ஐபிஎல் 2019: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏற்படவுள்ள 2 மாற்றங்கள்

MSD
MSD

12வது ஐபிஎல் தொடரின் ஒருபாதி போட்டிகள் முடிவடைந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் பங்கேற்று 7ல் வெற்றி பெற்று புள்ளி அட்டவனையில் முதலிடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் ஒரெயொரு தோல்வியை சென்னை சூப்பர் கிங்ஸ் சந்தித்துள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் ஆகிய இரு அணிகள் மட்டுமே இதுவரை 8 போட்டிகளில் பங்கேற்று 7ல் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் 2010லிலும், கிங்ஸ் XI பஞ்சாப் 2014லிலும் இந்த சாதனையை செய்துள்ளன. ஆனால் இந்த இரு அணிகளும் அந்த வருட ஐபிஎல் சீசன்களில் இறுதி போட்டியில் தோல்வியை தழுவியுள்ளன.

ஏப்ரல் 17 அன்று ஹைதராபாத்தில் நடக்கவுள்ள போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்று விட்டால் ஐபிஎல் வரலாற்றில் ஒரு புது சாதனை நிகழ்த்தப்படும். ஐபிஎல் தொடரில் எந்த அணிகளும் 9 போட்டிகளில் 8 வெற்றிகளை பெற்றதில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த அபூர்வ சாதனையை படைக்கும் தருவாயில் உள்ளது. கடந்த கால சென்னை, ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டிகளை வைத்து பார்க்கும் போது சென்னை அணிக்கு இந்த சாதனையை படைக்க அதிக வாய்ப்புள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீதமுள்ள 6 போட்டிகளில் 2 வெற்றிகளை குவித்தாலே அரையிறுதிக்கு தகுதி பெற்று விடும். இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்ற 7 வெற்றிகளில் 4 வெற்றிகள் ஆட்டத்தின் இறுதி ஓவரில் நிகழ்த்தப்பட்டுள்ளது. டுயன் பிரவோ, எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னர் ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஃபினிஷர்களாக இருந்துள்ளனர்.

இருப்பினும் இந்த கடைசி ஓவரில் ஃபினிஷ் செய்யும் வித்தை அனைத்து போட்டிகளிலும் கிடைப்பது மிகவும் கடினம். எனவே சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் அணியில் 2 மாற்றங்கள் கண்டிப்பாக நிகழ வாய்ப்புள்ளது. ஒரு சிறப்பான வெற்றிகளை குவித்து வரும் அணியை மகேந்திர சிங் தோனி அவ்வளவு எளிதாக மாற்றமாட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்தததே. இருப்பினும் அணியில் உள்ள சிறு சிறு தவறுகளை களைய தோனி இந்த முடிவை மேற்கொண்டு சில புதிய முகங்களை அணியில் இடம்பெற செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

#1 ஷேன் வாட்சனிற்கு பதிலாக ஸ்காட் குஜ்லெஜின்

Scott Kuglegin
Scott Kuglegin

ஷேன் வாட்சன் தனது அதிரடி ஆட்டத்தை இந்த ஐபிஎல் சீசனில் வெளிபடுத்தவில்லை. 8 போட்டிகளில் பங்கேற்று 14 சராசரியுடன் 111 ரன்களை மட்டுமே அவர் இந்த சீசனில் எடுத்துள்ளார். முன்பெல்லாம் ஷேட் வாட்சனை கட்டுக்குள் கொண்டு வர எதிரணி கேப்டன்கள் சுழற்பந்து வீச்சாளர்களை பவர் பிளேவில் பயன்படுத்துவர். ஆனால் தற்போது வேகப்பந்து வீச்சாளர்களை வைத்தே ஷேன் வாட்சனை கட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.

இந்த சீசனில் இவர் ஒரு போட்டிகளில் கூட பந்துவீச்சை மேற்கொள்ளவில்லை. இவர் அணியிலிருந்து நீக்கப்பட்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எக்ஸ்ட்ரா பௌலிங் இல்லாமல் சரியாக 5 பௌலர்களுடன் களமிறங்கும். இந்த மாற்றம் சற்று சிக்கலான மாற்றம் தான்.

