#1 ஜோஃப்ரா ஆர்ச்சர் vs விராட் கோலி
ஜோஃப்ரா ஆர்ச்சரிடம், "நீங்கள் விக்கெட் வீழ்த்த அதிகம் விரும்பிய வீரர் யார் என்று கேள்வி எழுப்பிய போது அவர் உடனே "விராட் கோலி" என்று பதிலளித்தார்." ஞாயிறன்று நடைபெறவுள்ள இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதும் போட்டியில் கண்டிப்பாக இவர்களுக்கு இடையே கடும் யுத்தம் நிகழும். ஜோஃப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து அணியின் X-காரணியாக உள்ளார். அவரது வேகப்பந்து வீச்சுக்கு இங்கிலாந்து மைதானங்கள் மிகுந்த துணைபுரிகின்றன.
மேலும் ஆர்ச்சர் இவ்வுலக கோப்பை தொடரில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். நட்சத்திர பேட்டிங் வரிசையை தன்வசம் வைத்துள்ள இந்திய அணிக்கு இவர் கடும் நெருக்கடியை அளிக்க இங்கிலாந்தின் முன்னணி ஆயுதமாக இவர் இருப்பார்.
மறுமுனையில் விராட் கோலி தற்போது சிறந்த ஆட்டத்திறனுடன் திகழ்கிறார். விராட் கோலி உலகக்கோப்பையில் தொடர்ந்து 4 சதங்களை குவித்துள்ளார். இரு நட்சத்திர வீரர்களுமே தற்போது சிறந்த ஆட்டத்திறனின் உச்சத்தில் உள்ளனர். இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் விராட் கோலி மற்றும் ஆர்ச்சருக்கு இடையே நிகழ உள்ள யுத்தத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.
இந்தியா கிட்டத்தட்ட அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டது. ஆனால் இங்கிலாந்து மீதமுள்ள இரு போட்டிகளிலும் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும். ஆர்ச்சர் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை கொண்டு வந்து அணியின் வெற்றிக்காக பாடுபடுவார்.