Create
Notifications
New User posted their first comment
Advertisement

நிஜ வாழ்க்கையில் எலியும் பூனையுமாக இருந்த ஐந்து டேக் இணைகள் 

  • நம் தொலைக்காட்சியில் காலம்காலமாகத் தோன்றிய டேக் இணைகளின் உண்மை நிலை
ANALYST
முதல் 5 /முதல் 10
Modified 12 Nov 2018, 19:39 IST
ஹார்ப்பர் மற்றும் ரோவன்
ஹார்ப்பர் மற்றும் ரோவன்

WWE-இல் பலதரப்பட்ட டேக் அணிகள் உள்ளன. எடுத்துக்காட்டிற்க்கு நியூ டே, ரிங்கிற்குள் புரிந்துணர்வுடனும் விட்டுக் கொடுக்காமலும் ஆடுவர். அதே போன்று ரிங்கிற்கு வெளியிலும் மூன்று பேர் கொண்ட நியூ டே அணி தங்களின் நட்பை வெளிப்படுத்துவார்கள்.மது விடுதிகளில் மற்றும் இதர தனியார் இடங்களில் ஒன்றாகப் போட்டோவுக்குப் போஸ் கொடுப்பார்கள்.

அதே போன்று "DX" அணியும் அக்காலத்தில் அனைவராலும் விரும்பக்கூடிய ஒரு அணியாக இருந்தது. சில பல காரணங்களால் அவ்வணி பிளவுபட்டது. இவ்வணி ட்ரிபிள் ஹேய்ச் மற்றும் ஷான் மைக்கேல்ஸ் ஆகிய சூப்பர் ஸ்டார்களை உட்கொண்டிருந்தது.

இக்காலத்தில் உள்ள பெரும்பான்மையான டேக் இணைகள் நிஜத்திலும், ரிங்கிற்குள்ளும் நல்ல நட்பினை பறைசாற்றுவது வழக்கம். உதாரணம் "தி ஷியில்டு" பல காரணங்களால் பிளவுபட்டாலும் மீண்டும் ஒன்றாக வலம் வருகின்றனர். இவர்கள் ஒன்று கூடினால் ஆட்டத்தில் அனல் பறக்கும்.

அதுவே அக்காலத்தில் இருந்த வீரர்களின் நட்பு பெரும்பாலும் ரிங்கிற்குள் மட்டுமே இருந்தது, நிஜவாழ்கையில் முரணாக இருந்தனர்.

இப்பதிவில் ஒருவருக்கொருவர் நிஜ வாழ்க்கையில் முறைத்து கொண்டாலும் ஒன்றாக இணைந்த டேக் இணைகளை பற்றிப் பார்ப்போம்.


#5. மார்ட்டி ஜெனட்டி மற்றும் ஷான் மைக்கேல்ஸ் 

மார்ட்டி ஜெனட்டி மற்றும் ஷான் மைக்கேல்ஸ்  
மார்ட்டி ஜெனட்டி மற்றும் ஷான் மைக்கேல்ஸ்  

80-களில் ஷான் மைக்கேல்ஸ் மற்றும் மார்ட்டி ஜெனட்டி பல நிறுவனங்களுக்கு (AWA மற்றும் NWA) விளம்பர தூதராக இருந்து வந்தனர். இருந்தபோதும் 1988-1991 ஆகிய இடைப்பட்ட காலத்தில் wwe-வின் மூலமாக மக்களால் வெகுவாகக் கவரப்பட்டனர்.

Advertisement

“தி ராக்கர்ஸ்” என்று அழைக்கப்பட்ட இந்த ஜோடி மக்களால் கவரப்பட்ட ஜோடியாக அந்த மூன்று ஆண்டுகள் (1988-1991) இருந்து வந்தது. அதன் பிறகு அவர்களின் நட்பில் விரிசல் ஏற்பட்டது. 1992-ஆம் ஆண்டு wwe நிகழ்ச்சியில் இவர்களது நட்பு முழுவதுமாக முடிவுக்கு வந்தது.

இவர்கள் இணையாக இருந்த கடைசி காலகட்டத்தில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இவர்களைத் தனிமைப்படுத்தியது. குறிப்பாகப் பிரபல குத்துச்சண்டை வீரரான ரோடி பைபர், ஷான் மைக்கேல்ஸ் வருங்காலத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக வருவார் என்று புகழாரம் சூட்ட அக்கருத்து ஜெனட்டிற்கு எரிச்சலை உண்டாக்கியது.

மேலும் வின்ஸ் மக்மஹோன் இருவரையும் WCW உடன் இணைந்து கொள்ள ஒப்புக்கொண்டபோது, மைக்கேல்ஸ் மறுத்து, நாங்கள் பிரிவது தான் ஜெனட்டியின் யோசனை என்று பிரிவினையை வகுத்தார்.

அதுவே இவர்களின் பிரிவிற்கு வித்திட்டது.


#4. தஜிரி மற்றும் வில்லியம் ரீகள்

தஜிரி மற்றும் வில்லியம் ரீகள் 
தஜிரி மற்றும் வில்லியம் ரீகள் 

இப்பதிவில் உள்ள வேற்று இணைகளின் பிரிவைப் போல இவ்வணியின் பிரிவை உற்று நோக்க முடியாது (எங்களின் தனிப்பட்ட கருத்து).

2017-ஆம் ஆண்டு ஒரு wwe நிகழ்ச்சியில் ரீகள் கூறியதாவது “நான் தஜிரியை முழுமனதாக வெறுத்தேன்” என்று அவர்கள் டேக் டீம் சாம்பியனாக இருந்த காலத்தை நினைவு கூர்ந்தார்.

ஜப்பானை சேர்ந்த தஜிரி காரில் செல்லும்போது ரிகளின் பாட்டுகளை அறவே வெறுப்பார். எனவே அவர் இதன் காரணமாகவே உன்னை வெறுக்கிறேன் என்று ரீகளிடம் கூறுவார்.

இது ஒரு விளையாட்டுத்தனமான சண்டையாக இருந்தாலும் wwe பதிவிட்ட இந்த வீடியோவில் எது உண்மை என்று நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.

1 / 2 NEXT
Published 12 Nov 2018, 19:18 IST
Advertisement
Fetching more content...
Get the free App now
❤️ Favorites Edit