வரலாற்றில் இடம் பிடித்த டாப் 6 WWE சாம்பியன்ஷிப் வெற்றிகள்

WWE சாம்பியன்ஷிப் 
WWE சாம்பியன்ஷிப் 

WWE சாம்பியன்ஷிப் போட்டிகலில் மற்ற சாம்பியன்ஷிப் போட்டிகளை விட சுவாரசியம் அதிகமாக இருக்கும். இதற்கு காரணம் பெரும்பாலும் இதில் ஜாம்பவான்களே விளையாடுவார்கள். யார் வெற்றி பெறுவர் என த்ரில் மிகுந்ததாக இருக்கும் இத்தகைய போட்டிகள் அமைந்திருக்கும். இந்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டி செல்ல அனைத்து முன்னை வீரர்களும் போட்டி போடுவார்கள். இதில் பெரும் வெற்றி வீரர்களின் வாழ்க்கையையே மாற்றி அமைக்கக்கூடும். தற்போது இதற்கான பந்தயத்தில் முந்தி செல்பவர் கோஃபி கிங்ஸ்டன். 11 வருட உழைப்பிற்கு பிறகு சாம்பியன்ஷிப்பை தட்டி செல்லும் சூழ்நிலை இவருக்கு கிடைத்துள்ளது.

அப்படி கோஃபி கிங்ஸ்டன் ஒருவேளை இம்முறை WWE சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெற்றால் அவர் வாழ்நாளில் மறக்க முடியாத தருணமாக மாறக்கூடும். அப்படி நம் வாழ்வில் நாம் மறக்க முடியாத 6 WWE சாம்பியன்ஷிப் போட்டிகள் வெற்றியை பற்றிய ஒரு தொகுப்பை கீழே காணலாம்.

#6 ரெஸ்ஸில்மேனியா 31 இல் சேத் ரோலின்ஸ்

சேத் ரோலின்ஸ்
சேத் ரோலின்ஸ்

சேத் ரோலின்ஸ், ரசிகர்களால் தி ஆர்க்கிடெக்ட் என அழைக்கப்படுபவார். WWE அறிமுகப்படுத்திய ஸ்பெஷல் போட்டிகளில் முக்கியமான ஒன்று, மணி இன் தி பேங்க். கடந்த 15 வருடங்களாக இந்த போட்டி நடைபெற்று வருகிறது. சாதாரண வீரரை கூட இப்போட்டி உச்சத்தில் தூக்கி நிறுத்தும். அப்படி இம்முறையான போட்டியால் உச்சம் பெற்றவர் தான் சேத் ரோலின்ஸ். ரெஸ்ஸில்மேனியா 31 இன் போது பிராக் லெஸ்னர் மற்றும் ரோமன் ரெய்ன்ஸ் இடையே பலமான மோதல் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக நடைபெற்றது. பிராக் லெஸ்னரை வீழ்த்தி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற மகிழ்ச்சியில் இருந்த ரோமன் ரெய்ன்சை தனது மணி இன் தி பேங்க் பெட்டியால் தாக்கி விட்டு பட்டத்தை தட்டிச்சென்றார் சேத் ரோலின்ஸ். இது அரங்கில் இருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

உடனே வர்ணனையாளர் மைக்கல் கோல் "இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த திருட்டு" என குறிப்பிட்டார். WWE வரலாற்றில் இந்த வெற்றி யாராலும் மறக்க முடியாத ஒன்றாக மாறியது. குறுக்கு வழியில் வென்று இருந்தாலும் அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் இவரை ஆரவாரம் செய்து மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்தனர்.

#5 ராவில் மிக் ஃபோலே

மிக் ஃபோலே
மிக் ஃபோலே

மிக் ஃபோலே, மற்ற WWE வீரர்களை போன்று கட்டுமஸ்தான உடம்பெல்லாம் இல்லாதவர். இருந்தாலும் அனைவராலும் வெகுவாக கவரப்பட்டவர். இவர் WWE சாம்பியன்ஷிப் வெற்றி பெற்றது இவரின் வாழ்நாள் சாதனைகளில் ஒன்று. அன்றைய காலகட்டத்தில் WWE மற்றும் WCW இடையே பெரும் மோதல் வெடித்துக்கொண்டிருந்த நேரம். WWE-யை விட WCW-வை மக்கள் விரும்பி பார்த்தனர். அப்போதுதான் மிக் ஃபோலே முதன் முதலாக சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றார். இவரின் வெற்றியை தொடர்ந்து WWE விற்கு ரசிகர்கள் அதிகமாக தொடங்கினர். அதன் பிறகு இவரின் புகழ் உச்சம் பெற்றது. WWEயும் நல்ல வளர்ச்சி அடைந்தது.

