2019 உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்ளை விளாச வாய்ப்புள்ள 4 வீரர்கள்

Rohit Sharma vs Chris Gayle
Rohit Sharma vs Chris Gayle

2019 உலகக் கோப்பை தொடர் தொடங்கியதிலிருந்து விளையாடும் இரு அணிகளில் ஒரு அணிக்கு சாதகமாகவே அமைந்து சற்று மங்கிய நிலையில் சென்று கொண்டுள்ளது. இருப்பினும் கடந்த இரு நாட்களாக நடந்த ஆட்டங்களில் போட்டியின் இறுதி வரை பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் சென்று உள்ளது. அத்துடன் ரசிகர்களுக்கு இந்த இரு போட்டி மிகவும் விருந்தாக அமைந்துள்ளது.

உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பாக பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என அனைவரும் கணித்திருந்தனர். ஆனால் அதற்கு எதிர்மாறாக பௌலர்களுக்கும் இந்த உலகக்கோப்பை தொடர் சிறப்பாக அமைந்து வருகிறது.

ஆனால் தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் வரண்ட ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமே சிறப்பானதாக அமையும், பந்துவீச்சாளர்களுக்கு சிறப்பானதாக அமைய குறைவான வாய்ப்புகளே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த முக்கிய ஐசிசி தொடரில் பேட்ஸ்மேன்கள் மிடில் ஓவரில் நிலைத்து நின்று சில வரலாற்று சாதனைகளை படைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

இந்நிகழ்வின் போது பேட்டிங்கிற்கு சாதகமான மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் சிறப்பான சிக்ஸர்களை அதிக அளவில் விளாசுவார்கள். சில டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மற்றும் ஹார்ட் ஹிட்டர்ஸ் கடைநிலையில் அதிக ரன்களை விளாசித் தள்ளுவார்கள். அத்துடன் அணியின் ரன்களை உயர்த்துவார்கள்.

உலகக் கோப்பை தொடரில் அதிக சிக்ஸர்களை விளாசியவர் யார் என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். நாம் இங்கு உலகக் கோப்பை தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாச வாய்ப்புள்ள 4 வீரர்களை பற்றி காண்போம்.

#4 இயான் மோர்கன் (இங்கிலாந்து)

Eoin Morgan
Eoin Morgan

ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் ஒரு முண்ணனி வீரராக திகழ்கிறார். நம்பர் 4 பேட்ஸ்மேனாக களமிறங்கும் இயான் மோர்கன் ஆட்டத்தின் தன்மைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றி கொண்டு சிறப்பான ஷாட்களை விளாசும் திறமை கொண்டவர்கள். இங்கிலாந்தின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் ஒரு இன்னிங்ஸை கட்டமைக்கும் போது மோர்கனின் பேட்டிங் அந்த அணிக்கு மிகுந்த பக்கபலமாக அமைகிறது.

ஆட்டத்தினை எந்த வகையிலும் மாற்றும் திறன் கொண்டதாக அதிரடி பேட்ஸ்மேன் இயான் மோர்கனின் பேட்டிங் இருக்கும். இவரது கிரிக்கெட் ஷாட்கள் காண்போரின் இமைகளுக்கு மிகுந்த விருந்து படைக்கும் வகையில் அமைந்து சிறப்பானதாக இருக்கும். தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை கையாண்டு சில பெரிய சிக்ஸர்களை விளாசும் அளவிற்கு திறமை கொண்டவர் இயான் மோர்கன்.

அயர்லாந்தைச் சேர்ந்த இவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 21 பந்துகளில் அரைசதம் விளாசியுள்ளார். இதன்மூலம் ஓடிஐ கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் விளாசிய பேட்ஸ்மேன் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக வலம் வருகிறார். மிடில் ஆர்டரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை கொண்ட பேட்ஸ்மேனான இயான் மோர்கன் உலகக் கோப்பை தொடரில் அதிக சிக்ஸர்களை விளாச வாய்ப்புள்ளது.

#3 மார்டின் கப்தில்

Martin guptil
Martin guptil

அதிரடி அனுபவ நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் மார்டின் கப்தில் தனது இயல்பான அதிரடி ஆட்டத்தின் மூலம் எதிரணி பௌலிங்கை சிதைக்கும் திறமை கொண்டவர். ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிரிடியாக விளையாடக் கூடியவர். மார்டின் கப்தில் தனது சக தொடக்க வீரரான காலின் முன்ரோவுடன் இனைந்து ஒரு சிறப்பான பேட்டிங் கட்டமைப்பை நியூசிலாந்து அணிக்காக வைத்துள்ளனர்.

நியூசிலாந்து அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் 300ற்கு அதிகமான இலக்கை சாதரணமாக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எட்டியுள்ளார். இங்கிலாந்து மைதானத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களுள் மார்டின் கப்தில் முதன்மையாக உள்ளார். இங்கிலாந்து ஆடுகளத்தில் சுதந்திரமாக தனது பேட்டிங்கை மார்டின் கப்தில் வெளிபடுத்தியுள்ளார்.

