ஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 !!

Virender Sehwag
Virender Sehwag

அதிரடிக்கு பெயர் போன ஐபிஎல் தொடரானது, கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 11 வருடமாக நமது இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகளை பற்றி இங்கு காண்போம்.

#1) டெல்லி கேபிடல்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ் ( 2012 ஆம் ஆண்டு )

டெல்லி கேபிடல்ஸ் – 152/6 ( 20 ஓவர்கள் )

ராஜஸ்தான் ராயல்ஸ் – 151/3 ( 20 ஓவர்கள் )

2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில், டெல்லி அணியும், ராஜஸ்தான் அணியும் மோதின. இந்த போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. ஜெயவர்தனே மற்றும் சேவாக் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடிய சேவாக், 39 பந்துகளில் 63 ரன்கள் விளாசினார். இதில் 2 சிக்சர்களும், 10 பவுண்டரிகளும் அடங்கும். அடுத்து வந்த கெவின் பீட்டர்சன் வெறும் 5 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் அடித்தது.

Ajinkya Rahane
Ajinkya Rahane

153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிட் மற்றும் ரகானே ஆகிய இருவரும் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி, ராஜஸ்தான் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். டிராவிட் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டாகி வெளியேறினார். இறுதியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற 6 பந்துகளுக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. அந்த கடைசி ஓவரில் ரகானே ஒரு சிக்சர் விளாசினார். இருப்பினும் அந்த கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணி வெறும் 10 ரன்கள் மட்டுமே எடுத்து, ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சிறப்பாக விளையாடிய ரகானே, 84 ரன்கள் அடித்து, ஆட்டமிழக்காமல் இருந்தார்.

#2) மும்பை இந்தியன்ஸ் Vs புனே வாரியர்ஸ் ( 2012 ஆம் ஆண்டு )

மும்பை இந்தியன்ஸ் – 120/9 ( 20 ஓவர்கள் )

புனே வாரியர்ஸ் – 119/6 ( 20 ஓவர்கள் )

Pune Warriors Team
Pune Warriors Team

2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில், புனே வாரியர்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. ஜேம்ஸ் பிராங்க்ளின் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். சச்சின் டெண்டுல்கர் 34 ரன்கள் அடித்து, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக், நிதானமாக விளையாடி 18 ரன்கள் அடித்தார். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி வெளியேறினர். இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் மட்டுமே அடித்தது.

Mumbai Indians Team
Mumbai Indians Team

121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் புனே வாரியர்ஸ் அணி களமிறங்கியது. ராபின் உத்தப்பா மற்றும் ரைடர் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவருமே பவர் பிளே ஓவர்களுக்குள் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்த மைக்கேல் கிளார்க் 14 ரன்களிலும், சவுரவ் கங்குலி 16 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர். மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய மிதுன் மன்கஸ், 34 பந்துகளில் 42 ரன்கள் விளாசினார். இறுதியில் புனே அணி வெற்றி பெற 6 பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் மும்பை அணி, புனே வாரியர்ஸ் அணியை வெறும் 10 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி, 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது..

Quick Links

Edited by Fambeat Tamil