#3.நாதன் லயன் - 10 போட்டிகளில் 49 விக்கெட்டுகள்
நாதன் லயன் ஒரு சிறந்த ஆஸ்திரேலிய ஆஃப் ஸ்பின்னர் ஆவார். ஆரம்பத்தில் இவருக்கு பந்துவீச்சு சரியாக அமையவில்லை என்றாலும் பின்னர் தன்னை மேலும் மெருகேற்றி தற்போது ஆஸ்திரேலிய அணியின் சிறந்த டெஸ்ட் சுழற்பந்து வீச்சாளராக திகழ்கிறார் நாதன் லயன். 2018லும் இவரது பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது.
2018ல் ஆஸ்திரேலிய அணியில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார் நாதன் லயன். இவர் 2018ல் அற்புதமாக பந்துவீசி நிறைய சாதனைகளை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் முதலில் அறிமுகமாகும் போது இவரது பந்து வீச்சு சீராக இருக்காது ஆனால் தற்போது முற்றிலும் மாறி சீரான பந்துவீச்சாளனாக டெஸ்ட் அணியில் திகழ்கிறார்.
82 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ள நாதன் லயன் தற்போது ஆஸ்திரேலிய அணியின் சிறந்த அனுபவ வீரராக உள்ளார். கடினமான காலங்களில் இவரது பந்துவீச்சு ஆஸ்திரேலிய அணிக்கு சிறிது ஆறுதல் தரும் விதமாக இருந்தது.
நாதன் லயன் 2018ல் 10 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டு 34.02 சராசரியுடன் 49 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
#2.தில்ருவான் பெரரா - 11 போட்டிகளில் 50 விக்கெட்டுகள்
2018ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு மோசமான ஆண்டாக இருந்தாலும் தில்ருவான் பெரரா-வின் பந்துவீச்சு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இருந்தது. இவர் 2013ல் டெஸ்ட் கிரிக்கெட்-டில் அறிமுகமானார். தில்ருவான் பெரரா , 2018ல் ஓய்வு பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ரெங்னா ஹெராத் -வுடன் இரண்டாவது சுழற் பந்து வீச்சாளராக டெஸ்ட் அணியில் செயல்பட்டார்.
ஹெராத் ஓய்விற்குப் பிறகு இலங்கை டெஸ்ட் அணியின் லெக் ஸ்பின் பொறுப்பினை தன்வசமாக்கினார். அத்துடன் 2018ல் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டார். இலங்கை அணி தடுமாறிய போது இவரது பந்துவீச்சு இலங்கை அணிக்கு பலமாக அமைந்தது. 36 வயதான இவர் நான்காவது இலங்கை பந்துவீச்சாளராக 150 டெஸ்ட் விக்கெட் மைல்கல்லை எட்டியுள்ளார்.
இவர் 2018ல் 11 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டு 29.32 சராசரியுடன் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
#1.காகிஷோ ரபாடா -10 போட்டிகளில் 52 விக்கெட்டுகள்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 1 பௌலராக காகிஷோ ரபாடா தற்போது திகழ்கிறார். அத்துடன் 2018ல் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையையும் பெற்றார். ரபாடா மற்றும் வெர்னன் பிலாந்தர் இருவரும் சேர்ந்து தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியில் சிறப்பாக செயல்படுகின்றனர். மோர்னே மார்கல் ஓய்வு மற்றும் ஸ்டெயின் காயத்தினால் ஓய்வு ஆகிய காரணங்களால் தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியின் வேகப்பந்து வீச்சு பொறுப்பு 23 வயதான ரபாடா வசம் வந்தது.
ரபாடா தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளராக டெஸ்ட், ஓடிஐ , டி20 என மூன்ளு கிரிக்கெட்- லும் அசத்தினார்.இளம் பந்துவீச்சாளரான இவர் தென்னாப்பிரிக்க அணியின் மிகப்பெரிய அங்கமாக 2018ல் திகழ்ந்துள்ளார். 2018ல் ரபாடா 10 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டு 20.07 சராசரியுடன் 52 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
எழுத்து : விஷால் ராமன்
மொழியாக்கம்: சதீஸ்குமார்