Create
Notifications
Favorites Edit
Advertisement

உலகின் தற்போதைய தலைசிறந்த 5 கால்பந்து மேனேஜர்கள்

ANALYST
முதல் 5 /முதல் 10
130   //    Timeless

pep guardiola
pep guardiola

ஒரு கால்பந்து அணியில் முக்கியத்துவம் வாய்ந்த நபர் யாரென்றால், அந்த அணியின் மேனேஜர் தான் என அனைத்து ரசிகர்களும் ஒத்துக்கொள்வார்கள். ஏனென்றால், ஒரு அணியை திறம்பட வழி நடத்துவதற்கும் வெற்றிகரமான அணியாக மாற்றும் பொறுப்பும் மேனேஜரிடமே உள்ளது. மற்ற அணிகளை விட குறைவான வளமே கொண்டிருந்தாலும், களத்தில் தங்களது திட்டத்தை திறமையாக பயன்படுத்திய மவுரிசியோ பொசெட்டினோ மற்றும் தாமஸ் டச்செல் என்ற இரண்டு பயிற்சியாளர்களை சமீபத்திய சாம்பியன்ஸ் லீக் தொடரில் நாம் பார்த்தோம்.

மற்றொரு புறம், ஜோஸ் மவுரினோ போன்ற புகழ்பெற்ற மேனேஜர்கள், தங்கள் கீழுள்ள வீரர்களின் திறமையை மேம்படுத்த முடியாமல் தோல்வியை சந்தித்து வருகிறார்கள். தற்போதைய நிலையில், உலகம் முழுவதும் பல புகழ்பெற்ற மேனேஜர்கள் இருந்து வருகிறார்கள். அவர்களில் இருந்து சிறந்த மேனேஜர்களை தேர்ந்தெடுப்பது மிகவும் சிரமமான விஷயம்.

இருந்தாலும், கால்பந்து உலகில் இப்போது உள்ள சிறந்த ஐந்து மேனேஜர்கள் யாரென்றும், ஏன் இந்த பட்டியலில் அவர்கள் இடம்பெற்றுள்ளார்கள் என்ற காரணத்தையும் உங்களுக்காக நாங்கள் கூறுகிறோம்.

5. மவுரிசியோ பொச்செடினோ (டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்)

mauricio pochettino
mauricio pochettino

அர்ஜெண்டினாவைச் சேர்ந்த இவர் பல ஆண்டுகள் பயிற்சியாளராக இருந்த அணுபவம் பெற்றவர். ஸ்பெயின் அணியான எஸ்பயனால் கிளப்பில் தனது முத்திரையை பதித்த மவுரிசியோ, அதன் பிறகு இங்கிலாந்திற்குச் சென்றார். சவுத்தேம்டன் அணியில் இவர் சிறிது காலம் பணியாற்றிய போதும் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியில் சேர்ந்த பிறகே உலகின் சிறந்த கால்பந்து மேனேஜர்களில் ஒருவர் என அடையாளம் காணப்பட்டார்.

ஹாரி கேன், டெலி அலி, கெய்ரன் ட்ரிப்பியர், எரிக் டையர் மற்றும் ஹாரி விங்ஸ் போன்ற வீரர்களின் அசுரத்தனமான வளர்ச்சிக்கு முக்கிய காரனம் மவுரிசியோ தான். ஒவ்வொரு வீரரிடம் இருக்கும் தனித் திறமையை கண்டுபிடித்து அதை வெளிக்கொணர்வதே மவுரிசியோவின் முக்கிய திறனாக கருதப்படுகிறது. இங்கிலாந்தின் மற்ற அணிகளை விட டோட்டன்ஹாம் அணியிடம் குறைவான நிதி ஆதாரத்தை கொண்டியிருந்தாலும் இந்த ஆண்டு ப்ரீமியர் லீக் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளுள் ஒன்றாக மாற்றியுள்ளார் மவுரிசியோ.

4. டிகோ சிமியோன் (அட்லெட்டிகோ மாட்ரிட்)

diego simeone
diego simeone

2011-ம் ஆண்டு அட்லெட்டிகோ மாட்ரிட் அணியின் பயிற்சியாளராக ஆனார் டிகோ சிமியோன். அன்றிலிருந்து அட்லெட்டிகோ மாட்ரிட் அணியை பல உயரங்களுக்கு இட்டுச் சென்றுள்ளார் சிமியோன். தான் பயிற்சியாளரான ஒரு வருடத்திலேயே யூரோப்பா லீக் கோப்பையை வென்றதோடு அடுத்த வருடமே பலம் பொருந்திய ரியல் மாட்ரிட் அணியை வென்று கோப்பா டெல் ரே கோப்பையை அட்லெட்டிகோ மாட்ரிட் அணி வெல்ல காரணமாக இருந்தார்.

இருந்தாலும், 2013-14 சீசனே இவரது முக்கியமான காலகட்டம் என கருதப்படுகிறது. இந்த சீசனில் தான், இவரது பயிற்சியின் கீழ், 1996-ம் ஆண்டுக்குப் பிறகு அட்லெட்டிகோ மாட்ரிட் லா லீகா கோப்பையை வென்றது. அதுமட்டுமல்லாமல், அந்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்லும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், தனது பரம ஏதிரியான ரியல் மாட்ரிட் அணியிடம் இறுதிப் போட்டியில் தோல்வியுற்றது.

Advertisement

இவரது பயிற்சியின் கீழ் அட்லெட்டிகோ மாட்ரிட் அணி தடுப்பாட்டத்தில் சிறந்து விளங்குகிறது. தற்போதைய நிலையில், இவரைப் போன்று வீரர்களை நிர்வகிக்கும் திறனும் கட்டுப்பாடும் கொண்ட மேனேஜர்கள் ஒரு சிலரே உள்ளனர்.

3. மசிமிலியானோ அலிக்ரி (ஜூவெண்டஸ்)

massimiliano allegri
massimiliano allegri

இத்தாலியைச் சேர்ந்த மசிமிலியானோ அலிக்ரி, 2010-11-ம் ஆண்டின் சீரி ஏ கோப்பையை ஏசி மிலன் அணியின் பயிற்சியாளராக இருந்து வென்றதன் மூலம், மொத்தம் ஐந்து முறை இந்த கோப்பையை வென்றவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் ஜூவெண்டஸ் அணியின் பயிற்சியாளராக இருந்து நான்கு முறை சீரி ஏ கோப்பை வென்றுள்ளார் அலிக்ரி. எதிரணியை நன்கு ஆய்வு செய்து அதற்கேற்றார்ப் போல் அணியின் ஆட்ட வழிமுறையை மாற்றக்கூடிய திறன் படைத்தவர் இவர்.

இப்போதும் கூட, ஜூவெண்டஸ் அணிக்காக ரொனால்டோவை தன் கீழ் விளையாட வைத்து அந்த அணியை ஐரோபிய கண்டத்தின் மிக ஆபத்தான அணியாக மாற்றியுள்ளார். ஆனால் இத்தாலியை தாண்டி இவரது திறமை வேறு எந்த நாட்டிலும் சோதித்து பார்க்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1 / 2 NEXT
Advertisement
Advertisement
Fetching more content...