32 வயதான மார்டின் கப்திலின் சமீபத்திய ஆட்டத்திறன் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவரது ஸ்டைலிஷ் பேட்டிங் மூலம் அதிக ரன்களை குவிக்க வாய்ப்புள்ள வீரராக மார்டின் கப்தில் திகழ்கிறார். 2015 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்களை குவித்த இவர் 2019 உலகக் கோப்பை தொடரிலும் பவர் ஹிட்டிங் ஷாட்களின் மூலம் சிகஸர்களை விளாசுவார். உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்று அதிரடி தொடக்கத்தை அளித்துள்ளார்.

#2 கிறிஸ் கெய்ல்

Chris Gayle
Chris Gayle

"யுனிவர்சல் பாஸ்" என்றழைக்கப்படும் மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் சிக்ஸர்ளுக்கு அதிக பெயர் போனவர். 39 வயதான அனுபவ பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் இந்தாண்டு தொடக்கத்தில் தனது சொந்த மண்ணில் இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் தனது இயல்பான பழைய ஆட்டத்திறனை வெளிகொணர்ந்து வந்தார். இந்த தொடரில் கெய்ல் 39 சிக்ஸர்களை விளாசியதன் மூலம் இருதரப்பு ஒருநாள் தொடர்களில் அதிக சிக்ஸர்களை விளாசிய பேட்ஸ்மேன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

2019 உலகக் கோப்பை தொடரில் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான மேற்கிந்தியத் தீவுகளின் முதல் போட்டியில் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்களை விளாசிய பேட்ஸ்மேன் என்ற சாதனையை முறியடித்தார். இவர் தற்போது 40 சிக்ஸர்களை உலகக் கோப்பை தொடர்களில் விளாசியுள்ளார். தென்னாப்பிரிக்க அதிரடி ஆட்டக்காரர் ஏபி டிவில்லியர்ஸ் இவரை விட 3 சிக்ஸர்கள் பின்தங்கி உள்ளார்.

எவ்வகையான வலிமையான பௌலிங்கையும் சிதைக்கும் வகையில் இவரது தற்போதைய ஆட்டத்திறன் விளங்குகிறது. அதிரடி சிக்ஸர்களை விளாசி உலகின் சிறந்த ஹிட்டராக வலம் வருகிறார். எதிரணியின் அனல் பறக்கும் பந்துவீச்சை தனது பேட்டிங் மூலம் மைதானத்திற்கு வெளியே அனுப்பும் திறமை கொண்டவர். இவர் பவுண்டரிகளை விளாசுவதை விட சிக்ஸர்களை விளாசவே அதிகம் விரும்புவார். இதனால் அதிக சிக்ஸர்களை விளாச வாய்ப்புள்ள வீரர்களுள் முன்னணி வீரராக கிறிஸ் கெய்ல் திகழ்கிறார்.

#1 ரோகித் சர்மா

Rohit Sharma
Rohit Sharma

இந்தியாவின் ஹிட்மேன் என்றழைக்கப்படும் ரோகித் சர்மா உலகின் தலைசிறந்த ஒருநாள் தொடக்க வீரராக வலம் வருகிறார். இவருடைய அதிரடி ஆட்டத்திறனின் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் பௌலர்களுக்கு அதிக இடற்பாடுகளை வெளிபடுத்தி வருகிறார். இந்திய அணியின் டாப் ஆர்டரில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான இருந்துள்ளார்.

2015ற்குப் பின்னர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை விளாசியவர் என்ற பெருமையை ரோகித் சர்மா தன்வசம் வைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 3 இரட்டை சதங்களுக்கு சொந்த காரரண இவர் அதிக சிக்ஸர்களை சர்வதேச கிரிக்கெட்டில் விளாசியுள்ளார். ரோகித் சர்மா நிலைத்து விளையாட ஆரம்பித்துவிட்டால் அவரை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான ஒன்றாகும். பெரிய ரன்களை கண்டிப்பாக விளாசி விடுவார். வேகப்பந்து வீச்சாளர்களை சரியாக எதிர்கொள்பவர் ரோகித் சர்மா.

இந்திய அணியின் துனைக்கேப்டனான இவருக்கு பேட்டிங் சாதகமான மைதானமாக இருந்து விட்டால் கண்டிப்பாக ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒரு பெரிய ரன்களை ரோகித் சர்மா விளாசுவார். தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் உலக கிரிக்கெட் சில சிறப்பான ஷாட்களை ரோகித் சர்மா அடித்துள்ள காரணத்தால் உலகக் கோப்பை தொடரில் அதிக சிக்ஸர்களை விளாச அதிக வாய்ப்புள்ளது.

Quick Links