#3.சிகார் தவான்:
சிகார் தவான் 2018 ஆம் ஆண்டில் அசைக்க முடியாத பார்மில் சிறப்பாக விளையாடினார். 18 ஆட்டங்கள் ஆடி 690 ரன்கள் குவித்துள்ளார் அவருடைய சராசரி 40, இந்த ஆண்டில் மொத்தம் 6 அரைசதங்கள் விளாசியுள்ளார். அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 92. இருப்பினும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அவர் 39 பந்துகளில் விளாசிய 72 ரன்கள் அவருடைய 2018 ன் சிறந்த ஆட்டமாகும்.
2018 ஆம் ஆண்டின் சிறந்த 20 ஓவர் போட்டியின் சிறந்த பேட்ஸ்மேன் வரிசையில் முன்னிலையில் உள்ளார்.
#2.குல்தீப் யாதவ்:
சைனா மேன் பவுலிங் என அழைக்கபடும் இந்தியாவில் முதல் இடது கை லெக் ஸ்பின்னர் இவர், 2018 ஆம் ஆண்டு இவருக்கு சிம்ம சொப்பணமாக அமைந்தது. ஆம், ஆடிய அனைத்து போட்டிகளிலும் தன் பந்துவீச்சின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வெல்ல மிக முக்கிய காரணமாகவும் அமைந்தார், அனைத்து வடிவ போட்டிகளிலும் 5 விக்கெட்டுகளை எடுத்தார். இங்கிலாந்துக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். 2018 ஆம் ஆண்டின் இந்தியாவுக்கு அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் இவர்தான். 9 ஆட்டங்கள் ஆடியுள்ள இவர் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
#1.ரோகித்சர்மா:
2018 ஆம் ஆண்டின் இந்தியாவுக்கான சிறந்த டி20 பேட்ஸ்மேன் இவர்தான்.இந்தியாவுக்கு அதிக ரன் குவித்த வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளார். 18 ஆட்டங்கள் ஆடி 590 ரன் குவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டில் 3 அரைசதம் மற்றும் இரண்டு சதங்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார். 2018 ஆம் ஆண்டில் சிறந்த துவக்கம் கொடுக்கவில்லையெனினும் பல சாதனைகளை முறியடித்து முதலிடத்தில் உள்ளார் ரோகித். இதில் இவர் 2 சதங்களை பூர்த்தி செய்யவில்லை. இருப்பினும் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2 சதங்கள் அடித்தார். இந்த ஆண்டில் அவர் மொத்தம் 31 சிக்சர்கள் விளாசியுள்ளார், ஒரே ஆண்டில் 31 சிக்சர்கள் அடித்த முதல் இந்தியன் என்ற பெருமையையும் பெற்றார்.