கிரிக்கெட் விளையாடில் இந்திய அணி பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. இந்திய அணி ஐசிசி தொடர்களில் பல சாதனைகளை படைத்துள்ளது. இந்திய அணி ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இரண்டு முறை கோப்பை வென்றுள்ளது. 1983ல் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி ஐசிசி உலகக் கோப்பையை வென்றுத. இதற்கு அடுத்து 2011ல் தோனி தலைமையிலான இந்திய அணி இரண்டாவது முறை வென்றது. 2019ல் விராட் கோலி தலைமையிலான போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணிக்கு அடுத்து அதிக உலகக் கோப்பை வென்ற அணியாக இந்திய அணி இரண்டாம் இடத்தில் உள்ளது. உலகக் கோப்பை தொடரில் 1992 ஆம் ஆண்டு தான் வண்ண ஆடைகளை அணிந்து விளையாட தொடங்கினர். இந்திய அணி 1992 - 2015 ஆம் ஆண்டு வரை உலகக்கோப்பை ஜெர்சியின் வண்ணங்களை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக மாற்றிக்கொண்டு வந்தனர். எனவே, இந்திய அணியின் உலக கோப்பை ஜெர்சி எப்படி ஆண்டுகளாக மாறியது என்பதை இங்கு பார்க்கலாம்.
#1.1992 - முதல் வண்ண ஜெர்சி, அடர் நீலம்
ஐ.சி.சி கிரிக்கெட் உலகக் கோப்பையின் ஐந்தாவது பதிப்பு 1992 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைப்பெற்றது. இந்த ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க ஒன்றாக இருந்தது, ஏனெனில் வீரர்கள் முதன்முறையாக வண்ண ஜெர்சிகளை அணிந்து விளையாடினர். இந்திய அணி நீல நிற உலகக் கோப்பை ஜெர்சியை அணிந்திருந்தது. அதில் பச்சை, சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் இடம்பெற்றிருந்தது. இந்த மூன்று நிரங்களும் இந்தியாவின் தேசியக்கொடியை குறிக்கும். மஞ்சள் நிரத்தில் இந்தியா என்று ஆங்கிலத்தில் இருந்தது.
#2.1996 - மஞ்சள் நிறத்துடன் வெளிர் நீலம்
ஐசிசி கிரிக்கெட் அடுத்தாண்டும் வண்ண நிற ஜெர்சிகளை பயன்படுத்தியது. ஆனால் இந்திய அணி அதன் முதன்மை நிறமான அடர் நீலத்தில் இருந்து வெளிர் நீலமாக ஜெர்சியின் வண்ணத்தை மாற்றினர். மேலாடையின் நடுவில் மஞ்சள் நிறம் இருந்தது அதில் இந்தியா என்று எழுதி இருந்தது. மேலாடையின் காலர் மஞ்சள் நிறமாக இருந்தது. வானவில் நிற அம்புகள் மேலாடையின் முன் பின் என இரண்டு புறமும் இருந்தது.
#3.1999 - மஞ்சள் நிறத்துடன் வெளிர் நீலம்
இந்திய அணியின் 1996 ஆம் ஆண்டு ஜெர்சியில் சில மாற்றங்களை செய்திருந்தனர். அவர்கள் முதன்மை வண்ண வெளிர் நீலத்தை மாற்றவில்லை, ஆனால் அவர்கள் ஜெர்சியின் மஞ்சள் வடிவத்தை மாற்றினர். இந்த மஞ்சள் நிறத்திற்கு மேல் கருப்பு நிறத்தில் எல்லைகோடு இருக்கும்.
#4. 2003 - வெளிர் நிலம் மற்றும் மூன்று வண்ணங்கள்
இந்த மூன்று வண்ணங்கள் தான் இந்தியர்களின் பெருமையாக இருக்கிறது. இதில் முதன்மை வண்ணமாக நீலநிறம் இருக்கிறது ஆனால் சிவப்பு, பச்சை, வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களும் இந்திய ஜெர்சியின் நடுவில் இருக்கிறது. இந்த ஜெர்சியில் மஞ்சள் நிறத்தில் இந்தியா என்று ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறது. பின் கருப்பு நிறமும் கைப்பகுதியில் இடம்பெற்று இருக்கிறது
#5. 2007 - வலது பக்கத்தில் மூன்று வண்ணங்களுடன் வெளிர் நீலம்
இந்திய அணி தனது ஜெர்சியில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்திய அணகயின் ஜெர்சி அதன் முதன்மை நிறமாக வெளிர் நீல நிறத்தைக் கொண்டிருந்தது, வலது பக்கத்தில் மூன்று வண்ணக் கோடுகளுடன் இருந்தது. ஜெர்சியின் வலது புறத்தில் நைக் நிறுவனத்தின் சின்னம் இருந்தது இடது புறத்தில் சஹாரா என்று ஆங்கிலத்தில் இருந்தது. அதே நேரத்தில் 'இந்தியா' என்று மஞ்சள் நிறத்துடன் எழுதப்பட்டது.
#6. 2011 - இருபுறமும் மூன்று வண்ணங்களுடன் அடர் நீலம்
இந்த ஆண்டு இந்திய அணி தனது இரண்டாவது ஐசிசி உலகக் கோப்பையை வென்றது. இந்திய அணி தனது ஜெர்சியை வெளிர் நிறத்திலிருந்து அடர் நிறமாக மாற்றினர். வடிவமைப்பாளர்கள் அணியின் பெயரை மார்பில் எழுத ஆரஞ்சு நிறத்தைப் பயன்படுத்தினர், அதே நேரத்தில் அவர்கள் ஜெர்சியின் இருபுறமும் மூன்று வண்ணங்களையும் பயன்படுத்தினர். 2002 - 2013 வரை இந்திய அணியின் சஹாரா ஸ்பான்சராக இருந்தது அதனால் சஹாரா என்று ஜெர்சியில் பய்னபடுத்தின்ர. இதன் பிறகு 2014 - 2017 வரை ஸ்டார் இந்தியா ஸ்பான்சராக மாறியது.
#7.2015 - ஆரஞ்சு நிறத்துடன் அடர் நீலம்
2015 இல், இந்திய வடிவமைப்பாளர்கள் உலக கோப்பைக்கு அழகான நீல ஜெர்சி தயாரிக்க மறுசுழற்சி பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்தினர். முந்தைய ஜெர்சிகளை விட முதன்மை நிறத்தை அவர்கள் மாற்றினர்.இது உலகக் கோப்பை வரலாற்றில் எளிமையான இந்திய ஜெர்சிகளில் ஒன்றாகும், மேலும் அணியின் பெயர் ஆரஞ்சு நிறத்தில் வெள்ளை எல்லையுடன் எழுதப்பட்டது. பிசிசிஐ யின் சின்னம் ஜெர்சியில் இடம் பெற்றிருந்தது.