2018-ன் டாப் 5 டெஸ்ட் பந்துவீச்சாளர்கள்

Rabada
Rabada

ஆஸ்திரேலியா vs இந்தியா மூன்றாவது டெஸ்ட் போட்டியுடன் இந்த வருட சர்வதேச டெஸ்ட் போட்டிகள் முடிவுக்கு வந்தது. இந்த வாரத்தில் பாக்ஸிங் டே எனப்படும் வருட இறுதி டெஸ்ட் போட்டிகள் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என மூன்று வெவ்வேறு நாடுகளில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றது வருகிறது. இம்மூன்று கிரிக்கெட் அணிகளுக்கு எதிராக பாகிஸ்தான், இலங்கை , இந்தியா என மூன்று நாடுகள் விளையாடின. இதில் பாகிஸ்தான் , இலங்கை அந்நிய மண்ணில் தோல்வியை தழுவின. இந்திய அணி மட்டுமே பாக்ஸிங் டே டெஸ்டில் அந்நிய மண்ணில் வெற்றி பெற்றது.

2018ல் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு மிகவும் அற்புதமாக அமைந்தது. நிறைய புதுமுக வீரர்கள் டாப் கிரிக்கெட் அணிகளில் அறிமுகமாகி அசத்தியுள்ளனர். அத்துடன் அயர்லாந்து , ஆப்கானிஸ்தான் அணிகள் புதிதாக டெஸ்ட் கிரிக்கெட் உலகிற்கு 2018ல் அறிமுகமாகியுள்ளனர். இதுவரை கிரிக்கெட் உலகிற்கு உள்ள மிகப்பெரிய குறை என்றால் அது இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான பகைமையே.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு 2018 மிகவும் மோசமான ஆண்டாகும். ஏனெனில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சிக்கியதால் அந்த அணியின் மிது மிகப்பெரிய அவப்பெயர் உண்டானது.

2018ல் சிறப்பாக செயல்பட்ட 5 டெஸ்ட் பந்துவீச்சாளர்களை பற்றி நாம் இங்கு காண்போம்.

#5.முகமது ஷமி - 12 போட்டிகளில் 42 விக்கெட்டுகள்

Mohammed shami
Mohammed shami

முகமது ஷமி ஒரு சிறந்த லைன் லென்த் வேகப்பந்து வீச்சாளர். முகமது ஷமி தனது சிறப்பான பந்துவீச்சிற்கு கடினமாக உழைக்கும் திறமை உடையவர். இவரது ஷார்ட் வேகப்பந்துவீச்சு பேட்ஸ்மேன்களை திகைக்க வைக்கும் வகையில் இருக்கும்.

முகமது ஷமி-க்கு இடையில் சொந்த பிரச்சினை காரணமாக சற்று மனவருத்தத்தில் இருந்தார். இருந்தாலும் அனைத்தையும் தகர்த்தெறிந்து தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முழு கவனத்தையும் செலுத்தி சிறப்பாக செயல்பட்டார். இந்த வருடத்தில் அந்நிய மண்ணில் தனது 100 வது விக்கெட்டையும் வீழ்த்தினார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய முகமது ஷமி தற்போது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக பூம்ரா மற்றும் இஷாந்த் ஷர்மா வுடன் சேர்ந்து திகழ்கிறார்.

2018ல் ஷமி மொத்தமாக 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 26.97 சராசரியுடன் 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

#4.ஜாஸ்பிரிட் பூம்ரா- 9 போட்டிகளில் 48 விக்கெட்டுகள்

Bumrah
Bumrah

பூம்ராவிற்கு இந்திய டெஸ்ட் அணியில் ஒரு சிறந்த ஆண்டாக அமைந்தது. இவர் 2016ல் கிரிக்கெட் உலகிற்கு அறிமுகமானார். ஆனால் டெஸ்ட் அணியில் பூம்ரா 2018ல் தான் அறிமுகமானார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில்தான் பூம்ரா அறிமுகமானார்.

பூம்ரா-விற்கு தென்னாப்பிரிக்கா-வில் அளிக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்தி டெஸ்ட் அணியில் ஒரு நிரந்தர இடம் பிடித்தார். வேகப்பந்து வீச்சிற்கு சாதகமான ஆடுகளங்களில் இவரது பந்துவீச்சு எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டும் வகையில் இருக்கும். இந்திய அணி தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு டெஸ்ட் தொடர்களிலும் தோல்வியை தழுவினாலும் பூம்ரா தனது சீரான பந்துவீச்சை வெளிபடுத்த தவறவில்லை. ஆஸ்திரேலியாவில் பூம்ராவின் பந்துவீச்சு மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது.

