#2.நாதன் ஹாரிட்ஸ் - ஆஸ்திரேலியா ( Nathan Hauritz )
நாதன் ஹாரிட்ஸ், முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் வீரராக இருந்தவர். இவர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடியுள்ளார். இவர் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் ஆவார்.
1999 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா அணி வென்றது. ஆனால் 2003 உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலியா அணியில் உறுப்பினர்களான நாதன் ஹாரிட்ஸ் 15 வீரர்கள் கொண்ட அணியில் சேர்க்கப்பட்ட போதிலும், ஒரு உலகக் கோப்பை போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
இவருக்கு அப்போது 21 வயதாக இருந்தது ஆனால் அவர் இன்னும் டெஸ்ட் தொடரில் எந்தொரு சாதனையையும் படைக்கவில்லை. இருப்பினும் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடியதால் இவர் 2003 ஆம் ஆண்டு ஷேன் வார்ன் க்கு பதிலாக உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.
நாதன் ஹாரிட்ஸ் பெரிதளவில் அனுபவம் ஏதும் இல்லாததால் தான் 2003 உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றது. ஆனால் இவர் 2007 ஆம் ஆண்டு வரை தனது இடத்தை உறுதிப்படுத்திக் கொண்டு இருந்தார். துரதிருஷ்டவசமாக இவருக்கு கடைசி நிமிடத்தில் காயம் ஏற்பட்டதால் ஆஸ்திரேலிய அணி இவருக்கு பதிலாக ஜேசன் க்ரேஜா விளையாடினார். இந்த காயம் காரணமாக 2015 உலகக் கோப்பையிலும், 2016 ஆம் ஆண்டுக்கான போட்டிகளிலும் அவர் பங்கேற்கவில்லை.