4.மார்க் பவுச்சர் :
மார்க் பவுச்சரைவிட இன்றைய விக்கெட் கீப்பர்கள் சிறந்தவர்களாக இருந்தாலும் நீண்டகால உழைப்பும் வெற்றியை அணிக்கு சேர்க்கும் திறனும் இவரை ஒரு சிறந்தவராக நிலைநிறுத்தியது.இவர் சங்கக்கரா போன்ற பேட்டிங் திறனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு விக்கெட் கீப்பராக இல்லாவிட்டாலும் அணிக்கு தேவைப்படும்போது தன்னை பலமுறை அர்ப்பணித்து வெற்றியை தேடித்தந்தார்.இது அவரது தனிப்பட்ட பலமாகும்.
இவர் அணியில் அனைத்து பேட்டிங் ஆர்டர்களிலும் ஆடிக்கூடிய திறன்பெற்று தன் திறனை மேலும் நிரூபித்தார்.இவரது கடின உழைப்பிற்கு கிடைத்த சாதனையான 556 என்ற அதிகமுறை ஆட்டமிழக்கச் செய்த டெஸ்ட் சாதனை நீண்டகாலமாக முறியடிக்க முடியாத ஒன்றாகவே உள்ளது.998 ஆட்டமிழப்பு சாதனையை நிகழ்த்தி விக்கெட் கீப்பிங் உலகில் தனக்கு நிகர் தானே என்று நிரூபித்துள்ளார்.
3.எம்.எஸ்.தோனி :
அனைத்துகால சிறந்த விக்கெட் கீப்பராக உலகளவில் அறியப்படுபவர் எம்.எஸ்.தோனி.விக்கெட் கீப்பிங்கிலோ அல்லது பேட்டிங்கிலோ அல்லது கேப்டன்சியிலோ தனக்கென தனி போக்கை கடைப்பித்தவர் தோனி.ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரும் இந்திய கிரிக்கெட்டில் சிறந்த கேப்டன் என்ற சாதனை படைத்தவர் தோனி.இவரது தலைமையில் இந்திய அணி ஐசிசியின் அங்கீகரிப்பட்ட அனைத்து வகையான கோப்பைகளையும் வென்றது.மேலும் சில கோப்பைகளையும் அணிக்கு வென்று கொடுத்தார்.
ஒரு பேட்ஸ்மேனாக தன்னை அணியின் மிடில் ஆர்டரில் எந்த இடத்திலும் இறங்கி ஆடக்கூடிய வல்லமையை பெற்றிருந்தார்.அதேசமயம், ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கக்கூடிய உலகின் சிறந்த பினிஷராகவும் தனக்கு நிகரில்லை என பலமுறை நிரூபித்துள்ளார்.2011 உலகக்கோப்பை இறுதி போட்டியில் ஆட்டத்தை சிக்ஸரில் முடித்து வைத்து, இந்திய ரசிகர்களுக்கு ஒரு மறக்கமுடியாத தருணத்தை அளித்தார் தோனி.மேலும், ஆட்டத்தில் பீல்டிங் நிறுத்துவதிலும் அறிவார்ந்த முடிவு எடுப்பதிலும் ஒரு சிறந்த கேப்டனாக இருந்தார்.
தனது மின்னல் வேக ஸ்டம்பிங்குகளை செய்து பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்க வைத்தல் மற்றும் எதிர்பார்க்க முடியாத ரன் அவுட்களை செய்வதிலும் இவருக்கு நிகர் இவரே என பலமுறை கிரிக்கெட் உலகில் நிரூபித்துள்ளார்.