2019 உலகக் கோப்பை தொடரில் விளையாட விரும்பிய ஏபி டிவில்லியர்ஸின் விருப்பத்தை நிராகரித்ததற்கான காரணத்தை விளக்கிய தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம்

AB Devillers
AB Devillers

நடந்தது என்ன?

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தென்னாப்பிரிக்க கிரிக்கெட் லெஜன்ட் ஏபி டிவில்லியர்ஸ் 2019 ஐசிசி உலகக் கோப்பை தொடரில் விளையாட விரும்பினார். ஆனால் அவரது விருப்பத்தை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நிராகரித்தது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தற்போது அந்த விவகாரத்தினைப் பற்றியும் அதற்கான காரணத்தை பற்றியும் விளக்கி கூறியுள்ளது.

பிண்ணனி

2018ஆம் ஆண்டு ஏபி டிவில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வினை அறிவித்தார். இதற்கு காரணமாக ஏபி டிவில்லியர்ஸ் கூறியதாவது, தன்னுடைய ஆற்றலை முடிந்த அளவிற்கு கிரிக்கெட்டில் செலவிட்டு விட்டதாகவும், 14 வருடங்கள் என்ற நீண்ட கால கிரிக்கெட்டை தான் விளையாடியதாகவும் தெரிவித்துள்ளார். இதனை ஒரு காணோளியாக பதிவு செய்து உலகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இருப்பினும் கிரிக்கெட் ரசிகர்கள் ஏபி டிவில்லியர்ஸ் மீண்டுமொரு முறை தென்னாப்பிரிக்க சட்டையில் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். MR.360 என்றழைக்கப்படும் ஏபி டிவில்லியர்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் 53.50 என்ற சராசரியுடன் 9577 ரன்களை குவித்துள்ளார்.

கதைக்கரு

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகத் தலைவர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் திரு. லின்டா ஜோன்டி 2018ல் ஏபி டிவில்லியர்ஸ் ஓய்வு பெறக் கூடாது என்ற தன் கோரிக்கையை முன் வைத்தார். அத்துடன் ஏபி டிவில்லியர்ஸிற்கு இரு சிறு தொடர்களில் விளையாடும் வாய்ப்பை அளித்து 2019 உலகக் கோப்பையில் ஒரு புதிய வீரராக களமிறக்க ஜோன்டி திட்டமிட்டுருந்தார்.

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் அதன் சொந்த மண்ணில் நடந்த இலங்கை மற்றும் பாகிஸ்தான் தொடர்களில் ஏபி டிவில்லியர்ஸ் விளையாடி தன்னை உலகக் கோப்பைக்கு தகுதியான வீரராக நிருபிக்குமாறு கூறியிருந்தது. ஆனால் அவர் பாகிஸ்தான் சூப்பர் லீக் மற்றும் வங்கதேச பிரிமியர் லீக் ஆகிய உள்ளூர் டி20 தொடர்களில் விளையாட சென்று விட்டார். அவர் தனது முடிவில் சிறிதும் தளராது உறுதியாக இருந்தார்.

ஏபி டிவில்லியர்ஸ் மீண்டும் தென்னாப்பிரிக்க அணியில் விளையாட வேண்டும் என விரும்பிய கேப்டன் ஃபேப் டுயுபிளஸ்ஸி, பயிற்சியாளர் ஓட்டிஸ் கிப்ஸன் மற்றும் தென்னாப்பிரிக்க தேர்வுக்குழு ஆகியோருக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இதனால் ஜோன்டி தலைமையிலான தென்னாப்பிரிக்க தேர்வுக்குழு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்தது. அதன்படி தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அளித்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு சில இளம் வீரர்கள் தென்னாப்பிரிக்க அணியில் இடம்பிடித்துள்ளனர்.

ஏபி டிவில்லியர்ஸ் தனது முடிவில் சிறிதும் மாற்றிக்கொள்ளாதவராக இருந்தாலும், உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக இன்றளவும் இவர் திகழ்ந்து வருகிறார்.

ஏபி டிவில்லியர்ஸ் 15பேர் கொண்ட தென்னாப்பிரிக்க உலகக் கோப்பை அணியில் இடம்பெறா விட்டாலும் ரசிகர்கள் மனதிலிருந்து எப்பொழுதும் நீங்கவில்லை.

அடுத்தது என்ன?

தென்னாப்பிரிக்கா 2019 உலகக் கோப்பையில் தகுதிச் சுற்றில் முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. இந்த அணி தனது 4வது போட்டியில் அதிரடி மன்னர்களை கொண்ட மேற்கிந்தியத் தீவுகளை ஜீன் 10 அன்று ஹாம்ஸைர் பௌல் மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது.

Quick Links