ஆஸ்திரேலியாவிற்கு எதிரான எதிர்பாரத ஓடிஐ மற்றும் டி20 தொடர் இழப்பினால் தற்போது மிகுந்த நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது இந்திய அணி. இதனால் 2019 உலகக் கோப்பையில் இந்திய அணியை தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் வாரியமும், இந்திய தேர்வுக்குழுவும் பெரும் தலைவலியை சந்தித்துள்ளது.
ஆஸ்திரேலிய தொடரின் மூலம் இந்திய அணிக்கு பலனை விட சோதனைகளே அதிகமாக இருந்தது. இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய தொடர் 2019 உலகக் கோப்பைக்கு முன் கடைசி தொடர் என்பதால் அணியை எப்படி வடிவமைப்பது என்ற நிலைக்கு இந்திய தேர்வுக்குழு தள்ளப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரத்தின் படி 10 கிரிக்கெட் வீரர்கள் உலகக் கோப்பையில் தங்களது இடங்களை உறுதி செய்துள்ளனர். ரோகித் சர்மா, ஷிகார் தவான், விராட் கோலி, எம்.எஸ்.தோனி, கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், ஜாஸ்பிரிட் பூம்ரா, குல்தீப் யாதவ், முகமது ஷமி.
இவர்களை தவிர யுஜ்வேந்திர சகால் இந்த பட்டியலில் உள்ளார். ஆனால் கடந்த சில போட்டிகளாக இவரது ஆட்டத்திறன் அவ்வளவாக யாரையும் கவரவில்லை.
ஆஸ்திரேலிய தொடருக்கு பின் அம்பாத்தி ராயுடு, ரிஷப் பண்ட் மற்றும் கே.எல்.ராகுல் கிட்டத்தட்ட அணியை விட்டு நீக்கப்படுவர். ஏனெனில் இவர்கள் இந்த தொடரில் சோபிக்கவில்லை. நிறைய வாய்ப்புகள் அம்பாத்தி ராயுடுவுக்கு நம்பர்-4 ல் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அதை அவர் நியூசிலாந்து தொடரை தவிர மற்ற எந்த தொடரிலும் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
அஜின்க்யா ரகானேவை மீண்டும் இந்திய ஓடிஐ அணியில் இடம்பெற செய்து நம்பர்-4ல் களமிறக்கலாம் என நிறைய பேச்சுகள் எழுந்துள்ளன. இந்திய அணிக்கு 4வது இடத்தில் செட்டிஸ்வர் புஜாரா சரியான வீரராக இருப்பார் என முன்னாள் இந்திய கேப்டன் சவ்ரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இவரது கருத்து கண்டிப்பாக ஏற்கும் வகையில்தான் உள்ளது. இதற்கு முன் இவரது பரிந்துரைகள் இந்திய அணிக்கு அதிக முறை சரியாக அமைந்துள்ளது.
கங்குலியின் கருத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்று புஜாராவை இந்திய அணிக்கு தேர்வு செய்தால் சுழற்பந்து வீச்சாளர் யுஜ்வேந்திர சகாலிற்கு பதிலாக நான்காவது வேகப்பந்து வீச்சாளராக இஷாந்த் ஷர்மாவை இந்திய அணியில் சேர்க்கலாம். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக பந்துவீச்சை மேற்கொண்டு வருகிறார். உமேஷ் யாதவ் மற்றும் கலீல் அகமது பந்துவீச்சை ஒப்பிடுகையில் இஷாந்த் சர்மா பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. ஆனால் தற்போது உள்ள இக்கட்டான சூழ்நிலையில் புஜாரா-வையோ அல்லது இஷாந்த் ஷர்மாவையோ இந்திய கிரிக்கெட் வாரியம் ஓடிஐ அணியில் சேர்ப்பது மிகவும் கடினம். ஆனால் இவர்கள் இருவரும் இந்திய ஓடிஐ அணிக்கு சரியாக இருப்பர்.
அஜின்க்யா ரகானே தொடக்க ஆட்டக்காரராகவும், மிடில் ஆர்டர் என இரண்டு இடங்களிலும் களமிறங்கும் திறமை உடையவர். தினேஷ் கார்த்திக்-கும் மிடில் ஆர்டருக்கு ஒரு போட்டியாளராக உள்ளார். இந்திய அணி தற்போது உள்ள நிலையில் தினேஷ் கார்த்திக் இந்த இடத்திற்கு சரியான வீரராக திகழ்வார். தினேஷ் கார்த்திக்கின் பணி ரகானேவை விட சற்று அதிகமாகவே உள்ளது. தினேஷ் கார்த்திக் ஒரு சிறந்த ஃபினிஷர் மற்றும் விக்கெட் கீப்பர்.
ஆஸ்திரேலியா தொடர் இந்திய அணிக்கு பெரும் துயரத்தை அளித்திருந்தாலும் ஒரு சில நன்மைகளையும் அளித்துள்ளது. ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்பட்ட இரு வீரர்கள் ஆஸ்திரேலிய தொடரில் தங்களது ஆட்டத்திறனை நிறுபித்துள்ளனர். இந்த கட்டுரை அந்த இரு வீரர்களை பற்றி உங்களுக்கு எடுத்துரைக்கும்