உலகில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை மிகப்பெரிய போட்டியாக கருதப்படுகிறது. இந்த உலகக் கோப்பை தொடர் 1975 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும். இதைத் தொடர்ந்து நான்கு வருடத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக நடைப்பெற்று வருகிறது. தற்போது வரை 11 உலக்க கோப்பை தொடர்கள் நடைப்பெற்றுள்ள நிலையில் இந்த வருடம் 12வது உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கோலாகளமாக நடைபெற்று வருகிறது. இந்த 12வது உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 45 லீக் போட்டிகள் நடைபெறும் இதன் பின் 3 நாக் அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் நடைபெறும்.
உலகக் கோப்பை தொடரின் ஆரம்ப காலத்தில் மொத்தம் 20 அணிகள் போட்டியிட்டன. 2015 ஆம் ஆண்டு 15 அணிகளாக மட்டும் போயிட்டன.அதன் பின் தற்போது நடைபெறும் 12வது உலகக் கோப்பையில் 10 அணிகளாக மீண்டும் குறைந்தது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசீலாந்து, பங்களாதேஷ், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் என பத்து அணிகள் விளையாடுகின்றது.
இதில் ஒவ்வொரு அணிகளும் தங்கள் நாட்டிலுள்ள 15 சிறந்த கிரிக்கெட் வீரர்களை தங்கள் உலகக் கோப்பைப் அணியுடன் இணைத்துக் கொள்வர். ஆனால் கிரிக்கெட் தொடரில் அணியின் சிறந்து 11 வீரர்கள் மட்டும் அணிக்காக விளையாடுவர் மற்ற 4 வீரர்களை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பயன்படுத்திக் கொள்வர்.
இவ்வாறு உலகக்கோப்பை தொடரில் தனது அணிக்காக இடம் பெற்று ஒரு முறை கூட அணிக்காக விளையாடமலே வெற்றி பெற்ற இரு முக்கிய வீரர்களைப் பற்றி காண்போம்.
#.1 உபல் சந்தனா - இலங்கை ( Upul Chandana )
உபல் சந்தனா, இவர் இலங்கை அணியின் முன்னாள் வீரர்களுள் ஒருவர் ஆவார். இவர் இங்கை அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் மற்றும் சிறந்த ஃபீல்டர் என மிகப்பெரிய ஆல் ரவுண்டராக திகழ்ந்தார். இவர் 1994 ஆம் ஆண்டு ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார். இவரின் சிறப்பான பந்துவீசு மற்றும் ஃபீல்டங் கரணமாக இவர் 1996 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார்.
ஆனால் உலகக் கோப்பை போட்டிகளில் தங்கள் அணியின் XI வீரர்களில் இலங்கை அணி இவரை சேர்க்கப்படவில்லை. 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு பின் இவர் இலங்கை அணிக்காக தேர்வு பெறவில்லை. ஆனால்,ஒரே ஒரு உலகக்கோப்பையில் கழந்துக்கொண்டு விளையாடமலே வெற்றி பெற்ற முதல் கிரிக்கெட் வீரராக திகழ்கிறார்.
#2.நாதன் ஹாரிட்ஸ் - ஆஸ்திரேலியா ( Nathan Hauritz )
நாதன் ஹாரிட்ஸ், முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் வீரராக இருந்தவர். இவர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடியுள்ளார். இவர் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் ஆவார்.
1999 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா அணி வென்றது. ஆனால் 2003 உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலியா அணியில் உறுப்பினர்களான நாதன் ஹாரிட்ஸ் 15 வீரர்கள் கொண்ட அணியில் சேர்க்கப்பட்ட போதிலும், ஒரு உலகக் கோப்பை போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
இவருக்கு அப்போது 21 வயதாக இருந்தது ஆனால் அவர் இன்னும் டெஸ்ட் தொடரில் எந்தொரு சாதனையையும் படைக்கவில்லை. இருப்பினும் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடியதால் இவர் 2003 ஆம் ஆண்டு ஷேன் வார்ன் க்கு பதிலாக உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.
நாதன் ஹாரிட்ஸ் பெரிதளவில் அனுபவம் ஏதும் இல்லாததால் தான் 2003 உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றது. ஆனால் இவர் 2007 ஆம் ஆண்டு வரை தனது இடத்தை உறுதிப்படுத்திக் கொண்டு இருந்தார். துரதிருஷ்டவசமாக இவருக்கு கடைசி நிமிடத்தில் காயம் ஏற்பட்டதால் ஆஸ்திரேலிய அணி இவருக்கு பதிலாக ஜேசன் க்ரேஜா விளையாடினார். இந்த காயம் காரணமாக 2015 உலகக் கோப்பையிலும், 2016 ஆம் ஆண்டுக்கான போட்டிகளிலும் அவர் பங்கேற்கவில்லை.