சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவில் உள்ள யுவராஜ் சிங்

Yuvraj Singh
Yuvraj Singh

அனுபவ அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டு உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 தொடர்களில் பங்கேற்கப்போவதாக முடிவெடுத்துள்ளார். சிறப்பான அனுபவ ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் முன்னணி வீரராக இருந்தவர். அத்துடன் உள்ளூர் கிரிக்கெட்டிலும் அசத்தியுள்ளார். சமீபத்தில் இந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பங்கேற்ற இவர் பெரும்பாலும் ஆடும் XI-ல் இடம்பெறமாலேயே இருந்துள்ளார்.

யுவராஜ் சிங் இவ்வருட ஐபிஎல் சீசனில் தொடக்க போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது முதல் போட்டியிலேயே டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக அரை சதம் விளாசினார். ஆனால் அந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறவில்லை. அதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் யுஜ்வேந்திர சகாலின் பந்துவீச்சில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி தான்னுடைய ஆட்டத்திறனை உலகிற்கு அறிவித்தார்.

ஆனால் இவரது அதிரடி ஆட்டம் நிலைக்கவில்லை. அடுத்த இரண்டு போட்டிகளில் 18 மற்றும் 4 ரன்களை மட்டுமே எடுத்ததால் மும்பை அணி நிர்வாகம் இவரை ஆடும் XI-லிருந்து நீக்கியது. அதற்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி யுவராஜ் சிங்-கை கண்டு கொள்ளவில்லை. மும்பை அணி 2019 ஐபிஎல் தொடரை வென்றுள்ளது. தனது கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவு எளிதில் முடிந்து விட கூடாது என்பதற்காக யுவராஜ் சிங் மற்றொரு யோசனையில் தனது கவணத்தை செலுத்தியுள்ளார்.

"டைம்ஸ் ஆஃப் இந்தியா" பத்திரிகையில் வெளிவந்த தகவலின்படி யுவராஜ் சிங் வெளிநாட்டு டி20 லீக்கில் கலந்து கொள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அனுமதிக்காக காத்துக் கொண்டுள்ளார். மேலும் தற்போது இந்திய அணியில் யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம். மேலும் அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் இளம் வீரர்களையே அதிகம் விரும்புகின்றனர்.

இந்திய கிரிக்கெட் வாரியத்திடமிருந்து கிடைத்த தகவலின்படி,

" யுவராஜ் சிங் தனது சர்வதேச மற்றும் முதல்தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவில் உள்ளார். மேலும் யுவராஜ் சிங் கனடா டி20 மற்றும் அயர்லாந்தில் நடைபெறும் இரோ டி20 ஸ்லாம் மற்றும் ஹாலாந்து ஆகிய டி20 தொடர்களில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது."

சமீபத்தில் இந்திய அணியின் மற்றொரு அற்புதமான பந்துவீச்சாளர் இர்ஃபான் பதான் கரேபியன் பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்க பதிவு செய்திருந்தார். ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் இவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறாததால் வெளிநாட்டு டி20 லீக்கில் பங்கேற்க அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டது.

இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி தெரிவித்தவதாவது,

" இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிபந்தனையால் இர்ஃபான் பதான் தனது பெயரை கரேபியன் பிரிமியர் லீக்கிலிருந்து நீக்கி கொண்டார். யுவராஜ் சிங் எங்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் முன் நிபந்தனைகளை சற்று பார்க்க வேண்டும். யுவராஜ் சிங் முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் பிசிசிஐ-இன் டி20 வீரர்கள் பட்டியலில் இடம்பெறுவார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய வீரர்கள் வெளிநாட்டு டி20 லீக்கில் பங்கேற்கலாம். நிபந்தனைகள் அனைவருக்கும் ஒரே மாதிரியானது ஆகும்.

Quick Links

Edited by Fambeat Tamil