிறது.

Quick Links

Edited by Fambeat Tamil