ஐபிஎல் தொடரில் ஒரே இன்னிங்சில் 150+ ரன்களை விளாசிய வீரர்கள்!!

Chris Gayle
Chris Gayle

ஐபிஎல் தொடரை அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் வரவேற்பதற்கு முக்கிய காரணம், ஐபிஎல் தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் அதிரடிக்கு பஞ்சம் இருக்காது. அனைத்து போட்டிகளுமே இறுதி நிமிடம் வரை விறுவிறுப்பாக இருக்கும்.

ஒரு போட்டியில் மோதும் இரு அணிகளிலும் உள்ள வீரர்களின் அதிரடி காண்பதற்கே அருமையாக இருக்கும். இவ்வாறு அதிரடிக்கு பெயர் போன ஐபிஎல் தொடரானது, இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் ஒரே இன்னிங்சில் 150+ ரன்களை விளாசிய வீரர்களைப் பற்றி இங்கு காண்போம்.

#1) கிறிஸ் கெயில்

Chris Gayle
Chris Gayle

இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் அதிரடிக்கு பெயர் போன கிறிஸ் கெயில். ஐபிஎல் தொடரில் இவரது அதிரடியை காண்பதற்கே பெரும் ரசிகர் கூட்டமே மைதானத்திற்கு வரும். அதிக சிக்சர் மற்றும் பவுண்டரிகளை விளாசி மைதானத்தில் உள்ள அனைத்து ரசிகர்களையும் உற்சாகப்படுத்துவார். ஐபிஎல் தொடரில் குறைந்த பந்துகளில் சதம் விளாசிய ஒரே வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் வெறும் 30 பந்துகளில் சதம் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் பெங்களூரு அணி மற்றும் புனே அணிகள் மோதின. அந்த போட்டியில் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கிறிஸ் கெயில் 66 பந்துகளில் 175 ரன்களை விளாசினார்.

அதில் 17 சிக்சர்களையும், 13 பவுண்டரிகளையும் விளாசினார். இதன்மூலம் மூன்று சாதனைகளை ஐபிஎல் தொடரில் படைத்தார். குறைந்த பந்துகளில் சதம் விளாசிய ஒரே வீரர் மற்றும் ஒரே இன்னிங்சில் அதிக ரன்களை அடித்த ஒரே வீரர் மற்றும் ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர் விளாசிய ஒரே வீரர் என்ற மூன்று சாதனைகளையும் ஒரே போட்டியில் படைத்தார் கிறிஸ் கெயில். ஆனால் தற்போது இவர் பெங்களூர் அணிக்காக விளையாடவில்லை. இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரராக விளையாட இருக்கிறார்.

#2) பிரண்டன் மெக்கலம்

Brendon Mccullum
Brendon Mccullum

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் நியூசிலாந்து அணியை சேர்ந்த அதிரடி தொடக்க ஆட்டக்காரரான பிரண்டன் மெக்கலம். கிறிஸ் கெயில் போன்றே இவரும் தொடக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடுவார்கள். இவர் களமிறங்கினால் பவர்பிளேவில் பவுண்டரிக்கு பஞ்சம் இருக்காது. ஐபிஎல் தொடர் முதன்முதலாக 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்த 2008 ஆம் ஆண்டில் கொல்கத்தா அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக விளையாடினார் பிரண்டன் மெக்கலம்.

அந்த ஆண்டு நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. அந்த போட்டியில் பிரண்டன் மெக்கலம் 73 பந்துகளில் 158 ரன்களை விளாசினார். அதில் 13 சிக்சர்களையும், 10 பவுண்டரிகளையும் விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவர் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வருகிறார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடர், வருகின்ற ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.