உலகக் கோப்பை 2019: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற உதவிய 5 முக்கிய தருணங்கள்

Bangladesh Cricket Team
Bangladesh Cricket Team

கிரிக்கெட் அரங்கில் ஒரு காலகட்டத்தில் வங்கதேசம் மற்ற கிரிக்கெட் அணிகளுக்கு எதிராக சுமாரான ஆட்டத்தை மட்டுமே வெளிபடுத்தி வந்தது. குறிப்பாக உலகக் கோப்பை தொடரில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டிகளில் விளையாடும் எதிரணிக்கு இலவச புள்ளிகள் போல் கிடைக்கும்.

ஆனால் அந்த வழக்கத்தை மஷ்ரஃப் மொர்டாஜா தலைமையிலான வங்கதேசம் தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் முற்றிலுமாக மாற்றியுள்ளது. 2019 உலகக் கோப்பையில் தனது முதல் தகுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியில் வங்கதேசம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது ஆதிக்கத்தை உலகிற்கு அறிவித்துள்ளது.

9 போட்டிகள் கொண்ட தகுதிச் சுற்றில் வங்கதேசம் தனது முதல் போட்டியில் வென்று அதிரடி தொடக்கத்தை அளித்துள்ளது. வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா தோல்வியை தழுவும் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

காரணம்?

2017ல் வங்கதேசம் தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது தோல்வியை தழுவியது. அந்த தொடரில் கிடைத்த அனுபவம் மூலம், முழுவதும் மாற்றத்துடன் திகழும் இங்கிலாந்து மைதானத்தில் சிறப்பான ஆட்டத்தை தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக வெளிபடுத்த முடிந்தது.

வங்கதேசத்திற்கு இந்த வெற்றி சுலபமாக வந்ததது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. நாம் இங்கு வங்கதேசத்தின் வெற்றிக்கு காரணமான 5 முக்கிய தருணங்கள் பற்றி காண்போம்.

#1 சௌம்யா சர்கரின் அதிரடி தொடக்கம்

Tamim & Sarkar
Tamim & Sarkar

ஒரு வருடத்திற்கு முன்பு சௌம்யா சர்கரின் ஆட்டத்திறனை காணும் போது அவர் உலகக் கோப்பை தொடரில் இடம்பெற வாய்ப்புள்ளதா என்பது போல் தெரிந்தது. அவரது மோசமான ஆட்டத்தால் அணி நிர்வாகம் வங்க தேச அணியிலிருந்து கழட்டிவிட்டது.

இருப்பினும் அதன்பின் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணி நிர்வாகத்தின் கவணத்தை தன் பக்கம் இழுத்தார். இதனால் உலகக் கோப்பை தொடருக்கும், வங்கதேசம் அயர்லாந்து சுற்றுப்பயணம் விளையாடிய தொடரிலும் சௌம்யா சர்கருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இவர் லிஸ்ட்-ஏ போட்டிகளில் இரட்டை சதம் விளாசி தான் விளையாடிய அணியை தாக்கா பிரிமியர் லீக் சேம்பியன் பட்டத்தை வெல்ல காரணமாக இருந்தார்.

அத்துடன் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இவர் விளையாசிய தொடர்ச்சியான அரைசதத்தின் மூலம் வங்கதேசம் முதல் முறையாக அந்நிய மண்ணில் முத்தரப்பு தொடரை வென்று சாதனை படைத்ததது.

தற்போது உலகக்கோப்பை தொடரிலும் இதே ஆட்டத்திறனை தென்னாப்பிரிக்காவிற்கு எதிராகவும் வெளிபடுத்த தொடங்கியுள்ளார். மறுமுனையில் தமீம் இக்பால் தனது டாட் பந்துகளை ரன்களாக மாற்ற தடுமாறிக் கொண்டிருந்தார். சர்கர் 30 பந்துகளில் 42 ரன்களை விளாசினார். இதன்மூலம் அந்த அணி ஆரம்பம் முதலே 6 ரன்-ரேட்டுடன் தொடங்கியது. இவரது அதிரடி ஆட்டம் வங்கதேசத்திற்கு ஒரு அடித்தளமாக அமைந்தது.

#2 முஷ்டபிசுர்-ஷகிப் அருமையான பார்ட்னர் ஷிப்

Mustafizur & Shakip
Mustafizur & Shakip

சௌம்யா சர்கரின் அதிரடி ஆட்டம் மூலம் வங்கதேசத்திற்கு ஒரு சிறப்பான தொடக்கமாக அமைந்தது. ஆனால் ஷகிப் அல் ஹாசன் மற்றும் முஷ்டபிசுர் ரஹீம்-மின் ஆட்டத்திறன் சௌம்யா சர்கரின் ஆட்டத்திறனை மறக்க வைத்தது. இரு அனுபவ பேட்ஸ்மேன்களும் தென்னாப்பிரிக்க பௌலர்களின் பந்துவீச்சை மிகவும் கணித்து விளையாட தொடங்கினர்.

