ப்ரோ கபடி 2019, மேட்ச் 48: தமிழ் தலைவாஸ் vs புனேரி பல்தான்ஸ், முன்னோட்டம் மற்றும் உத்தேச 7

Tamil Thalivas vs Puneri Paltans
Tamil Thalivas vs Puneri Paltans

தமிழ் தலைவாஸ் அணி தனது சொந்த மண்ணில் விளையாடிய முதல் முதல் போட்டியில் வென்று அதிரடி தொடக்கத்தை வெளிபடுத்த தவறியுள்ளது. முன்னாள் சேம்பியன் பெங்களூரு புல்ஸ் அணியிடம் அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அவர்களது ரசிகர்கள் முன்னிலையிலேயே மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இப்போட்டியில் மன்ஜீத் சில்லர் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவிட்டார்‌. அத்துடன் 2வது பாதியில் ராகுல் சௌத்ரி வெளியே உட்காரவைக்கப்பட்டு மாற்று வீரரை அணி நிர்வாகம் களமிறக்கியது.

தமிழ் தலைவாஸ் தனது அடுத்த போட்டியில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சுர்ஜீத் சிங் தலைமையிலான புனேரி பல்தான்ஸ் அணியை சந்திக்க உள்ளது. புனெரி பல்தான்ஸ் அணி இந்த சீசனில் விளையாடிய 7 போட்டிகளில் 2ல் மட்டுமே வென்றுள்ளது. எனவே ஆகஸ்ட் 18 அன்று நடைபெறும் இப்போட்டியில் தமிழ் தலைவாஸ் தனது சொந்த மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதலாக, இரு அணிகளும் கடைசியாக மோதிய போது தமிழ் தலைவாஸ், புனேரி பல்தான்ஸை வீழ்த்தியுள்ளது. எனவே அனைத்து காரணிகளும் தமிழ் தலைவாஸ் அணிக்கு சாதகமாகவே உள்ளது. இப்போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றிபெற அதிக வாய்ப்புகள் உள்ளது.

இந்த சிறப்பு வாய்ந்த போட்டியில் இரு அணிகளும் எவ்வாறு அணிகளை கட்டமைக்கும் என்பதனை காண்போம்.

தமிழ் தலைவாஸ்

அணியின் கேப்டன் அஜய் தாகூர் ஒரு கேப்டனாக பொறுப்பேற்று விளையாடுதல் அவசியமாகும். ராகுல் சௌத்ரி கேப்டனுக்கு பக்கபலமாக விளையாட வேண்டும். அணி நிர்வாகம் சபீர் பாபு-விற்கு பதிலாக வி. அஜீத் குமாரை ஆரம்ப 7ல் களமிறக்கும்.

பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் பிடி வீரர்களான மன்ஜீத் சில்லர், மோஹீத் சில்லர், அஜீட் ஆகியோர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலும் புனேரி பல்தான்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அணியில் இடம்பிடிப்பர்.

புனேரி பல்தான்ஸ்

புனேரி பால்தான்ஸீன் அணி நிர்வாகம் சுஸன்த் செய்ல்-ற்கு பதிலாக பன்கச் மோஹீத்-ஐ களமிறக்குவார்கள். நிதின் தோமர் மற்றும் மன்ஜீத் ஆகியோர் ரெய்டர்களாக அணியில் நீடிப்பார்கள்.

பிடி வீரர்கள் குழுவில் காணும்போது சூர்ஜீத் சிங், கிரிஸ் மாரூதி எர்னாக் ஆகியோர் டேக்கல் புள்ளிகளை வெல்வதில் கில்லாடிகளாக உள்ளனர். இவர்களுடன் ஹாடி தஜீக் மற்றும் சன்கேட் சவான்ட் ஆகியோர் இடம்பெறுவார்கள்.

உத்தேச 7:

தமிழ் தலைவாஸ்: அஜய் தாகூர் (கேப்டன்), ராகுல் சௌத்ரி, அஜீட், வி.அஜீத் குமார், மன்ஜீத் சில்லர், மோஹீத் சில்லர் மற்றும் ரன் சிங்.

புனேரி பல்தான்ஸ்: சுர்ஜீத் சிங் (கேப்டன்), பன்கஜ் மோஹீத், நிதின் தோமர், மன்ஜீத், கிரிஸ் மாரூதி எர்னாட், சன்கேட் சவான்ட் மற்றும் ஹாடி தஜீக்.

கற்பனை கலப்பு 7:

1) நிதின் தோமர், பன்கஜ் மோஹீத், ராகுல் சௌத்ரி, மன்ஜீத் சில்லர், மன்ஜீத், அஜீட் மற்றும் சுர்ஜீத் சிங்

கேப்டன்: நிதின் தோமர்

துணைக்கேப்டன்: மன்ஜீத் சில்லர்

2) ராகுல் சௌத்ரி, பன்கஜ் மோஹீத், அஜய் தாகூர், கிரிஸ் எர்னாக், ரன் சிங், அஜீட் மற்றும் மன்ஜீட்

கேப்டன்: ராகுல் சௌத்ரி

துணைக்கேப்டன்: மன்ஜீட்

Quick Links