பூம்ரா 2018ல் 9 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 21.02 சராசரியுடன் 48 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

#3.நாதன் லயன் - 10 போட்டிகளில் 49 விக்கெட்டுகள்

Nathan Lyon
Nathan Lyon

நாதன் லயன் ஒரு சிறந்த ஆஸ்திரேலிய ஆஃப் ஸ்பின்னர் ஆவார். ஆரம்பத்தில் இவருக்கு பந்துவீச்சு சரியாக அமையவில்லை என்றாலும் பின்னர் தன்னை மேலும் மெருகேற்றி தற்போது ஆஸ்திரேலிய அணியின் சிறந்த டெஸ்ட் சுழற்பந்து வீச்சாளராக திகழ்கிறார் நாதன் லயன். 2018லும் இவரது பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது.

2018ல் ஆஸ்திரேலிய அணியில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார் நாதன் லயன். இவர் 2018ல் அற்புதமாக பந்துவீசி நிறைய சாதனைகளை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் முதலில் அறிமுகமாகும் போது இவரது பந்து வீச்சு சீராக இருக்காது ஆனால் தற்போது முற்றிலும் மாறி சீரான பந்துவீச்சாளனாக டெஸ்ட் அணியில் திகழ்கிறார்.

82 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ள நாதன் லயன் தற்போது ஆஸ்திரேலிய அணியின் சிறந்த அனுபவ வீரராக உள்ளார். கடினமான காலங்களில் இவரது பந்துவீச்சு ஆஸ்திரேலிய அணிக்கு சிறிது ஆறுதல் தரும் விதமாக இருந்தது.

நாதன் லயன் 2018ல் 10 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டு 34.02 சராசரியுடன் 49 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

#2.தில்ருவான் பெரரா - 11 போட்டிகளில் 50 விக்கெட்டுகள்

Dilurwa perera
Dilurwa perera

2018ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு மோசமான ஆண்டாக இருந்தாலும் தில்ருவான் பெரரா-வின் பந்துவீச்சு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இருந்தது. இவர் 2013ல் டெஸ்ட் கிரிக்கெட்-டில் அறிமுகமானார். தில்ருவான் பெரரா , 2018ல் ஓய்வு பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ரெங்னா ஹெராத் -வுடன் இரண்டாவது சுழற் பந்து வீச்சாளராக டெஸ்ட் அணியில் செயல்பட்டார்.

ஹெராத் ஓய்விற்குப் பிறகு இலங்கை டெஸ்ட் அணியின் லெக் ஸ்பின் பொறுப்பினை தன்வசமாக்கினார். அத்துடன் 2018ல் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டார். இலங்கை அணி தடுமாறிய போது இவரது பந்துவீச்சு இலங்கை அணிக்கு பலமாக அமைந்தது. 36 வயதான இவர் நான்காவது இலங்கை பந்துவீச்சாளராக 150 டெஸ்ட் விக்கெட் மைல்கல்லை எட்டியுள்ளார்.

இவர் 2018ல் 11 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டு 29.32 சராசரியுடன் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

#1.காகிஷோ ரபாடா -10 போட்டிகளில் 52 விக்கெட்டுகள்

Rabada
Rabada

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 1 பௌலராக காகிஷோ ரபாடா தற்போது திகழ்கிறார். அத்துடன் 2018ல் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையையும் பெற்றார். ரபாடா மற்றும் வெர்னன் பிலாந்தர் இருவரும் சேர்ந்து தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியில் சிறப்பாக செயல்படுகின்றனர். மோர்னே மார்கல் ஓய்வு மற்றும் ஸ்டெயின் காயத்தினால் ஓய்வு ஆகிய காரணங்களால் தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியின் வேகப்பந்து வீச்சு பொறுப்பு 23 வயதான ரபாடா வசம் வந்தது.

ரபாடா தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளராக டெஸ்ட், ஓடிஐ , டி20 என மூன்ளு கிரிக்கெட்- லும் அசத்தினார்.இளம் பந்துவீச்சாளரான இவர் தென்னாப்பிரிக்க அணியின் மிகப்பெரிய அங்கமாக 2018ல் திகழ்ந்துள்ளார். 2018ல் ரபாடா 10 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டு 20.07 சராசரியுடன் 52 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

எழுத்து : விஷால் ராமன்

மொழியாக்கம்: சதீஸ்குமார்

Quick Links

Edited by Fambeat Tamil
Sportskeeda logo
Close menu
WWE
WWE
NBA
NBA
NFL
NFL
MMA
MMA
Tennis
Tennis
NHL
NHL
Golf
Golf
MLB
MLB
Soccer
Soccer
F1
F1
WNBA
WNBA
More
More
bell-icon Manage notifications