#4 ரஸில்மேனியா 12 இல் ஷான் மைக்கேல்ஸ்

ஷான் மைக்கேல்ஸ்
ஷான் மைக்கேல்ஸ்

ரசிகர்களால் HBK என செல்லமாக அழைக்கப்படுபவர். வரலாற்றில் இடம் பிடித்த ஒரு முக்கியமான ரஸ்ட்லெர். எப்படிப்பட்ட போட்டியானாலும் இறுதி வரை இவரின் முழு பலத்தையும் வெளிப்படுத்திவிட்டு செல்ல கூடியவர். இவரின் முதல் சாம்பியன்ஷிப் வெற்றி இவரால் மட்டுமில்லை ரசிகர்களாலும் மறக்க முடியாத தருணம். 60 நிமிடம் நடைபெற கூடிய ஐயன் மேன் போட்டி இவருக்கும் பிரெட் ஹார்ட் ஹிட்மனுக்கும் இடையே நடைபெற்றது. தன் வழக்கமான சூப்பர் கிக்கால் பிரெட் ஹார்ட்டை வீழ்த்தி பட்டத்தை தட்டிச்சென்றார். இன்னமும் டிவியில் இந்த போட்டியை அவ்வப்போது ஒளிபரப்பி வருகிறார்கள். இந்த வெற்றியை தொடர்ந்து ரிங்கில் அமர்ந்து இவர் விட்ட ஆனந்த கண்ணீரை காணும் போது நாமும் அவருடன் சேர்ந்து வெற்றி பெற்றது போன்ற உணர்வு ஏற்படும்.

#3 2004 ஆம் ஆண்டு நோ வே அவுட் இல் எடி கர்ரெரோ

எடி கர்ரெரோ
எடி கர்ரெரோ

அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த வீரர்களுள் ஒருவர் எடி கர்ரெரோ. பல வருடங்களுக்கு மேலாக WWE-இல் சண்டையிட்டு வரும் இவர், 20 வருடத்தை கடக்கும் போது தான் உச்சம் அடைந்தார். பிராக் லெஸ்னரை எதிர்த்து இவர் போட்டியிட்ட 30 நிமிடங்களை எந்த ரசிகராலும் மறக்க முடியாது. இறுதியில் இவரின் வெற்றியை இவரின் நீண்ட நாள் நண்பரான கிறிஸ் பெனாய்ட் மற்றும் மனைவி குழந்தையுடன் மேடையிலேயே கண்ணீருடன் கொண்டாடினர். எவ்வளவு உறுதியான மனவலிமை உள்ள ரசிகராக இருந்தாலும் இக்காட்சியை காணும் போது கண்கலங்கும்.

#2 அர்மகெதோனில் ஜெஃப் ஹார்டி 2008

ஜெஃப் ஹார்டி
ஜெஃப் ஹார்டி

அதிகமாக ரிஸ்க் எடுத்து சண்டையிட கூடிய வீரர்களுள் ஒருவர் ஜெஃப் ஹார்டி. இவரை WWE நிர்வாகம் ஒரு பெரிய நட்சத்திரமாக வளர்த்துவிடவில்லை. 90'களில் WWE பார்த்தவர்களுக்கு தெரியும் இவரின் அருமை. பெரும்பாலும் இரண்டாம் தர வீரர்களுடனே சண்டையிட்டு வந்த ஜெஃப் ஹார்டிக்கு ஸ்மாக்டௌன் பெரும் திருப்பு முனையாக அமைந்தது. அங்கே இவருக்கும் ட்ரிபிள் ஹச்சுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தான் இவரின் முதல் பெரும் வெற்றி. அர்மகெதோனில் ஜெஃப் ஹார்டி, ட்ரிபிள் ஹச் மற்றும் எட்ஜ் இடையே முத்தரப்பு போட்டி நடைபெற்றது. 15 வருட கடின உழைப்பிற்கு பிறகு எட்ஜை பின் செய்து சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். ஆனால் இவரின் சந்தோசம் நீண்ட நாள் நிலைக்கவில்லை. அடுத்து நடைபெற்ற ராயல் ரம்பில் போட்டியில் சாம்பியன்ஷிப்பை இழந்தார்.

#1 ரெஸ்ஸில்மேனியா 30-ல் டேனியல் பிரையன்

டேனியல் பிரையன்
டேனியல் பிரையன்

டேனியல் பிரையன், கூட்டத்தில் ஒருவராய் இருந்து பின்பு படிப்படியாக முன்னனி ரஸ்ட்லெர் என்ற அந்தஸ்தை பெற்றவர். தற்போதைய WWE சாம்பியன்ஷிப் பட்டத்திற்கு சொந்தக்காரர். ஆனால் நாம் முன்னரே படித்த மாதிரி, இவரிடம் இருந்து பட்டத்தை தட்டிச்செல்ல பின்தொடர்ந்து வருகிறார் கோஃபி கிங்ஸ்டன். போட்டியாளராக இருந்துவிட்டு சில காலங்கள் தி ஆதாரிட்டி (மேனேஜர்) என்ற WWE இன் முக்கிய பொறுப்பில் இருந்தார். ஒரே நாளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் என்ற பெருமை பெற்றவர். ரெஸ்டில்மேனியா 30- இல் ட்ரிபிள் ஹெச்சை வீழ்த்தி சாம்பியன்ஷிப் போட்டிக்கான வாய்ப்பை பெற்ற பிரையன், ராண்டி ஆர்ட்டன் மற்றும் படிஸ்டாவை எதிர்கொண்டார்.

70,000 ஆயிரம் ரசிகர்கள் கூடி இருந்த அந்த அரங்கில் அவரின் வெற்றியை தொடர்ந்து அந்த அரங்கமே ஒரு பெரும் விழா போன்று ஜொலித்தது. வர்ணனையாளர் மைக்கல் கோல் இதை பற்றி கூறிய போது "பார்போன் நகரில் ஒரு சரித்திரம் "என்று குறிப்பிட்டார்.