"அதிகப்படியான நன்மைகள் கிடைத்தாலும், அதற்கு சமமான தவறுகளை தொடர்ந்து செய்வது தமிழ் தலைவாஸின் ஆட்டத்தை பாழாக்குகிறது"  என வருந்தும் பயிற்சியாளர்

Tamil thalivas coach E.Bhaskaran
Tamil thalivas coach E.Bhaskaran

ப்ரோ கபடி தொடரின் 7வது சீசனில் யு மும்பா அணிக்கு எதிரான போட்டியில் 24-29 என்று தமிழ் தலைவாஸ் தோல்வியடைந்தது. இதன்மூலம் சொந்த களத்தில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தமிழ் தலைவாஸ் தோல்வியை தழுவியுள்ளது.

ஆட்டத்தின் முதல் பாதியில் 3 நிமிடங்கள் மீதமிருந்தபோது 12-6 என தமிழ் தலைவாஸ் முன்னிலை வகித்தது. இருப்பினும் யு மும்பா நிகழ்த்திய அருமையான ரெய்ட் மூலம் இரு புள்ளிகளும், சில கூர்மையான சூப்பர் டேக்கல் புள்ளிகளையும் இலாபகரமாக எடுத்து இரு புள்ளிகளில் மட்டுமே பின்தங்கி இருந்தது.

ஆனால் இரண்டாவது பாதி ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யு மும்பா எதிரணியை ஆல்-அவுட் செய்து 19-15 என முன்னிலை வகித்தது. அதன்பின் யு மும்பா பின்னடைவை சந்திக்கவே இல்லை. இப்போட்டி முடிவில் தமிழ் தலைவாஸ் பயிற்சியாளர் எடச்சேரி பாஸ்கரன் மற்றும் கேப்டன் அஜய் தாகூர் சொந்த களத்தில் ஏற்பட்ட தோல்விகளுக்கு பொறுப்பேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பதிலளித்துள்ளனர்.

*ஒட்டுமொத்தமாக சொந்த களத்தில் அதிகப்படியான நன்மைகள் அணிக்கு கிடைத்துள்ளன. வீரர்கள் அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தங்களது முழு ஆட்டத்திறனையும் அணிக்காக அளித்தனர். அணியை பற்றி எந்த புகாரும்‌ சொல்ல முடியாது. ஆனால் நெருக்கடியான சமயங்களில் தமிழ் தலைவாஸ் மீண்டும் மீண்டும் ஃசெய்யும் தொடர் தவறுகளால் ஆட்டத்தின் போக்கு மாறுகிறது‌. ஆட்டத்தின் ஆரம்பத்தில் அதிக நம்பிக்கையுன் விளையாடும் அணி இடைபட்ட நேரத்தில் செய்யும் சில தவறுகள் போட்டியின் முடிவை கடுமையாக பாதிக்கிறது" என பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
"ஆனால் இந்த தவற்றை சரியாக கவனித்து இனிவரும் போட்டிகளில் நிகழாதவாறு பார்த்துக் கொள்வது அவசியம். நாங்கள் கண்டிப்பாக இதனை செய்வோம். அணியில் உள்ள அனைவருக்குமே தாம் எங்கு பலவீனமாக உள்ளோம் என்பது இப்போது நன்றாக தெரிந்திருக்கும். டெல்லி களத்தில் களமிறங்குவதற்கு முன்பாக அணியில் உள்ள சிறு சிறு தவறுகளை முற்றிலுமாக களைய உள்ளோம். தற்போது தமிழ் தலைவாஸ் புள்ளி பட்டியலில் ஒரு நல்ல இடத்தில் உள்ளது‌. எங்களது தவறுகளை நாங்கள் களைய விடாமல் தொடர்ந்து சொதப்பினால் புள்ளி பட்டியலில் தற்போது உள்ள இடத்தை தக்க வைப்பது மிகவும் கடினம்."

கேப்டன் அஜய் தாகூர் எந்த சமயத்தில் தானும் ராகுல் சௌத்ரியும் ரெய்ட் செல்ல வேண்டும் என்பதை பற்றியும் சரியான முடிவை எடுத்தல் வேண்டும். இது ஆட்டத்தை பெரும்பாலான இடங்களில் பாதிக்கிறது.

"இத்தொடரின் சிறந்த ரெய்டர் ராகுல் சௌத்ரி. எந்த சமயத்தில் யார் ரெய்ட செல்ல வேண்டும் என்பது களத்தில் மட்டுமே முடிவு செய்கிறோம். முன்கூட்டியே முடிவு செய்ய முடியாது. மேலும் எதிரணியின் பிடி வீரர்கள் எவ்வாறு விளையாடுகிறார்கள் என்பதை பொறுத்தே யார் ரெய்ட் செல்ல வேண்டும் என்பதை நாங்கள் தீர்மாணிக்கிறோம்- என அஜய் தாகூர் எடுத்துரைத்தார்.

