பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி மேற்கொள்ள உள்ள மூன்று விஷயங்கள் 

Three things India need to do to win against Pakistan
Three things India need to do to win against Pakistan

#3.ஆடும் லெவனில் குல்தீப் யாதவிற்கு பதிலாக ரவிந்திர ஜடேஜா:

India v Australia - ODI Series : Game 5
India v Australia - ODI Series : Game 5

இதுவரை தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் ஆடும் லெவனில் ரவிந்திர ஜடேஜா இடம் கிடைக்காமல் தவித்து வந்தார். முக்கியமான கட்டத்தில் விக்கெட்டை வீழ்த்த சிரமப்படுதல் போன்ற காரணங்கள் இருந்தாலும் பயிற்சி ஆட்டங்களில் சிறப்பாக ரன்களைக் குவித்திருந்த ரவீந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பளிக்கப்படாமல் சுழற்பந்து வீச்சாளர் சாஹலுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது. சாஹலின் பவுலிங் துல்லியமாக இருப்பதால், அவருடன் இணைந்து ரவிந்திர ஜடேஜா ஒரு சிறந்த பார்ட்னராக உருவெடுக்கும் நோக்க அடிப்படையில் ஆடும் லெவனில் இணைக்கப்படலாம். கடந்த ஆண்டில் இங்கிலாந்து மைதானங்களில் நடைபெற்ற ஆட்டங்களிலும் சமீபத்தில் முடிந்த ஐபிஎல் தொடரிலும் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக செயல்பட்டு உள்ளார். தற்போது இவரது பந்துவீச்சில் பெரும்பாலான பந்துகள் சுழலாமல் இருந்தாலும் பேட்ஸ்மேன்களுக்கு சற்று அசௌகரியமான நிலைமைகளை ஏற்படுத்தி வருகின்றது. ஷிகர் தவான் ஒருவர் மட்டுமே இடது கை பேட்ஸ்மேனாக அணியில் இடம் பெற்று தற்போது விலகியுள்ள நேரத்தில் கூடுதல் வலதுகை பேட்ஸ்மேனாக ரவீந்திர ஜடேஜா இந்திய அணிக்கு பங்காற்ற உள்ளார். மேலும், அணியின் லோவர் மிடில்-ஆர்டர் பேட்டிங்கில் களமிறங்கும் இவர் டெத் ஓவர்களில் ஓரளவுக்கு ரன்களை குவிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். எனவே, இன்றைய ஆடும் லெவனில் ரவீந்திர ஜடேஜா இணைக்கப்படுவது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

Quick Links

Edited by Fambeat Tamil