உலக கோப்பைக்கு பின் அணியில் இடம்பெற்றிருந்த சச்சின் தெண்டுல்கர் மற்றும் சேவாக் போன்ற வீரர்கள் கதா நாயகர்களாக ஒய்வு பெற்றாலும் ஒரு சில வீரர்கள் அணியில் திரும்ப விளையாட வாய்ப்பு கிடைக்காமல் சென்றனர். தற்போது கோஹ்லி மற்றும் தோனி போன்ற வீரர்களே அணியில் இன்றும் நீடிக்கின்றனர்.கிரிக்கெட் திருவிழா என்றால் அது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தான். இது பல இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கனவாக இருந்தது, இந்த சூழலில் 2011ம் ஆண்டு இந்தியா, இலங்கை, வங்கதேசம் இணைந்து நடத்திய உலக கோப்பை தொடரை வென்றது இந்திய கிரிக்கெட் அணி. ஆகவே இது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அற்புதமான தருணங்களில் ஒன்றாகும். (இதற்கு முன்பு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 1983ல் மகுடம் சூட்டியது குறிப்பிடத்தக்கது) இவ்வரலாற்று வெற்றியானது அணியில் உள்ள 15 வீரர்களின் கூட்டு முயற்சியை கொண்டே சாத்தியமானது.
இதில், உலக கோப்பை அணியில் இடம் பெற்றிருந்த 15 வீரர்களின் இன்றைய தகவல்கள், முன்னேற்றம் மற்றும் பல சுவாரஸ்யம் பற்றிய தொகுப்பை காண்போம்.
#1 விரேந்தர் சேவாக்
புகழ்பெற்ற இந்திய தொடக்க வீரரான இவர், 2011 உலக கோப்பைக்கு பின்பு சீரான முறையில் ரன் குவிக்க தவறியதால் 2013 ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்பு 2016 ஜனவரி வரை உள்நாட்டு போட்டிகளிலும், ஐபிஎல் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடி வந்த இவர், அனைத்து விதமான போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார்.
அவரது ஓய்வுக்கு பிறகு சமுக வலைதளங்களில் அதிகமாக நேரத்தை செலவிட்டு, அவரின் ட்வீட்களின் மூலம் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்றும், சீல தருணங்களில் வியக்கவும் வைத்திருக்கிறார். அத்துடன் இந்தி வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார். மேலும் தற்பொழுது கிங்ஸ் 11 பஞ்சாப் என்ற ஐபிஎல் அணியில் பயிற்சியாளராக பணிபுரிகிறார்.
கும்பிளேவின், இந்திய அணி தலைமை பயிற்சியாளர் பதவி காலம் முடிவடைந்தபோது சேவாக் அந்த பதவிக்கு விண்ணப்பித்தார், இருப்பினும் பிசிசிஐ இரவி சாஸ்திரியை தேர்வு செய்தது.
#2 சச்சின் தெண்டுல்கர்
கிரிக்கெட்டின் 'கடவுள்' என கருதப்படும் இவர், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் அதிக ரன்களை குவித்தோர் பட்டியலில் இரண்டாவது இடம் பெற்றார்.
அவரது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 100ஆவது சதத்தை 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையில் வங்கதேசம் அணிக்கு எதிராக பதிவு செய்தார். பின் சில சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒருநாள் போட்டிகளில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.
எனினும், டெஸ்ட் போடிக்களில் தொடர்ந்து விளையாடி வந்த இவர், 2013 நவம்பரில் தனது 200வது போட்டியில் பங்கேற்றதும் அனைத்து வித போடிக்களிலிருந்து ஓய்வை அறிவித்த இவர் ரசிகர்களிடமிருந்து பெரும் பிரியாவிடை பெற்றார்.
