#2 யுஜ்வேந்திர சகால் vs ஜோ ரூட்
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மிடில் ஓவரில் அணியின் முன்னணி ஆயுதமாக திகழ்கின்றனர். யுஜ்வேந்திர சகால் உலகக்கோப்பை தொடரில் சிறந்த ஆட்டத்திறனை வெளிகொணர்ந்து 5 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். என்ஜ்பேஸ்டன் மைதானம் சற்று சுழலுக்கு உகந்த வகையில் இருக்கும். இதனை நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் நாம் காண முடிந்தது. இதேபோல் தான் இம்மைதனாததில் நிகழும் அடுத்து வரும் போட்டிகளிலும் இருக்கும் என்பதால் யுஜ்வேந்திர சகாலுக்கு சாதகமாக இருக்கும் என்பதை மறந்திடக் கூடாது. இருப்பினும் சகாலுக்கு நெருக்கடியை அளிக்கவல்ல பேட்ஸ்மேன் ஜோ ரூட் என்பதையும் நாம் மறந்திடக் கூடாது. ஜோ ரூட் தற்போது சிறந்த ஆட்டத்திறனுடன் திகழ்ந்து இங்கிலாந்து சார்பில் அதிக ரன்களை 2019 உலகக்கோப்பை தொடரில் குவித்துள்ளார்.
இந்திய அணி 2018ல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது கடைசி இரு ஒருநாள் போட்டிகளிலும் ஜோ ரூட் சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது. அத்துடன் தற்போது உலகக் கோப்பை தொடரிலும் சிறந்த ஆட்டத்திறன் கொண்டு விளங்குகிறார். ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இந்தியாவிற்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தும் இங்கிலாந்து வீரராக ஜோ ரூட் உள்ளார். இவர் இந்தியாவிற்கு எதிராக 17 போட்டிகளில் பங்கேற்று 57.00 சராசரியுடன் 684 ரன்களை விளாசியுள்ளார்.
யுஜ்வேந்திர சகால் ஒரு நுணுக்கமான சுழற்பந்து வீச்சாளர். வெவ்வேறு கோணங்களில் பந்துவீச்சை மேற்கொண்டு பேட்ஸ்மேன்களை தடுமாறச் செய்வதில் வல்லவர். எனவே ஜோ ரூட் மற்றும் யுஜ்வேந்திர சகாலுக்கு இடையேயான யுத்தம் அதிகமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.