கிரிக்கெட் ஆட்டத்தில் ஒரு அரிதான சாதனையைப் படைத்துள்ளார் 18 வயதான ரெக்ஸ் ராஜ்குமார் சிங். இவர் ஒரு இன்னிங்ஸில் அனைத்து 10 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். நான்கு முதல் ஐந்து பவுலர்கள் இருக்கும் அணியில் ஒரே வீரர் 10 விக்கெட்டுகளை வீழ்த்துவது அசாதாரணம் என்பதே உண்மை. மணிப்பூரை சேர்ந்த இவர் கூச் பிஹார் டிராபியில் 11 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வருட ரஞ்சி டிராபியில் அறிமுகமான இந்த இடது கை பேஸர் வீசிய 9.5 ஓவர்களில் ஆறு ஓவர் மெய்டின் என்பது குறிப்பிடத்தக்கது.
அனந்தபூரில் உள்ள கிராமப்புற மேம்பாட்டு அறக்கட்டளை அரங்கில் அருணாசலப் பிரதேசமும் மணிப்பூரும் மோதிய போட்டியில் இந்தச் சாதனை படைக்கப்பட்டது. இது நான்கு நாள் போட்டியாகும்.
அருணாச்சல பிரதேச அணி முதல் இன்னிங்ஸ் 136 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் மணிப்பூர் அணி 89/3 என்ற ஸ்கோர் உடன் ஆட்டத்தைத் தொடங்கியது. ஆனால், அந்த அணி 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
அருணாச்சல பிரதேச அணி இந்த 14 ரன்கள் லீடுடன் இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆட்டத்தை தொடங்கியது. நல்ல லீடு ரன்கள் எடுத்து வெற்றி பெறலாம் என்று களமிறங்கிய அருணாச்சல பிரதேச அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மணிப்பூர் அணியின் ரெக்ஸ் ராஜ்குமார் சிங்கின் பந்துவீச்சில் அனல் பறந்தது.
ஆட்டத்தின் மூன்றாவது இன்னிங்ஸில் அருணாச்சல பிரதேச அணியின் பேட்ஸ்மேன்கள் திணறினர். ICC-cricket.com வெப்சைட் விவரங்களின் படி இந்த இளம் வீரர் ஐந்து போல்ட், இரண்டு எல்.பி.டபள்யூ., 3 கேட்ச்கள் முறையில் விக்கெட்கள் எடுத்துள்ளார். அருணாச்சல பிரதேச அணி 36 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்கள், இரண்டாவது இன்னிங்க்ஸில் 10 விக்கெட்கள் என மொத்தம் 15 விக்கெட்கள் வீழ்த்தினார் ரெக்ஸ் ராஜ்குமார் சிங்.
4-வது இன்னிங்ஸில் 55 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது மணிப்பூர். நிர்ணயிக்கப்பட்ட எளிதான ஸ்கோரை சேசிங் செய்து மணிப்பூர் அணி வெற்றி பெற்றது.
அருணாச்சலப் பிரதேசம் முதல் இன்னிங்ஸ்: 138.5 ஓவர், மணிப்பூர் 1 இன்னிங்ஸ்: 49.1 ஓவர் 122, அருணாச்சலப் பிரதேசம் 2 வது இன்னிங்ஸ்: 36.5 ஓவர்களில் 36 ரன்கள் (ரெக்ஸ் ராஜ்குமார் சிங் 11 ரன்களுக்கு 10 விக்கெட்டுகள்), மணிப்பூர் 2 வது இன்னிங்ஸ்: விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் 7.5 ஓவர்களில்.
முதல் தர போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை எடுப்பது எளிதானது அல்ல. இந்த சாதனை 80 முறை நிகழ்த்தப்பட்டுள்ளது. யை முதல் வகுப்பு கிரிக்கெட்டின் வரலாற்றில் அடைந்திருக்கலாம், ஆனால் அது குறைவாக கடினமாக இல்லை. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் ஜிம் லீக்கரின் 10 விக்கெட்கள், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அனில் கும்ளேவின் 10 விக்கெட்கள் பிரபலம். ஆனால், இன்னும் பலர் முதல் தர கிரிக்கெட்டில் இந்த சாதனைகளை செய்துள்ளனர். கும்ப்ளே மட்டுமே இந்த சாதனையை டெஸ்ட் கிரிக்கெட்டில் படைத்துள்ளார். கும்ப்ளே தவிர மற்ற நான்கு இந்திய வீரர்களும் இந்த நம்பமுடியாத சாதனையை நிகழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.