பகுதி 1: பாகிஸ்தான் அணி 1992 உலகக் கோப்பையில் வெற்றி பெற்ற 11 வீரர்கள் தற்போது எந்நிலையில் இருக்கிறார்கள் தெரியுமா..?

<p>

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி)உலகக் கோப்பையை 1975ம் ஆண்டு ஆரம்பித்தது. இந்த உலகக் கோப்பைகாக உலகளவில் ரசிகர்கள் குவிந்தனர். தற்போது 12-வது ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மண்ணில் தொடங்கி நடைபெறுகிறது.

5-வது உலகக் கோப்பையை 1992ல் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது. இம்ரான் கான் தலைமையின் கீழ் வெற்றி பெற்றது. அதுவே தற்போது வரை அவர்கள் வெற்றி பெற்ற முதல் மற்றும் கடைசியாக உலகக் கோப்பையாக இருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து இரு அணிகளும் மற்ற அணிகளை வீழ்த்திய பின்னர் இறுதிப் போட்டியை அடைந்தன. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் இந்த அதிரடியான இறுதிப் போட்டியை நடத்தியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிஙை தேர்வு செய்தது.

பாகிஸ்தான் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் இறுதிப்போட்டியில் வென்றனர். பாக்கிஸ்தானில் ரமீஸ் ராஜா, வசிம் அக்ரம், ஜாவேத் மியாண்டட் மற்றும் இன்னும் பல பெரிய பெயர்கள் இடம்பெற்றன. அந்த இரவு மற்றும் இன்று முதல் 27 வருடங்கள் கடந்துவிட்டன, இறுதி ஆட்டத்தில் விளையாடிய 11 பாக்கிஸ்தான் வீரர்கள் தற்போது எங்கே இருக்கிறார்கள் என்பதை காண்போம்.

1.அமீர் சோஹைல்

<p>

இவர் இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரராவார். அப்போது அவர் 19 பந்துகளில் நான்கு ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.

தற்போது, இவர் பாக்கிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை தேர்வாளராக இருந்தார்.

2.ரமீஸ் ராஜா

<p>

ரமீஸ் இறுதிப்போட்டியில் அமீருடன் சேர்ந்து தொடக்கத்தில் களமிறங்கினார். இவர் 26 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

தற்போது, இவர் ஒரு கிரிக்கெட் வீரராக தனது தொழில் வாழ்க்கையை முடித்துவிட்டு ஒரு சிறந்த ஆங்கில வர்ணனையாளராக மாறினார். தற்போது நடக்கும் உலகக் கோப்பையிலும் கூட இவர் ஆங்கில வர்ணனையாளராக இருக்கிறார்.

3.இம்ரான் கான்

<p>

இம்ரான் கான் பாகிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டராகவும் கேப்டனாகவும் இருந்தவர். ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையை தனது நாட்டுக்காக வென்ற முதல் பாக்கிஸ்தான் கேப்டன் ஆவார். இறுதிப் போட்டியில் அவர் அணியின் தூணாக இருந்தார். இறுதிப் போட்டியில் 72 ரன்கள் எடுத்து அணியின் இலக்கை 249 ரன்களாக உயர்த்தினார்.

தற்போது, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இம்ரான் கான் முற்றிலும் மாறுபட்ட ஆளுமை கொண்டவராக மாறினார். அவர் பாக்கிஸ்தானின் பிரதம மந்திரி பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் நாட்டின் பிரதமரான முதல் கிரிக்கெட் வீரர் ஆனார்.

4.ஜாவேத் மியாண்டட்

<p>

உலகக் கோப்பையின் 5 வது பதிப்பில் ஜாவேத் மியாண்டட் தனது சிறந்த பேச்சுகள் மற்றும் சிறந்த இன்னிங்ஸ் ஆகியவற்றைக் காட்டிலும் சுவாரஸ்யமானவர். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு இரண்டாவது மிக உயர்ந்த ரன்கள் எடுத்தவராவார். ஜாவேத் ஒரு அற்புதமான அரை சதம் அடித்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் 1975 முதல் 1996 வரை அனைத்து ஆறு உலகக் கோப்பையையும் விளையாடியது போல் மியாண்டட் கிரிக்கெட் வாழ்க்கை 20 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்தது.1996 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் தேதி இந்தியாவுக்கு எதிரான அவரது கடைசி சர்வதேச ஆட்டத்தில் அவர் விளையாடினார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் தனது இரண்டாவது தொழிலாக பயிற்சியாளார் எனும் தொழிலை தேர்ந்தெடுத்தார். இவர் கமென்டேடராகவும் இருந்தார்.

5.இன்சமாம்-உல்-ஹக்

Inzamam-ul-haq
Inzamam-ul-haq

பாகிஸ்தான் அணியின் சிறந்த வீரராகவும் சிறந்த கேப்டனாக திகழ்ந்தவர் இன்சமாம். இவரின் சிறந்த பேட்டிங் திறமையால் அணியின் நிலையை உயர்த்தியுள்ளார். எடுத்து அந்த போட்டியில் மிகவும் முக்கியமான இறுதி போட்டியில் 42 ரன்கள் ஒரு இன்னிங்ஸில் விரைவாக விளையாடுவதன் மூலம் தனது கிளாஸை தெளிவாகக் காட்டினார்.

அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஒரு பெரிய பயிற்சியாளராக மாறினார். தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வுக் குழுவாக உள்ளார்.

Quick Links

Edited by Fambeat Tamil