150 வருடங்களாக விளையாடி டெஸ்ட் போட்டி இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் தொடராக அமையாமல் வருகின்ற காலங்களில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடராக நடைபெற உள்ளதாக ஐசிசி அறிவிப்பை வெளியிட்டது. இதன் மூலம் டெஸ்ட் தொடர் மீதான மதிப்பு பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கலாம். இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இலங்கை, தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் ஆகிய 9 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் வருகின்ற ஆகஸ்ட் 1 முதல் ஜீன் 2021 வரை ஐசிசி நடத்தவுள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் அவர்களது சொந்த மைதானத்தில் மற்றும் வெளி மைதானத்தில் என 3 முறை டெஸ்ட் தொடர்களை மேற்கொள்ளவுள்ளது. மொத்தம் 27 டெஸ்ட் தொடர்கள் அடங்கிய இந்த சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரில் 71 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளது. இறுதியாக புள்ளிபட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிச்சுற்றை விளையாடும்.
ஒவ்வொரு அணியும் தங்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை எப்போது தொடங்கும் ?
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடரில் தங்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொரை தொடங்குகின்றன. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகள் சுற்றுப்பயணங்களுடன் சாம்பியன்ஷிப் தொடரை தொடங்குகின்றன. இதையடுத்து தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகள் வருகின்ற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள இந்தியாவுக்கான சுற்றுப்பயணம் தொடரிலிருந்து தொடங்குகின்றன். இறுதியாக பாகிஸ்தான் அணி நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடங்குதிறது.

புள்ளிகள் வழங்கும் விதம் :
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் நீளத்தைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு டெஸ்ட் தொடரும் மொத்தம் 120 புள்ளிகளைக் கொண்டிருக்கும். தொடரில் சமநிலை ஏற்பட்டால், அணிகளுக்கு 3: 1 விகிதத்தில் புள்ளிகள் வழங்கப்படும் அதே சமயம் அணிகள் புள்ளிகளைப் பகிர்ந்து கொள்ளும்.
ஒவ்வொரு அணியும் விளையாட வேண்டிய மொத்த போட்டிகள் எண்ணிக்கை :
இங்கிலாந்து - 22, ஆஸ்திரேலியா - 19, இந்தியா - 18, நியூசீலாந்து -14, மேற்கிந்திய தீவுகள் - 15, வங்கதேசம் - 14, தென்னாப்பிரிக்கா -16, இலங்கை மற்றும் பாகிஸ்தான் - 13 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.

ஒவ்வொரு அணியும் எதிர்கொள்ளாத இரண்டு அணிகள் :
ஒவ்வொரு அணியும் ஆறு எதிர்ப்புகளுக்கு எதிராக விளையாடவுள்ளது. இதன் விளைவாக ஒவ்வொரு அணியும் மற்ற இரண்டு அணிகளுக்கு எதிராக விளையாடாது. அது எந்தெந்த அணிகள் என்று தற்போது பார்ப்போம்.
1. ஆஸ்திரேலியா - இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள்
2. பங்களாதேஷ் - இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா
3. இங்கிலாந்து - பங்களாதேஷ் மற்றும் நியூசீலாந்து
4. இந்தியா - பாகிஸ்தான் மற்றும் இலங்கை
5. நியூசீலாந்து - இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா
6. பாகிஸ்தான் - இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்
7. தென்னாப்பிரிக்கா - பங்களாதேஷ் மற்றும் நியூசீலாந்து
8. இலங்கை - ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா
9. மேற்கிந்திய தீவுகள் - ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான்
அடுத்த சீசன் ஜூன் 2021 முதல் ஏப்ரல் 2023 வரை நடைபெறும்.