2019 உலக கோப்பை தொடர் இன்று துவங்க உள்ளது. இன்று நடைபெறும் முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவிருக்கின்றன. முதலாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி பெற்ற இங்கிலாந்து அணி, இரண்டாவது போட்டியில் அருமையாக விளையாடியது. உலககோப்பை தொடருக்கான அணியில் இடம் பெறுவது ஒவ்வொரு வீரரின் தனிப்பட்ட கனவாகும். அப்படிப்பட்ட வீரர்கள் உலக கோப்பை தொடர்களில் அணியில் ஒரு வீரராகவும் பயிற்சியாளராகவும் இடம் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்று உள்ளனர். அத்தகைய சாதனையை படைத்த இரு வீரர்களை பற்றி இந்த பட்டியலில் காணலாம்.
#1.ஜெஃப் மார்ஷ்:

1987ம் ஆண்டு நடைபெற்ற முதல் முறையாக உலகக் கோப்பை போட்டியில் விளையாடினார், ஆஸ்திரேலியாவின் மார்ஷ். வலது கை பேட்ஸ்மேனான இவர், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பாக பங்களித்தார். மேலும், இவரது பங்களிப்பு ஆஸ்திரேலிய அணி தனது முதலாவது உலகக் கோப்பை தொடரை வெல்வதற்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது. தொடரின் 8 போட்டியில் விளையாடி இரு சதங்கள் ஒரு அரைசதம் உட்பட மொத்தம் 428 ரன்களைக் குவித்திருந்தார். மேலும், தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் மூன்றாம் இடமும் பெற்று சாதனை படைத்தார். பின்னர் 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் வெறும் ஐந்து போட்டிகள் மட்டுமே விளையாடிய மார்ஷ், கடந்த தொடரை போல் சிறப்பாக விளையாடவில்லை. தொடரில் ஒரு அரைசதம் உட்பட மொத்தம் 151 ரன்களை மட்டுமே இவரால் குவிக்க முடிந்தது. அதன்பின்னர், 1994ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
1996 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராகவும் செயல்பட்டார். இவரது தலைமையில் ஷாய் ஹோப் 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது உலக கோப்பை தொடரை வென்று சாதனை படைத்தது. மேலும் அந்த தொடரில் தொடர்ச்சியாக 7 போட்டிகளில் இந்த அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அணியில் ஒரு வீரராகவும் பயிற்சியாளராகவும் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார், மார்ஷ்.
#2.டேரன் லீமேன்:

ஆஸ்திரேலியா 1999ஆம் ஆண்டு தனது முதலாவது உலக கோப்பை தொடரில் விளையாடிய டேரன் லீமன், அணியில் தனது சிறிய பங்களிப்பினை மட்டுமே அளித்தார். 8 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் ஒரு அரைசதம் உட்பட மொத்தம் 136 ரன்களை மட்டுமே அவர் குவித்தார். இவர் சிறப்பாக செயல்படாவிட்டாலும் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. 2003ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரிலும் இவர் பங்கேற்று 8 போட்டிகளில் 224 ரன்களை குவித்தார். பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மீண்டும் ஒரு முறை பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பை தொடர்களில் மும்முறை வென்ற ஒரே அணி என்ற சாதனையை படைத்தது.
அதன் பின்னர் 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக லீமன் நியமிக்கப்பட்டார். இவரது பயிற்சியின் கீழ் இரு ஆஷஸ் வெற்றிகள் உட்பட 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரிலும் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. எனவே, இந்த அரிய சாதனை படைத்த இரு வீரர்களில் ஒருவராக டேரன் லீமன் இருக்கிறார்.