ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரின் மூலம் 2019 உலகக் கோப்பை அணிக்கு இந்திய அணி கண்டெடுத்த 2   வீரர்கள்

Ravi Shastri - Tough times ahead for the Indian Head Coach
Ravi Shastri - Tough times ahead for the Indian Head Coach

#2 விஜய் சங்கர்

Vijay Shankar - A last-minute option but a better option
Vijay Shankar - A last-minute option but a better option

ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் விஜய் சங்கர் தனது சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். ஹர்திக் பாண்டியாவிற்கு காயம் ஏற்பட்டதால் விஜய் சங்கருக்கு இந்திய அணியில் அளிக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். இவரது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தேர்வுக்குழுவை பெரிதும் ஈர்த்துள்ளார்.

இந்த தொடரில் 4 போட்டிகளில் விளையாடிய இவர் 46, 32, 26 மற்றும் 12 ஆகிய ரன்களை குவித்தார். இவரது சிறப்பான இன்னிங்ஸ் நாக்பூரில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் வெளிப்பட்டது. 41 பந்துகளில் 46 ரன்களை குவித்து அசத்தினார். அத்துடன் கடைசி ஓவரை வீசி 3 பந்துகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

அதிக ரன்கள் குவிக்கப்பட்ட மொகாலியில் நடந்த 4வது ஒருநாள் போட்டியில் 5 ஓவர்களை வீசி 29 ரன்களை மட்டுமே தனது பௌலிங்கில் கொடுத்தார். ஜடேஜா மற்றும் விஜய் சங்கர் ஃபீல்டிங்கில் பவுண்டரி லைனில் சிறப்பாக அசத்தினர். முதல் ஒருநாள் போட்டியில் விஜய் சங்கரின் உஸ்மான் கவாஜா-வின் கேட்ச் மிகவும் அற்புதமாக இருந்தது.

இந்திய அணிக்கு 4வது வேகப்பந்து வீச்சாளர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆகிய இரு பணியையும் உலகக் கோப்பைக்கு முன் நடந்த இந்த தொடரில் சிறப்பாக செய்துள்ளார். விஜய் சங்கர் ஆஸ்திரேலிய தொடரில் தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சிறிது கூட தவறவிடவில்லை.

இந்த கட்டூரைக்கு முதல் பக்கத்தில் 11 வீரர்களை குறிப்பிடப்பட்டிருந்தது. ஜடேஜா மற்றும் விஜய் சங்கர் அவர்களுடன் சேர்க்கப்பட்டு 13 வீரர்களாக தேர்வு செய்யப்படலாம். 14வது வீரராக அஜின்க்யா ரகானே அல்லது தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

Quick Links