அவரது ஓய்விற்கு பின், ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸில் பணிபுரிகிறார். அதுமட்டுமின்றி பிசிசிஐயின் கிரிக்கெட் ஆலோசனை குழுவில் உறுப்பினராக உள்ளார். எப்போதாவது கிரிக்கெட் சம்மந்தபட்ட ஒளிபரப்புகளில் ஆய்வாளராக செயல்படுவார்.
#3 கௌதம் கம்பீர்
உலக கோப்பையின் இறுதிப்போட்டியில் கம்பீர் அச்சமற்ற முறையில் குவித்த 97 ரன்கள் நிச்சயமாக மறக்க முடியாத சிறப்பாகும். இறுதிப்போட்டியில் அவரது ஆட்டம் சிறப்பாக இருந்த போதிலும் 2012ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்தும், 2013ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலிருந்தும் நீக்கப்பட்டார்.
2014 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் திரும்ப அணியில் இடம்பெற்ற போதிலும் அவரது இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. அவரது கிரிக்கெட் வாழக்கையானது உள்ளூர் போட்டிகளிலேயே முடிய அதிக வாய்ப்புள்ளது.
இவரது சர்வதேச ஆட்டமானது ஏற்ற இறக்கங்களாக இருந்தாலும் ஐபிஎல் போட்டிகளில் 2017ஆம் ஆண்டு KKR அணிக்காக சீரான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்தார். அவரது தலைமையில் இருமுறை கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.இருப்பினும் DD அணிக்காக மோசமான ஆட்டம் காரணமாக தலைமை மற்றும் அணியிலிருந்து தன்னை தற்காலிகமாக விலக்கிக்கொண்டார். எனினும் 2019ஆம் ஆண்டு உலக கோப்பை அணிக்கு திரும்புவாரா என பொருத்திருந்து பார்க்கலாம்.
#4 விராட் கோஹ்லி
2011 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த இந்திய வீரர்களில் விராட் கோஹ்லியே இளம் வீரராக பங்கேற்றார், தற்பொழுது அவர் உலகின் சிறந்த வீரராகவும், மிகப்பெரிய கிரிக்கெட் பிரபலமாகவும் திகழ்கிறார்.
டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போன்ற அனைத்து போட்டிகளிலும் சாதனை மேல் சாதனைகளை செய்து வரலாற்றில் தலைசிறந்த வீரர்களின் பட்டியலில் தனக்கென ஓரிடத்தை தக்கவைத்துக்கொண்டார். இவரது ஆரம்ப காலங்களில் பொறுப்பற்ற வீரர் என ரசிகர்கள் அழைத்ததிலிருந்து தற்பொழுது இளைஞர்களின் நினைவு சின்னமாகவும், பலருக்கும உத்வேகமாகவும் உருவெடுத்திருகின்றார்.
2015ஆம் ஆண்டு டெஸ்ட் அணியின் கேப்டனாகவும், 2017 ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 அணிக்கான கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார், தற்பொழுது இந்திய அணியை அனைத்து வித போட்டிகளிலும் வழிநடத்தி வருகிறார். ஐபிஎல் தொடரில் RCB அணியை வழிநடத்தியும் சீரான முறையில் ரன்களை குவித்துக்கொண்டுள்ளார். இவர் தலைமையில் 2019 உலக கோப்பையை வெல்லும் என எதிர் நோக்கலாம்.
#5 யுவ்ராஜ் சிங்
2011 உலகக்கோப்பை வெல்ல முக்கியமான வீரர்களில் ஒருவர் யுவ்ராஜ் சிங், ஆம் இவரே தொடர் நாயகன். இவரது அதிரடி ஆட்டமும் துல்லியமான பந்துவீச்சும் இந்தியா உலகக்கோப்பையை வெல்ல பெரிதும் உதவின. உலக கோப்பை வென்ற ஒரு வருடத்திலேயே கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி ஆட்கொண்டது. ஆம், யுவ்ராஜ் புற்றுநோயால் பாதிக்கபட்டுள்ளார் என கண்டற்றியப்பட்ட்டது. எனினும் ஒருசில மாதங்களிலேயே புற்றுநோயை வென்று மீண்டும் விளையாட துவங்கினார்.