இருவரும் சரியான ரன்-ரேட்டில் தங்களது ஆட்டத்தை விளையாடத் தொடங்கினர். வங்கதேசத்தின் ரன்-ரேட்டினை 6க்கும் கீழாக குறையாமல் பாரத்துக் கொட்டனர். ஷகிப் அல் ஹாசன் 84 பந்துகளில் 75 ரன்களும், முஷ்டபிசுர் ரஹீம் 80 பந்துகளில் 78 ரன்களையும் விளாசினர். இவர்கள் பார்ட்னர் ஷிப்பில் 142 ரன்கள் மொத்தமாக குவிக்கப்பட்டது.

#3 மெக்மதுல்லாவின் சிறப்பான ஃபினிஷிங்

Mahamadhulla
Mahamadhulla

உண்மையாக மெக்மதுல்லாவைப் பற்றி கூறும்போது, உலகில் இவர் ஒரு கவணிக்கப்படாத சிறப்பான கிரிக்கெட் வீரர். வங்கதேசத்தின் வெற்றிகளில் இவருடைய பங்களிப்பு கடைநிலையில் அதிகம் உதவியுள்ளது.

இதே ஆட்டத்திறனை இன்றைய ஆட்டத்திலும் வெளிகொண்ர்ந்து 33 பந்துகளில் 46 ரன்களை விளாசி வங்கதேசத்தின் ரன்களை 330 ரன்களாக உயர்த்தினார். பெரும்பாலும் வங்கதேசம் 305 அல்லது 310 தான் குவிக்கும் என அனைவரும் எதிர்பார்த்திருப்பர்.

வங்கதேச கிரிக்கெட் நிர்வாகம் இவரை 6வது பேட்ஸ்மேனாக களமிறக்கி மீண்டும் மீண்டும் தவறு செய்து வருகிறது. எனவே தனது தவறை சரிசெய்து மெக்மதுல்லாவை 5வது பேட்ஸ்மேனாக களமிறக்க வேண்டும்.

#4 ஷைஃபுதினின் சிறப்பான பௌலிங்

Saifudhin
Saifudhin

வங்கதேசத்தின் எதிர்கால தூணாக ஷைஃபுதின் திகழ்வார் என்ற மஷ்ரஃப் மொர்டாஜாவின் கூற்றுக்கு இதுவே தக்க பதிலாக அமைந்துள்ளது. தென்னாப்பிரிக்க அணி கடைசி ஓவர் வரை தனது தோல்விக்கு இடம் கொடுக்காமல் விளையாடியது. மிடில் ஆர்டரில் வென் டேர் துஸன் சிறப்பான மற்றும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி தென்னாப்பிரிக்காவை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லும் நோக்கில் பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.

இருப்பினும் ஷைஃபுதினின் சிறப்பான பௌலிங்கால் வென் டேர் துஸனின் இலக்கு தகர்க்கப்பட்டது. வங்கதேசம் மிடில் ஓவரில் விக்கெட்டுகளை வீழ்த்த தடுமாறிய போது இளம் வீரர் ஷைபுதினுக்கு ஓவர்கள் வழங்கப்பட்டது. அவர் வீசிய முதல் பந்திலேயே துஸனின் விக்கெட் வீழ்த்தப்பட்டது. அதன் பின்னர் ஆட்டத்தின் போக்கு வங்கதேசத்திற்கு சாதகமாக அமைந்தது.

#5 அருமையான பந்துவீச்சு திறன்

Mustafizur & Soumya sarkar
Mustafizur & Soumya sarkar

ஷைஃபுதினுடன் மற்ற பௌலர்களும் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டனர். ஷகிப் அல் ஹாசன் மிக முக்கிய விக்கெட்டான எய்டன் மக்ரமின் விக்கெட்டை வீழ்த்தினார்.

அத்துடன் மெஹீடி ஹாசன் மற்றும் மிராஜ் ஆகியோரும் சிறப்பான பௌலிங்கை மேற்கொண்டனர். மெஹீடி ஹாசன், ஃபேப் டுயுபிளஸ்ஸியின் விக்கெட்டை தந்திரமாக வீழ்த்தினார். மிராஜ் அருமையான எகனாமிக்கல் பௌலிங்குடன் பந்து வீச்சை மேற்கொண்டார். இவர் 10 ஓவர்களை வீசி 44 ரன்களை மட்டுமே தனது பௌலிங்கில் அளித்தார்.

நட்சத்திர வீரர் முஷ்டபிசுர் ரகுமான் தென்னாப்பிரிக்காவின் மிக முக்கிய விக்கெட்டுகளான டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், ஜே பி டுமினி ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

வங்கதேசம் இதே ஆட்டத்திறனை குழுவாக இனைந்து இனிவரும் போட்டிகளிலும் தொடருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Quick Links