சொந்த களத்தில் வினித் சர்மா மற்றும் வி அஜீத் குமார் போன்ற புது முகங்கள் அணிக்கு கிடைத்தது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

"சில புது முகங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது. மன்ஜீத் சில்லர் இல்லாமல் களம் காண்பது பெரும் இழப்பாக இருக்கும் என நினைத்திருந்தோம். ஆனால் இவரது இடத்திற்கு வந்த வினித் சர்மா அந்த குறையை சிறப்பாக போக்கினார். அத்துடன் அஜீத் குமாரின் ஆட்டத்தை அனைவரும் கண்டிருப்பீர்கள். இருவருமே கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது."

யு மும்பா கேப்டன் ஃபேஜல் அட்ராஜாலி கிடைத்த மற்றோரு வெற்றியின் மூலம் சிறந்த நம்பிக்கையுடன் உள்ளார். டிபென்ஸில் இவர் சிறந்த விளங்கி 11 டேக்கல் புள்ளிகளைப் பெற்றார். தமிழ் தலைவாஸ் 6 டேக்கல் புள்ளிகள் மட்டுமே பெற்றது குறிப்பிடத்தக்கது. 4 டிபென்டர்களும் குறைந்தது இரு டேக்கல் புள்ளிகளை பெற்றனர். விளையாடிய 5 டிபென்டர்களுமே குறைந்தது ஒரு டேக்கலை செய்து அசத்தினர்‌.

இது குறித்து யு மும்பா கேப்டன் கூறியதாவது, "அணிக்கு ஒரு முக்கியமான வெற்றி கிடைத்தது. என்னுடைய 3 டேக்கல் புள்ளிகள் அணிக்கு பெரும் பங்களிப்பை அளித்தது மகிழ்ச்சியை அளிக்கிறது.

இப்போட்டியில் யு மும்பா அணியின் நட்சத்திர ரெய்டர் எம்.எஸ்‌ அதுல் 6வது ப்ரோ கபடி சீசனில் தமிழ் தலைவாஸ் அணியில் இடம்பெற்றிருந்தார். இரு அணிகளையும் ஒப்பிடும் போது 7 ரெய்ட் புள்ளிகளுடன் சிறந்த வீரராக வலம் வந்தார். தமிழ் தலைவாஸ் அணியின் டிபென்ஸ் படைக்கு கடும் நெருக்கடியை தன்னால் அளிக்க முடியும் என நிருபித்துள்ளார்.

இது குறித்து அதுல் கூறியதாவது, "இப்போட்டியில் அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் எனக்கு மிகுந்த ஊக்கத்தை அளித்தனர். நாங்கள் யார் யார் இன்று விளையாடப் போகிறோமோ அவர்கள் அனைவரும் இனைந்து சரியான திட்டத்தை வகுத்துக்கொண்டோம். இதுவே நான் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த காரணமாக இருந்தது.

யு மும்பா கேப்டன் ஃபேஜல் கூறியதாவது, "இந்த போட்டியில் பல விதமாக எதிர்பாரா நுணுக்கங்கள் அணிக்கு கிடைத்தன. கடந்த வருடம் சித்தார்த் தேசாய், ரோகித் பல்யான் போன்றோர் சிறப்பான ரெய்ட் புள்ளிகளை வென்றனர். எனவே அனைத்து அணிகளும் அவர்களை குறி வைத்தே செயல்படும். ஆனால் நாங்கள் சற்று மாற்றி வித்தியாசமான கோணத்தில் யோசித்தோம். எங்கள் ரெய்டர்கள் அனைவரும் சிறந்த பங்களிப்பை அளித்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு போட்டியில் அர்ஜீன் தேஷ்வால் சிறப்பாக விளையாடினால் அடுத்த போட்டியில் அதுல் சிறப்பாக விளையாடுகிறார். மற்றொரு போட்டியில் அபிஷேக் சிங் சிறந்த ஆட்டத்தை வெளிகொணருகிறார்.

இந்த வெற்றியின் மூலம் யு மும்பா 29 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. தமிழ் தலைவாஸ் 8வது இடத்தில் 25 புள்ளிகளுடன், முன்னதாக நடந்த போட்டியில் வென்ற குஜராத் ஃபார்டியுன் ஜெயன்ட்ஸ் அணியுடன் பகிர்ந்து கொண்டது.

Quick Links