நோய்லிருந்து திரும்பினாலும் அவரின் ஆட்டத்தில் சற்று தொய்வு ஏற்பட்டிருந்தது. அதிலிருந்து அவரது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த இயலவில்லை.
மோசமான செயல்பாடு இருந்த போதும் ஒருசில சமயங்களில் அணிக்கு தேர்வாகியும் பின்பு அணியிலிருந்து நீக்கப்பட்டார். தற்பொழுது உள்ளூர் போட்டிகளில் ஆர்வம் செலுத்தி வரும் யுவ்ராஜ் விரைவில் தனது ஓய்வை அறிவக்கலாம் என தெரிகிறது.
#6 எம் எஸ் தோனி
தோனி, இந்திய அணியை உலகக்கோப்பைக்கு வழி நடத்தியவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. 2011க்கு பின் தோனியின் தலைமை பதவி காலங்களில் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் CSK அணி இவரது தலைமையில் கோப்பை வென்ற பொழுது, இந்திய அணி 8 வெளிநாட்டு சுற்றுபயணங்களிலும் தொடர் தோல்விகளை சந்தித்துள்ளன. இருப்பினும் இவர் இந்தியாவின் சிறந்த கேப்டன்களில் ஒருவர். இவரது தலைமையில் இந்திய அணி சாம்பியன்ஸ் ட்ராபி, பல இருதரப்பு, முத்தரப்பு மற்றும் சில டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது.
2014 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த இவர், 2017 ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20களில் கேப்டன் பதவியிலிருந்து தன்னை விலகிக்கொண்டார். எனினும், 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பையில் விளையாட உள்ளார்.
#7 சுரேஷ் ரெய்னா
2011 உலகக்கோப்பைக்கு பின் டெஸ்ட் போட்டிகளில் பெரிதாக சாதிக்க முடியவில்லை ஏன்றாலும் 20 ஓவர் போட்டிகளில் ரெய்னா தனக்கென நிரந்தர இடம் பிடித்தார்.
இருப்பினும், 2015 உலகக்கோப்பைக்கு பின்பு சீரான முறையில் ரன்களை குவிக்க தவறியதால் அக்டோபர் 2015ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளிலும், மார்ச் 2016ஆம் ஆண்டு டி20 அணியில் இருந்தும் நீக்கபட்டார்.
முந்தைய 2017, 2018 ஆம் ஆண்டுகளில் டி20 மற்றும் இடை 2018ல் ஒருநாள் போட்டிகளில் சில முறை இடம்பெற்றும் தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள அவரால் இயலவில்லை, 2019 உலகக்கோப்பைக்கு அணியில் இடம் கிடைப்பதும் கடினமே.
எனினும், ஐபிஎல் தொடரில் CSK அணிக்காவும், உள்ளூர் போட்டிகளில் ஊத்திரபிரதேஷ்ம் அணிக்காகவும் சீரான முறையில் ரன்களை குவிப்பதுடன் அவரது அணிக்கு முன்னனி வீரராக திகழ்கிறார்.
#8. யூசுப் பதான்
உலக கோப்பையில் இவரது பங்களிப்பு குறைவாகவே இருந்தன, இவரது சர்வதேச கிரிக்கெட் அனுபவமும் குறைவே. ஆரம்ப கட்டத்தில் இவரது அதிரடி ஆட்டமும் பதுவீச்சும் அணிக்கு பலம் சேர்க்கும் என பெரிதும் நம்பப்பட்டது, ஒரு சில ஆட்டங்களை தவிற அவரின் ஆட்டம் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
சர்வதேச அரங்கில் தனக்கு இடமில்லை என்றாலும் ஐபிஎல் தொடரில் KKR அணிக்காக முன்னனி அதிரடி ஆட்டக்காரராக ஜொலித்தார். தற்பொழுதும் SRH அணிக்காக விளையாடி வருகிறார். எனினும் இவரது ஆட்டத்தால் பலமுறை இந்தியா, பரோடா, KKR, மற்றும் SRH போன்ற அணிகள் வெற்றி பெற்றுள்ளது என்பது குறுப்பிடதக்கது.
