ரஞ்சிக்கோப்பை: பஞ்சாப் அணியில் மீண்டும் யுவராஜ் சிங்

Yuvi
Yuvi

ரஞ்சிக்கோப்பையில் குழு - 'பி' க்கான டெல்லி மற்றும் பஞ்சாப் போட்டி நவம்பர் 28ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் "யுவராஜ் சிங்" பஞ்சாப் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.2018-19 ஆண்டிற்கான ரஞ்சிக்கோப்பையில் தனது முதல் போட்டியில் யுவராஜ் சிங் விளையாட உள்ளார்.

யுவராஜ் சிங் வருகையினால் பஞ்சாப் அணி மேலும் வலுவடைந்துள்ளது. ஏற்கனவே பஞ்சாப் அணி தனது முதல் இரண்டு போட்டிகளில் ஆந்திரா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய அணிகளை எதிர்கொண்டு சிறப்பாக விளையாடி உள்ளது. ஆனால் இரு போட்டிகளுமே டிராவில் தான் முடிந்தன.

36 வயதான யுவராஜ் சிங் கடைசியாக ஜீன் 2017ல் இந்திய அணிக்காக விளையாடினார். அதன் பிறகு இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை

இவர் பஞ்சாப் அணியின் அடுத்த இரண்டு ரஞ்சிபோட்டிகளிலும் விளையாட உள்ளார். பஞ்சாப் அணி டிசம்பர் 6ல் ஹிமாச்சல் பிரதேசம் அணியையும் , டிசம்பர் 24ல் தமிழ்நாடு அணியையும் எதிர்கொள்ள உள்ளது.

இளம் வீரர் மற்றும் வளர்ந்து வரும் வீரரான சுப்மன் கில் அடுத்த இரு போட்டிகளிலும் விளையாட மாட்டார். ஏனெனில் நியூசிலாந்திற்கு எதிரான இந்திய ஏ அணியில் இடம்பெற்றுள்ளதால் அவர் நியூசிலாந்தில் உள்ளார். யுவராஜ் சிங் சுபமன் கில்-ற்கு பதிலாக களமிறங்க உள்ளார்

டெல்லி- பஞ்சாப் போட்டி இரு அணிகளுக்குமே மிக முக்கியமான போட்டியாகும். டெல்லி அணி ஹதராபாத் மற்றும் இமாச்சலப் பிரதேசம் அணிகளுக்கெதிரான போட்டியில் டிரா ஆகி உள்ளது. பஞ்சாப் அணியும் தாம் விளையாடிய இரு போட்டிகளிலுமே டிரா ஆகியுள்ளது. எனவே இரு அணிகளும் 2018-19 ரஞ்சிக்கோப்பையில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்ய மிகத் தீவிரமாக களத்தில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதிஷ் ராணவின் கேப்டன்ஷிப் டெல்லி அணிக்கு சிறப்பாக அமையவில்லை. ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்சில் ஹதராபாத் அணியின் பேட்ஸ்மேன்களை கட்டுபடுத்த இயலாததால் அப்போட்டி டிராவில் முடிந்தது.

அனுபவ வீரர் கௌதம் காம்பீர் ஹதராபாத் ஆடுகளத்தில் நடந்த போட்டியில் காயம் காரணமாக விலகியிருந்தார். சொந்த மண்ணில் நடைபெறும் போட்டியில் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவ்திப் சைய்னி எஞ்சிய போட்டிகளில் விளையாடமாட்டார். ஏனெனில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய ஏ அணியில் இடம்பிடித்துள்ளதால் அவர் நியூசிலாந்து சென்று விட்டார்.

டெல்லி அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கௌதம் காம்பீரின் பங்களிப்பு கண்டிப்பாக தற்போது டெல்லி அணிக்கு தேவைப்படுகிறது. ஏனெனில் ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் பேட்டிங் வரிசை சிறப்பாக அமையவில்லை.

டெல்லி அணியின் தொடக்க வீரர் ஹிட்டன் தலால் (93) மற்றும் மிடில் ஆர்டர் ஆல்ரவுண்டர் லலித் யாதவ் (77) , கேப்டன் நிதிஷ் ராண(82) ஆகியோர் ஹதராபாத்திற்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடியும் தங்களது சதத்தை தவறவிட்டனர். ஆனால் இவர்களது இந்த ரன் வேட்டையினால் தான் முதல் இன்னிங்சில் ஹதராபாத் அடித்த 460 ரன்களை சிறிது ஈடுகட்ட முடிந்தது.

இமாச்சலப் பிரதேசத்திற்கு எதிராக முதல் இன்னிங்சில் 86 மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 106 ரன்களை விளாசிய டெல்லி அணி வீரர் "துருவ் சொரே " ஹதராபாத்திற்கு எதிரான போட்டியில் வெறும் 9 ரன்களை மட்டுமே எடுத்தார்.

எழுத்து : பிடிஐ

மொழியாக்கம்: சதீஸ்குமார்

Edited by Fambeat Tamil