2018 ஆம் ஆண்டில் இந்தியா மிக குறுகிய வடிவ போட்டியான டி20 போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது. விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி T20 வடிவத்தில் நிறைய வெற்றி கண்டது. 2018 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் டி 20 தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தென்னாப்பிரிக்காவில் விளையாடியது இருப்பினும் இந்திய அணியின் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
2018 ஆம் ஆண்டின் இறுதி T20I ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி பெற்றது இந்திய அணி. அதற்கு முன், அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளையும் வென்றன. ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி மார்ச் 2018 ல் சுதந்திர கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் ட்வென்டி 20 தொடர் வென்றது. அயர்லாந்து (2-0) மற்றும் வெஸ்ட் இண்டீஸ் (3-0) ஆகியவற்றிற்கு எதிராகவும் 2-1 என இங்கிலாந்துக்கு எதிராகவும் வெற்றி வாகை சூடியிருந்தனர் விராட் கோலி&கோ.
மொத்தத்தில், இந்திய அணி 19 T20I போட்டிகள் ஆடியுள்ளது, அதில் 14 ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்றனர், நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்தனர், ஷாருதுல் தாகூர், விஜய் ஷங்கர், சித்தார்த் கவுல், தீபக் சஹார், கலீல் அகமது மற்றும் க்ரூனல் பாண்டியா ஆகிய ஆறு பேர் டி 20 போட்டிகளில் அறிமுகபடுத்தப்பட்டனர்.
இந்தியாவின் ஐந்து மிக மதிப்பு வாய்ந்த T20I வீரர்களை நாம் பார்க்கலாம்.
#5.யுசுவேந்திர சஹால்:
வலது கை துடுப்பாட்ட வீரர் யூசுவெந்திர சஹால் இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். டி 20 விளையாட்டின் இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்தவர். T20I களில் 6/25 என்ற சிறந்த பந்துவீச்சாளராக உள்ள சஹால் , உலகில் எந்த பேட்டிங் வரிசையையும் திணற வைக்க முடியும்.
28 வயதான இவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகளில் ஒரு விக்கெட் எடுத்தார் 2018 ஆம் ஆண்டில் ஒரு நல்ல துவக்கம் கிடைக்கவில்லை. இருப்பினும், நிதாஸ் டி 20 கோப்பையில் சிறப்பாக விளையாடி ஸ்பின்னர் வடிவத்தை மீண்டும் பெற்றார். 2018 ஆம் ஆண்டில் அவர் 13 ஆட்டங்களில் 18 விக்கெட்டுகளை எடுத்தார்.
#4.கே எல் ராகுல்:
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் KL ராகுல்க்கு மோசமான ஆண்டாக 2018 அமைந்தது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவர் எதிர்பார்த்தபடி ஆடவில்லை. , இந்த ஆண்டு டெஸ்டில் ஒரு சதத்தை மட்டுமே பெற்றார். ஆனால், அவர் டி 20 வடிவத்தில் அற்புதமானவர்.
2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அணியில் இடம் பெற்றிருந்தாலும் அனுபவ தொடக்கவீரர்கள் தவான் மற்றும் ரோகித் சர்மா அணியில் இருந்தமையால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு ஆட்டத்தில் கூட பங்கேற்கவில்லை எனினும் அதன் பின்பு வாய்ப்புகள் கதவை தட்டும் போது அதை சரியாக உபயோகித்து தன் திறமையை வெளிபடுத்தினார்.
அதில் ஒரு சதம் மற்றும் அரைசதம் உள்ளடங்கும். ராகுல் தனது 11 ஆட்டங்களில் 324 ரன் குவித்துள்ளார் .2018 ல்அவருடைய டி20 சராசரி 36.