#9 ஹர்பஜன் சிங்
உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த பெரும்பான்மையான வீரர்களை போலவே ஹர்பஜன் ஆட்டத்திலும் 2011 உலககோப்பைக்கு பிறகு தொய்வு எற்ப்பட்டது. அக்டோபர் 2011 ஆம் ஆண்டு ஒருநாள் அணியிலிருந்தும் அதே வருடம் செப்.ல் டெஸ்ட் அணியிலிருந்தும் நீக்கபட்டார்.
2012, 2016 ஆம் ஆண்டுகளில் டி20 போட்டிக்கான அழைப்புகளும், 2012, 2013 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிக்கான அழைப்புகளும் பெற்றார். இருப்பினும் தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.
2017ஆம் ஆண்டு வரை ஐபிஎல் தொடரில் MI அணிக்காகவும் 2018 ஆம் ஆண்டிலிருந்து CSK அணிக்காகவும் விளையாடி வருகிறார். உள்ளூர் போட்டிகளில் ஒருசில முறை பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறர். தற்பொழுது கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார்.
#10 ஜாகீர் கான்
2011 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு ஜாகீர்கான் சிறந்த பந்துவீச்சாளராக திகழ்ந்தார். அவரது சர்வதேச அரங்கில் இது சிறந்த பகுதியாக இருந்தாலும் 2012 ஆம் ஆண்டு 20 மற்றும் 50 ஓவர் போட்டிகளிலிருந்து நீக்கப்பட்டார்.
இருப்பினும், டெஸ்ட் போட்டிகளில் 2011, 2013 ஆம் ஆண்டுகளில் சில முறை நீக்கப்பாட்டாலும் தொடர்ந்து அசத்தலாக விளையாடி வந்தார்.
2014 ஆம் ஆண்டு அனைத்து வித போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வை அறிவித்தார். இருப்பினும் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார். 2017ஆம் ஆண்டு DD அணிக்காக பங்கேற்ற போது ஓய்வு பெற்றார். தனது ஓய்விற்க்கு பின் கிரிக்கெட் ஆய்வாளராக சில வலைதளங்களில் பணிபுரிகிறார்.
#11 ஸ்ரீ சாந்த்
ஸ்ரீ சாந்த், பிரவின் குமாருக்கு கடைசி நேரத்தில் ஏற்பட்ட காயத்தால் அணியில் விளையாட வாய்ப்பு பெற்றார். ஆனால் இவரது செயல்பாடு அவ்வளவு சிறப்பாக இல்லை. இவரது கடைசி ஒருநாள் போட்டியானது 2011 உலக கோப்பையின் இறுதிப்போட்டியாகும். டெஸ்ட் போட்டியில் ஆகஸ்ட் 2011 ஆம் ஆண்டு கடைசியாக பங்கேற்றார்.
2013ல் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதால் பிசிசிஐ அவரை விளையாட வாழ்நாள் தடை செய்தது. ஸ்ரீ சாந்த் தனக்கு உண்மையானவராக இருந்தாலும்
விசாரணை அதிகாரிகள் அவர் ஸ்பாட் ஃபிக்ஸிங்ல் ஈடுபட்டார் என உறுதியாக கூறுகின்றனர். இதன் மூலம் பல ரசிகர்களை இழந்தார் என்பது குறிப்பிடதக்கது.
பல முறை தடையை எதிர்த்து போராடியும் அவரால் அணிக்கு திரும்ப முடியவில்லை, தற்பொழுது தொலைகாட்சி நிக்ழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.