ஐ.சி.சி கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் நான்கு மாதங்களுக்கும் குறைவாகவே உள்ளது. ஒவ்வொரு அணியும் உலகக்கோப்பையை வெல்லும் முனைப்பில் கவனம் செலுத்தி வருகிறது. இந்தியா உட்பட ஒவ்வொரு நாடும் 15 பேர் கொண்ட அணியை இறுதி செய்யத் திட்டமிடும். ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணியுடனான வெற்றிகள் இந்திய அணிக்குப் பெரும் நம்பிக்கை அளித்துள்ளது. இது இந்திய அணி கோப்பையை வெல்லும் முனைப்பில் இருப்பதையும் காட்டுகின்றன. விராட் கோலி உலகக்கோப்பை தொடருக்கு விளையாடும் வீரர்கள் பற்றிப் பல முறை ஆராய்ந்து ஒரு அணியை உருவாக்குவார். மேலும் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.
ரோகித் சர்மா, ஷிகார் தவான் மற்றும் விராட் கோலி ஆகியோர் 2011 உலகக்கோப்பைக்கு பிறகு உலகின் சிறந்த முதல் மூன்று இடங்களைக் கொண்டுள்ளனர். பல்வேறு வீரர்கள் மற்றும் அவர்களின் செயல்பாடுகளுக்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து அம்பதி ராயுடு, மகேந்திர சிங் தோனி மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் களாக களமிறங்கவுள்ளனர். தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் உலகக்கோப்பை தொடரில் 15 பேர் கொண்ட அணியில் இடம் பெறுவார்கள். ஹார்டிக் பாண்டியா காயமடைந்து பின்னர் பி.சி.சி.ஐ தடை செய்யப்பட்டு தற்போது அணிக்கு திரும்பியுள்ளார். 25 வயதான பாண்டியா தற்போது அணியில் வேகப்பந்துவீச்சு ஆல்- ரவுண்டராக சிறப்பாக விளையாடி வருகிறார். ரவீந்திர ஜடேஜா அணியில் ஸ்பின்னராக தனது ஆல்-ரவுண்டர் திறமையை வெளிப்படுத்துவார்.
பந்து வீச்சில் எந்த விவாதமும் இல்லை. ஜஸ்ப்ரிட் பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு பிறகு சமி தற்போது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய தொடர்களில் சிறப்பாக விளையாடியுள்ளார். ஸ்பின்னர்களான சஹால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரின் கூட்டணி இந்தியாவிற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.
ஐ.சி.சி போட்டிகளுக்கான இந்திய அணியின் சமீபத்திய பார்வை இந்திய அணியில் நான்கு வேக பந்து வீச்சாளர்களை விரும்புகிறார்கள் என்று காட்டுகிறது. எனவே தேர்வாளர்கள் குழுவில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரை சேர்க்க உள்ளனர். ஆனால் யார் என்ற கேள்வி கடந்த ஆண்டு அல்லது அதற்குமேலும் இருந்து வருகிறது. கலீல் அகமது, முகமது சிராஜ், தீபக் சஹார், சித்தார்த் கவுல் மற்றும் தாகூர் ஆகியோருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் அவர்களில் யாரும் எதிர்பார்த்த அளவில் ஈர்க்கப்படவில்லை.
2013 சாம்பியன்ஸ் டிராபி வெற்றியிலும், 2015 உலகக் கோப்பை அரையிறுதி போட்டி வரை இந்தியாவில் ஒரு முக்கிய பங்கு வகித்தவர் உமேஷ் யாதவ் ஆவார். யாதவ் இப்போது சிறந்த தேர்வு என்றாலும், அவர் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் அளவிற்கு ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் சிறப்பு இல்லை.
சுப்மான் கில் நியூசிலாந்து தொடரில் அறிமுகமான நிலையில் அவரை உலகக் கோப்பைக்கு அணியில் இடம்பெற வாய்ப்பு குறைவே. கடந்த ஆண்டு முதல் ராகுல் இந்திய அணியில் ஒரு மாற்று தொடக்க ஆட்டக்காரராக பயணித்து வருகிறார். இருப்பினும், ஒருநாள் போட்டிகளில் ராகுல் ஒரு குறிப்பிடத்தக்க ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவர் 13 ஒருநாள் போட்டிகளில் 35.2 சராசரி, 317 ரன்கள் எடுத்து உள்ளார். இந்தியாவுக்கு இன்னொரு வாய்ப்பு ரஹானே. அவர் நிறைய அனுபவங்கள் கொண்டிருக்கிறார், ஆனால் அவர் கடைசி ஒருநாள் சர்வதேச போட்டி பிப்ரவரி 2018-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக விளையாடியது தான். 33 வயதான ராயுடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக சிறப்பாக விளையாடியுள்ளார்.
ரிஷப் பண்ட் மற்றும் கார்த்திக் ஆகியோர் உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவார்கள். கார்த்திக் நீண்ட நாட்களாக இந்திய அணியில் தனது இடத்தை நிரந்தரமாக்காமல் தவித்து வருகிறார். பண்ட் ஒரு அற்புதமான பேட்ஸ்மேன் மற்றும் இளம் வீரர். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அவரது செயல்பாடு எதிர்பார்த்த அளவில் இல்லை. ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தின் சுற்றுப்பயணங்களுக்கு கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார்.
ஆல்-ரவுண்டர் பாண்டியாவிற்கு அடுத்து அணியில் சிறந்த ஆல்-ரவுண்டராக ஜடேஜா சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால் சுழற்பந்து வீச்சில் சாஹல், குல்தீப் கூட்டணி இந்திய அணிக்கு பெரும் பலம். ஜடேஜா பேட்டிங்கில் சிறப்பாக விளையாடினாலும் பந்து வீச்சில் சாஹல், குல்தீப் அளவிற்கு இருப்பதில்லை.
விஜய் ஷங்கர் இந்தியாவுக்கு கிடைத்த மற்றுமொரு ஆல்-ரவுண்டர். ஷங்கர் பாண்டியாவைப் போன்ற அளவில் இல்லை என்றாலும் நியூசிலாந்து அணியுடன் இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியுள்ளார்.
எழுத்து- ஆய்ஷ் காடரியா
மொழிபெயர்ப்பு-சுதாகரன் ஈஸ்வரன்