2019 உலகக்கோப்பை தொடரின் ஆரம்பத்தில் பல போட்டிகள் ஒரு பக்கம் சாதகமாகவே இருந்து வந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக அதற்கு மாறாக அனைத்து போட்டிகளும் இறுதி பந்து வரை பரபரப்பாக சென்றுள்ளது. இங்கிலாந்து தொடர்ந்து இரு போட்டிககளில் தோல்வியை தழுவியும், பாகிஸ்தான் தொடர்ந்து இரு போட்டிகளில் வெற்றி பெற்றும் இவ்வுலகக் கோப்பை தொடரில் திருப்பத்தை கொண்டு வந்துள்ளன.
உலகக்கோப்பை தொடர் தொடங்கும் முன்பு வரை இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் கோப்பையை வெல்ல போராடாது என நினைத்திருந்தனர். ஆனால் அதற்கு மாறாக தற்போது அரையிறுதிக்கு முன்னேற போராடி கொண்டிருக்கும் அணிகளுள் முன்னணி அணிகளாக திகழ்கிறது. சில முக்கியமான போட்டிகள் இருந்தாலும், இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதும் போட்டியை எதிர்பார்த்து உலகெங்கும் உள்ள பல்வேறு ரசிகர்கள் காத்துள்ளனர்.
இங்கிலாந்து இரு தோல்விகளினால் துண்டு போய் உள்ள நிலையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் வென்றாக வேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அணி 2018ல் நடந்த இங்கிலாந்து தொடரில் 2-1 என ஒருநாள் தொடரை இழந்ததற்கு பதிலடி கொடுக்கும் முனைப்போடு உள்ளது.
சர்வதேச தரவரிசையில் முதல் இரு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டியில் பல யுத்தங்களுக்கு பஞ்சமிருக்காது. இரு அணிகளிலும் போட்டிகளின் முடிவை மாற்றக்கூடிய மற்றும் போட்டியின் முடிவை தீர்மானிக்கும் திறமை கொண்ட வீரர்கள் உள்ளனர். நாம் இங்கு போட்டியின் முடிவை தேர்ந்தெடுக்க கூடிய 3 யுத்தங்களைப் பற்றி காண்போம்.
#3 ஜாஸ்பிரிட் பூம்ரா vs ஜானி பேர்ஸ்டோ
கிரிக்கெட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரர் மற்றும் தொடக்க பௌலர்களின் ஆட்டத்திறன் எப்போதுமே மிகச் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஜாஸ்பிரிட் பூம்ரா உலகின் நம்பர் 1 பௌலராக வலம் வருகிறார். இவரது அனல் பறக்கும் பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறாத பேட்ஸ்மேன்கள் என யாருமில்லை. இவரது சிறப்பான வேகம் மட்டுமல்லாது சரியான லென்த் மற்றும் லைனில் பந்துவீச்சை மேற்கொள்வதில் வல்லவராக உள்ளார். அத்துடன் எதிரணி பேட்ஸ்மேன்களின் பேட்டிங்கை கணித்து அதற்கேற்றவாறு சரியாக வீசக் கூடியவர் பூம்ரா.
மறுமுனையில் ஜானி பேர்ஸ்டோ உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ரன் குவிப்பில் ஈடுபடவில்லை. இவரது அதிவேக சதம் மற்றும் அதிரடி பேட்டிங் இவ்வுலகக்கோப்பை தொடரில் வெளிப்படவில்லை. இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரரான இவர் இரு முறை டக் அவுட் ஆகியுள்ளார்.
இந்தியாவிற்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதியில் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்வதே ஜானி பேர்ஸ்டோவின் முதல் குறிக்கோளாக தற்போது உள்ளது. இந்தியாவின் தொடக்க பௌலர் ஜாஸ்பிரிட் பூம்ரா இருக்கும் வரை அந்நிகழ்வு நடக்க வாய்ப்பில்லை. ஜானி பேர்ஸ்டோ ஒரு அதிரடி பேட்ஸ்மேன் என்பதால் ஞாயிறன்று நடைபெறவுள்ள போட்டியில் பூம்ரா மற்றும் பேர் ஸ்டோவிற்கு இடையே கடும் யுத்தம் நிகழ அதிக வாய்ப்புள்ளது.