தோனி இதனை சரிசெய்ய ஸ்காட் குஜ்லெஜினை ஆடும் XI-ல் இடம்பெற செய்ய வேண்டும். குஜ்லெஜின் 2 போட்டிகளில் பங்கேற்று சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டுள்ளார். அவருக்கு பேட்டிங்கில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

டெத் ஓவரில் இவரது பௌலிங் மிகவும் சிறந்த எகனாமிக்கல் ரேட்டுடன் உள்ளது. ஆட்டத்தின் இறுதி ஓவர்களில் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு வரும் குஜ்லெஜினை ஆட்டத்தின் தொடக்க ஓவர்களில் தீபக் சகாருடன் சேர்ந்து பந்துவீச வைக்கப்பட வேண்டும். இந்த முடிவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகவும் சரியானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

#2 கேதார் ஜாதவிற்கு பதிலாக முரளி விஜய்

Murali Vijay has always performed for CSK
Murali Vijay has always performed for CSK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் ஆட்டத்திறனை வெளிபடுத்த இயலாமல் தவித்து வருகிறார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஃபேப் டுயுபிளஸ்ஸி ஐபிஎல் தொடரின் பாதியில் கிளம்பி விட அதிக வாய்ப்புள்ளது. எனவே சென்னை அணி முரளி விஜயை ஆடும் XI-ல் சேர்க்க இதுவே சரியான நேராமாகும்.

முரளி விஜய் சென்னை அணிக்காக பல சாதனைகளை படைத்துள்ளார். அத்துடன் 1600 ரன்களை சென்னை சூப்பர் அணி சார்பாக விளையாடி குவித்துள்ளார். வேறு அணியிலிருந்து மீண்டும் சென்னை அணிக்கு திரும்பியுள்ள முரளி விஜய் ஒரேயொரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் அம்பாத்தி ராயுடு மற்றும் ஷேன் வாட்சனின் அதிரடி தொடக்கத்தால் முரளி விஜய் ஆடும் XI-லிருந்து நீக்கப்பட்டார். இருப்பினும் இந்த வருட ஐபிஎல் தொடரில் அவர் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.

முரளி விஜய் தொடக்க வீரராக களமிறங்கினால் அம்பாத்தி ராயுடு அல்லது கேதார் ஜாதவ் ஆடும் XI-லிருந்து நீக்கப்பட வேண்டும். ராயுடு இந்த சீசனில் 8 போட்டிகளில் பங்கேற்று 20 சராசரியுடன் 138 ரன்களை குவித்துள்ளார். கேதார் ஜாதவ் 7 போட்டிகளில் பங்கேற்று 27 சராசரியுடன் 137 ரன்களை எடுத்துள்ளார்.

ராயுடு ராஜஸ்தான் அணிக்கு எதிராக அரைசதம் விளாசி போட்டியை சென்னை வசம் மாற்றினார். கேதார் ஜாதவ் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 54 பந்துகளை எதிர்கொண்டு 57 ரன்களை குவித்துள்ளார். கேதார் ஜாதவ் பெரிய ரன்களை விளாச அதிக பந்துகளை எடுத்துக் கொள்கிறார். கிட்டத்தட்ட இரு வீரர்களும் ஒரே மாதிரியாகதான் இந்த சீசனில் விளையாடியுள்ளனர்.

ஸ்காட் குஜ்லெஜினை ஆடும் XI-ல் சேர்க்கப்பட்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 வழக்கமான பௌலர்களுடன் களமிறங்கும். எனவே பௌலிங்கில் கேதார் ஜாதவின் உதவி சென்னை அணிக்கு தேவைப்படாது. தோனிக்கு கூடுதல் பௌலிங் தேவைப்பட்டால் சுரேஷ் ரெய்னாவை பந்துவீச அனுமதிக்கலாம். எனவே கேதார் ஜாதவிற்கு சில போட்டிகளில் ஓய்வளிக்கப்பட்டு முரளி விஜய்க்கு டாப் ஆர்டரில் வாய்ப்பளிக்கலாம்.

இந்த இருமாற்றங்கள் மட்டுமன்றி ஹர்பஜன் சிங்கை மீண்டும் ஆடும் XI-ல் சேர்க்கலாம். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் சிறந்த ஆட்டத்திறனுடன் திகழும் டேவிட் வார்னரை, ஹர்பஜன் சிங் தனது சுழலால் வீழ்த்த அதிக வாய்ப்புள்ளது.

Quick Links

Edited by Fambeat Tamil