1983-ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மூன்றாவது முறையாக நடைபெற்றது. இந்த தொடரில் எட்டு அணிகள் கலந்து கொண்டன. ஜிம்பாப்வே அணி முதல் முறையாக உலகக்கோப்பை தொடரில் கலந்துகொண்டது. ஏ பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகள் கலந்து கொண்டன. பி பிரிவில் இந்தியா, மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளும் இடம் பெற்றிருந்தன. இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் ஏ பிரிவிலும் இந்தியா, மேற்கிந்திய தீவு அணிகள் பி பிரிவிலும் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தன.
முதல் அரைஇறுதியில் இங்கிலாந்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. அதே போல் இரண்டாவது அரைஇறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. உலகக்கோப்பை தொடரில் நியூஸிலாந்து அணி அரைஇறுதி போட்டிக்கு தகுதி பெறாமல் போனது முதல் முறையாகும். முதன்முறையாக மேற்கிந்திய தீவுகள் அணியை உலகக்கோப்பை தொடரில் 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. அதே போல் இறுதிப்போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பையை முதல் முறையாக வென்றது.
சிறந்த பேட்டிங்;
பாகிஸ்தான் அணி இலங்கைக்கு எதிராக 5 விக்கெட் இழப்பிற்க்கு 338 ரன்கள் எடுத்தது 1983-ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் எடுத்த அதிகபட்ச ரன்கள்.
1983-ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை சேர்ந்த டேவிட் கோவர் அதிகபட்சமாக 384 ரன்கள் எடுத்தார்.
கபில் தேவ் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 175* ரன்கள் எடுத்தது 1983-ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன்கள்.
1983-ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 8 சதங்கள் அடிக்கப்பட்டது. இந்தியாவின் கபில்தேவ் (175*), இங்கிலாந்தின் டேவிட் கோவர் (130), மேற்கிந்திய தீவுகள் அணியின் விவ் ரிச்சர்ட்ஸ் (119), ஆஸ்திரேலியாவின் ட்ரெவர் சாப்பல் (110), மேற்கிந்திய தீவுகள் அணியின் கோர்டன் கிரீன்ட்ஜ் (105*), பாகிஸ்தானின் ஜாகீர் அப்பாஸ் (103*), பாகிஸ்தானின் இம்ரான் கான் (102*), இங்கிலாந்தின் ஆலன் லம்ப் (102) ஆகியோர் சதம் அடித்தனர்.
இங்கிலாந்து அணியை சேர்ந்த கிரேம் பௌலர் 4 அரை சதம் அடித்ததன் மூலம் 1983-ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக அரைசதம் அடித்த வீரர் ஆவார்.
சிறந்த பந்துவீச்சு;
இந்திய அணியை சேர்ந்த ரோஜர் பின்னி 1983-ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 18 விக்கெட்கள் வீழ்த்தியதன் மூலம் அதிக விக்கெட் எடுத்த வீரர் ஆவார்.
1983-ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த வின்ஸ்டன் டேவிஸ் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 51 ரன்கள் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்து வீச்சாக உள்ளது.
இந்த தொடரில் 8 முறை 5 விக்கெட் எடுக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் வின்ஸ்டன் டேவிஸ் (7/51), ஆஸ்திரேலியாவின் கென் மெக்லே (6/39), நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹாட்லி (5/25), இலங்கையின் ஆஷ்தா டி மெல் (5/32 & 5/39), இங்கிலாந்தின் விக் மார்க்ஸ் (5/39), இந்தியாவின் கபில்தேவ் (5/43) பாகிஸ்தான் அணியின் அப்துல் காதிர் (5/44).
சிறந்த விக்கெட்கீப்பிங்;
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜெஃப் டுஜோன் விக்கெட் கீப்பராக 16 (கேட்ச் 15, ஸ்டம்பிங் 1) டிஸ்மிசல் செய்து 1983-ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக டிஸ்மிசல் செய்த விக்கெட் கீப்பர் ஆவார்.
இந்திய அணியை சேர்ந்த சையத் கிர்மானி ஒரே போட்டியில் 5 டிஸ்மிசல் செய்து 1983-ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒரே இன்னிங்க்ஸ்ல் அதிக டிஸ்மிசல் செய்த விக்கெட் கீப்பர் ஆவார்.
சிறந்த பீல்டிங்;
இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ் ஒரே போட்டியில் 7 கேட்ச்கள் பிடித்ததன் மூலம் 1983-ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டியில் அதிக கேட்ச்கள் பிடித்த வீரர் ஆவார்.