2019 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள 3 கவலைகள்

Virat kholi
Virat kholi

#2 புவனேஸ்வர் குமாரின் மோசமான பந்துவீச்சு

Bhuvaneshvar Kumar
Bhuvaneshvar Kumar

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் சிறப்பான வேகப்பந்து வீச்சாளராக சில வருடங்களாக வலம் வருபவர் புவனேஸ்வர் குமார். 2018ன் இடைபட்ட காலத்தில் இவருக்கு காயம் ஏற்பட்டதால் சில மாதங்கள் ஓய்விலிருந்தார். இந்த சமயத்தில் முகமது ஷமி இவரது இடத்தை பிடித்துக் கொண்டார். இதன்மூலம் புவனேஸ்வர் குமார் இந்திய அணியில் தனது இடத்தை படிப்படியாக இழக்கத் தொடங்கினார்.

ஜாஸ்பிரிட் பூம்ரா தற்போது இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக வலம் வருகிறார். இந்திய அணி இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் மட்டும் களமிறங்க நினைத்தால் ஜாஸ்பிரிட் பூம்ராவுடன், முகமது ஷமி இனைந்து விளையாடுவார். இங்கிலாந்து ஆடுகளம் முழுவதும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முழுவதும் ஏற்றதாக இருக்கும். இந்த மைதானங்களில் புவனேஸ்வர் குமார் சிறப்பான பந்துவீச்சை கடந்த காலங்களில் மேற்கொண்டு உள்ளார். இரு வகையான கோணங்களில் பந்துவீச்சை மேற்கொள்வதில் புவனேஸ்வர் குமார் மிகவும் வல்லவர்.

இவரது மோசமான ஆட்டத்திறனால் அணி நிர்வாகம் புவனேஸ்வர் குமார் மீது வைத்துள்ள நம்பிக்கை குறையத் தொடங்கியுள்ளது. ஐபிஎல் தொடரில் இவரது பௌலிங்கில் மாற்றம் ஏற்பட்டு இருந்ததை நாம் காண முடிந்தது.

#3 கேதார் ஜாதவிற்கு ஏற்பட்டுள்ள காயம்

Kedar jadhav
Kedar jadhav

கேதார் ஜாதவிற்கு ஏற்பட்டுள்ள காயம் இந்திய உலகக் கோப்பை அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தலைவலியாக உள்ளது. 34 வயதான இவர் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இறுதி லீக் சுற்றில் ஃபீல்டிங் செய்து கொண்டிருக்கும் போது காயம் ஏற்பட்டது. அந்த போட்டிக்குப் பிறகு பிளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டியில் இவர் பங்கேற்கவில்லை.

இவர் 15 பேர் கொண்ட இந்திய உலகக் கோப்பை அணியில் இடம்பெற்று இருந்ததால் இந்திய அணியின் கவலை அதிகமாகியது. இந்திய அணி இங்கிலாந்திற்கு சென்ற பின்னரும் கேதார் ஜாதவ் பூரான குணமடையவில்லை. இதனால் இரு பயிற்சி ஆட்டத்திலும் ஓரங்கட்டப்பட்டார்.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாகவே கேதார் ஜாதவ் முழு உடல் தகுதியை அடைந்து விடுவார் என நம்பப்படுகிறது. இந்திய நிர்வாகம் காயத்திலிருந்து மீண்டு வந்த கேதார் ஜாதவை நேரடியாக உலகக் கோப்பை போட்டிகளில் களமிறக்குவது ஆச்சரித்தை அளிக்கிறது.

கேதார் ஜாதவ் தனது சிறப்பான ஆல்-ரவுண்டர் ஆட்டத்திறனை இந்திய அணிக்காக அதிகமுறை வெளிப்படுத்தியுள்ளார். அணியில் ஏதேனும் ஒரு பௌலருக்கு மோசமான பௌலிங் அமைந்தால் கேதார் ஜாதவின் பந்துவீச்சு கை கொடுத்துள்ளது.

Quick Links

Edited by Fambeat Tamil