அனைத்துகால கிரிக்கெட்டில் கலக்கிய ஐந்து சிறந்த விக்கெட் கீப்பர்கள்

M.S.Dhoni with Adam Gilchrist
M.S.Dhoni with Adam Gilchrist

2.குமார் சங்கக்கரா :

Kumar Sangakara
Kumar Sangakara

கடந்த சில ஆண்டுகளில் குமார் சஙகக்கரா செய்ததை போல் உலகின் வேறு எந்த பேட்ஸ்மேனும் அவ்வாறாக கிரிக்கெட்டை ஆண்டதில்லை.இவரது கிரிக்கெட் தொடக்க காலம் முதலே ரன்களை குவித்து வந்தார்.மேலும், இவர் 37 - வது வயதில் தனது சர்வதேச இறுதி காலமான உலகக்கோப்பையில் தொடர்ந்து நான்கு சதங்கள் அடித்து அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கினார்.

41.80 என்ற சிறந்த பேட்டிங் ஆவரேஜை ஒருநாள் போட்டிகளில் வைத்திருந்தபோதிலும் டெஸ்ட் போட்டிகளில் இவர் செய்த மகத்தான சாதனைகள் போற்றக்கூடியவை.இவர் ஆரம்பகாலங்களில் வெளிநாட்டு தொடர்களில் ஜொலிக்க தவறினார்.ஆனால், இவர் ஓய்வுபெறும் தருணத்தில் எந்தவொரு வீரரும் செய்திடாத சாதனைகளை வெளிநாட்டு மண்ணில் செய்து வியப்பூட்டினார்.

‌மேலும், இவர் ஒரு மகத்தான விக்கெட் கீப்பரும் கூட.இவரது பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் பணியை ஒருசேர நிர்வகிக்கும் திறன் மற்றும் இலங்கை அணியை உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை அழைத்துச்சென்று வழிநடத்தினார்.இதுபோன்ற சிரமமான காரியங்களை கையாண்டுள்ளதால் கிரிக்கெட் உலகில் அனைத்து ரசிகர்களாலும் இவர் இன்றளவும் போற்றப்படுகிறார்.

1.ஆடம் கில்கிறிஸ்ட் :

Most destructive opening wicket keeper
Most destructive opening wicket keeper

நீங்கள் கில்கிறிஸ்ட்டை விட சிறந்த பொழுது போக்கு வீரரை கிரிக்கெட் உலகில் கண்டதுண்டா? கிரிக்கெட் உலகில் கில்கிறிஸ்ட்டை போன்ற வெகு சில பேட்ஸ்மேன்களே தங்களது பங்களிப்பை ஓய்வுபெறும் வரை திறம்பட தந்துள்ளனர்.2000 - களின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா அணியில் முக்கிய வீரராக பங்காற்றினார்.இவரது உழைப்பால் ஆஸ்திரேலியா அணி தொடர் வெற்றிகளை குவித்தது.

ஹேய்டன் எதிரணிக்கு ஒரு சிறிய காயம் அடைய காரணமாவார்.இதனை தொடர்ந்து, பாண்டிங் அந்த காயத்தை பெரிதாக்குவார்.பின்னர், கில்கிறிஸ்ட்டோ அந்த காயத்தின் உள் ஊடூருவிச் சென்று எதிரணி வீரர்களுக்கு பெரும் குடைச்சல் தருவார்.

ஆஸ்திரேலியா அணியின் ஒருநாள் போட்டிகளின் தொடக்க ஜோடியான ஹேய்டன் மற்றும் கில்கிறிஸ்ட் எதிரணி வீரர்களின் பகல் கனவை தகர்ப்பர்.உலகின் எந்தவொரு அபாயகரமான பந்துவீச்சாளர்களும் இவர்களது ரன் குவிப்பை தடுக்கமுடியாமல் கஷ்டப்பட்டனர். பந்துவீச்சாளர்களுக்கு எதிராக கருணையின்றி ஆடும் இவர்களது தொடக்க கூட்டணி ஆஸ்திரேலிய அணிக்கு தொடர்ந்து பல்வேறு வெற்றிகளை குவிக்க காரணமாய் அமைந்தது.இவர் 2007 -இன் உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் இலங்கை பந்தவீச்சாளர்களை பின்னியெடுத்து அடித்த மிரட்டலான சதமே இவரது மிகச்சிறந்த ஆட்டமாகும்.இதனாலே, அந்த போட்டியானது உலகக்கோப்பை போட்டிகளில் ஆகச்சிறந்ததாகவும் கருதப்படுகிறது.

பேட்டிங்கில் அவ்வப்போது சற்று சறுக்கினாலும் விக்கெட் கீப்பிங்கில் தனது திறனை திறம்பட செய்தார்.மேலும் அதனால் பல சாதனைகளையும் குவித்தார்.சுருக்கமாக சொல்லவேண்டுமானால், 'விக்கெட் கீப்பிங் - பேட்ஸ்மேன்' என்ற புது வார்த்தையையே கிரிக்கெட் உலகில் புகுத்தினார்.மேலும் இவரது வெறித்தனமான பேட்டிங் மற்றும் கீப்பிங் பணியால், பல புதிய தலைமுறை வீரர்களுக்கு தூண்டுகோலாக உள்ளார்.

எழுத்து

ப்ரோக்கன் கிரிக்கெட்

மொழியாக்கம்

சே.கலைவாணன்

Edited by Fambeat Tamil